Pandian stores 2 serial: மாற்றி கடத்திய கடத்தல் கும்பல்.. மீனா ராஜிக்கு தெரிய வந்த உண்மை!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ராஜி மற்றும் மீனாவின் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. சரவணன் திருமணத்தை நிறுத்தி, பாண்டியன் குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கிறார் குமரன். இதையொட்டி மணமகள் தங்கமயிலை கடத்த தன்னுடைய நண்பர்களை மண்டபத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
ஆனால் மணமகள் அறையில் ராஜி மற்றும் மீனா இருவரும் தூங்கிக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவர் தான் மணமகள் என்று நினைத்து அவர்கள் இருவரையும் கடத்துகின்றனர் குமரன் கோஷ்டியினர். இந்த விஷயம் தெரியவர, தன்னுடைய நண்பர்களை குமரன் அடித்து உதைக்கிறார். தொடர்ந்து ராஜி மற்றும் மீனா இருவரையும் மீண்டும் அழைத்துச் சென்று மண்டபத்திலேயே விடுமாறு கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோட், மீனா மற்றும் ராஜியை கடத்திய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் ரிசப்ஷன் நிறைவடைந்து குடும்பத்தினர் அனைவரும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் குமரன், மணப்பெண்ணை கடத்தி இந்த திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்.
குமரனின் சதித்திட்டம்: தன்னுடைய பெயர் இதில் வெளிவரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் குமரன், தன்னுடைய நண்பர்களை இந்த கடத்தலுக்காக மண்டபத்திற்கு அனுப்பி வைக்கிறார். வேறு இடம் இல்லாததால் மணமகள் அறையில் சென்று ராஜி மற்றும் மீனா இருவரும் படுத்து உறங்குகின்றனர். இதையடுத்து மணமகள் அறையில் இரு பெண்கள் தூங்குவதை பார்க்கும் குமரனின் நண்பர்கள் இருவரையும் கடத்திக் கொண்டு வந்து ஒரு இடத்தில் அவர்களை அடைத்து வைக்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் குமரன், கடத்தியது தங்கமயிலை இல்லை என்பதையும் ராஜி, மீனாவை கடத்தியுள்ளதை தெரிந்துக் கொள்கிறார்.

மிரட்டும் ராஜி -மீனா: இதனிடையே, மீனா மற்றும் ராஜி இருவரும் கடத்தியவர்களை மிரட்டும் வகையில் பேசுகின்றனர். தான் கவர்மெண்ட் ஊழியர் என்றும் தன்னை கடத்தினால் எத்தகைய விளைவுகள் வரும் என்று தெரியுமா என்றும் மீனா எச்சரிக்கிறார். இதேபோல தன்னுடைய அப்பா, சித்தப்பா மற்றும் அண்ணன் என அனைவரும் இந்த ஊரிலேயே பெரிய ஆட்கள் என்றும் தன்னிடம் பேசவில்லை என்றாலும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னிலையில் வந்து நிற்பார்கள் என்று ராஜியும் தன்னுடைய பங்கிற்கு மிரட்டுகிறார். இதையெல்லாம் கேட்கும் குமரன், அங்கிருந்து வெளியே வந்து தன்னுடைய நண்பர்களை அடித்து துவைக்கிறார்.
புதிய பிரமோ வெளியீடு: அவர்களை நம்பியதற்கு நல்ல பலன் கிடைத்ததாகவும் குமரன் ஆத்திரத்துடன் கூறுகிறார். இந்நிலையில் மணப்பெண்ணை மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள மற்றவர்களை கடத்தினாலும் திருமணம் நின்றுவிடும் என்று குமரனின் நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் மீண்டும் மண்டபத்திலேயே கொண்டு சென்று விடுமாறு குமரன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே தற்போது வெளியாகி உள்ள இந்த சீரியலின் பிரமோவில் மீனா மற்றும் ராஜியை கடத்தல்காரர்கள் கட்டவிழ்த்து விடுவதாகவும் உடனே அவர்களை அடிக்கும் மீனா மற்றும் ராஜி அவர்களின் முகமூடியை அகற்றுவதாக காணப்படுகிறது.

தெரியவரும் உண்மை: தொடர்ந்து கடத்தல் கோஷ்டியை மீனா மற்றும் ராஜி இருவரும் இணைந்து அடிப்பதாகவும் வலி பொறுக்காமல் அவர்கள் தாங்கள் அவர்களை கடத்த வரவில்லை என்றும் மணப்பெண்ணை கடத்த வந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் தாங்கள் குமரன் கோஷ்டி என்றும் அவர்கள் இருவரும் கூறுகின்றனர். இதையடுத்து அங்கிருந்து வெளியே வரும் மற்றும் மீனா மற்றும் ராஜி இருவரும் அங்கே இருக்கும் குமரனிடம் இதற்கு பின்னணியில் நீதான் இருக்கிறாயா, உன்னை ஜெயிலுக்கு போக வைக்கிறோம் பார் என்று சவால் விடுவதாகவும் காணப்பட்டது. இருவரும் கடத்தப்பட்ட சூழலில் கோமதி அவர்கள் இருவரையும் தேடி பதற்றம் அடைவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











