Pandian stores 2 serial: தாறுமாறாக புகைப்படங்களை அனுப்பிய தங்கமயில்.. பாண்டியனை கலாய்த்த மீனா -ராஜி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகள் காணப்பட்டன. சென்னைக்கு ஹனிமூனுக்கு சென்ற சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் அடுத்தடுத்த புகைப்படங்களாக எடுத்து தள்ளுகின்றனர். இதனிடையே குடும்பத்தினருக்கு காலை வணக்கம் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக தானும் சரவணனும் பர்சனலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை குரூப்பில் தட்டி விடுகிறார் தங்கமயில்.

மொத்தமாக 27 புகைப்படங்களை தங்கமயில் அனுப்பிவிட, அவற்றை பார்க்கும் குடும்பத்தினர் அனைவரும் முகம் சுழிப்பதாக காணப்பட்டது. பாண்டியனும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு, மொபைலை தூக்கி தூர வைத்து விடுகிறார். இதனிடையே, அவரை மீனா மற்றும் ராஜி இருவரும் கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் கலகலப்பாகவும் அதே நேரத்தில் பாண்டியனை நெளிய செய்யும் சம்பவங்கள் நிறைந்ததாகவும் காணப்பட்டது. சென்னைக்கு ஹனிமூன் சென்றுள்ள சரவணன் மற்றும் தங்கமயில் தம்பதி, தொடர்ந்து ஹனிமூன் போட்டோஸ் என்ற குரூப்பை துவங்கி அதில் அடுத்தடுத்த போட்டோஸ்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலையில் காலை வணக்கம் மெசேஜ் அனுப்பும் தங்கமயில் தவறுதலாக சரவணனுடன் பர்சனலாக எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் குரூப்பில் அனுப்பி விடுகிறார்.

தங்கமயில் அனுப்பிய போட்டோஸ்: மொத்தம் தங்கமயில் அனுப்பும் 27 புகைப்படங்களையும் ஒரே நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கின்றனர். அனைத்துமே தாறுமாறாக இருக்கும் நிலையில் அனைவருமே முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. கல்யாணமாகாத அரசி உள்ளிட்ட அனைவருமே இந்த புகைப்படங்களை பார்க்கின்றனர். இதை பார்க்கும் கோமதி, அவர்கள் பர்சனலாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் மொபைலில் வைத்துக் கொள்ள வேண்டிய தானே அதை எதற்காக குரூப்பில் அனுப்பி அனைவரையும் பார்க்க செய்கிறாள் தங்கமயில் என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து அவருக்கு தான் புத்தி இல்லை என்றால் சரவணனும் ஏன் இப்படி இருக்கிறான் என்றும் கேள்வி கேட்கிறார்.

பாண்டியனை கலாய்த்த மீனா -ராஜி: இதனிடையே பாண்டியனை கலாய்க்கும் விதமாக மீனா மற்றும் ராஜி இருவரும் வந்து அவரிடம் புகைப்படங்களை பார்த்தாரா என்பது குறித்து அடுத்தடுத்த கேள்விகளை கேட்கின்றனர். அவர் தான் புகைப்படங்களை எல்லாம் பார்க்கவில்லை எனக்கு ஏகப்பட்ட ஜோலி இருக்கிறது என்று சமாளிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். தான் சென்னைக்கு சென்ற நிலையில் அங்கிருந்து அனுப்பிய ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதை சுட்டிக்காட்டுகிறார் மீனா. இதனிடையே செந்தில் மற்றும் கதிர் இருவரும் இந்த புகைப்படங்களை எல்லாம் ஏன் அனுப்பினார் என்று சரவணனுக்கு கால் செய்து கேட்கின்றனர்.

தடுமாறும் பாண்டியன்: இந்நிலையில் புகைப்படங்களை ஓபன் செய்து பார்க்கும் சரவணன் மிகுந்த கடுப்பாகிறார். குட் மார்னிங் மெசேஜ் மட்டும் தான் அனுப்பினேன் என்றும் இந்த புகைப்படங்கள் எல்லாம் தவறுதலாக சென்று விட்டதாக கூறுகிறார் தங்கமயில். தொடர்ந்து அந்த புகைப்படங்களை டெலிட் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பாண்டியன், ராஜி, மீனா மற்றும் பழனிவேல் முன்னிலையில் தடுமாறுவதாக காணப்படுகிறது. இந்நிலையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த சரவணன், தற்போது காதல் மன்னனாக மாறிவிட்டதாக பழனிவேல் கலாய்ப்பதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X