Pandian stores 2 serial: குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் பெருமையாக நடைபோட்ட பாண்டியன்.. அடிதூள்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து அவரது குலதெய்வ கோயிலுக்கு செல்வதாக காணப்படுகிறது. இரண்டு பெரிய கார்களில் குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்கு செல்கின்றனர்.

இந்த பயணத்தின் போது நடக்கும் சுவாரசியங்களை இயக்குநர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வையும் பயணக் கொண்டாட்டத்தையும் நினைவுப்படுத்தும்வகையில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இவை ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தன.

television pandian stores 2 serial vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கட்டி போடும் வகையில் கலகலப்பாகவும் அதே நேரத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும் அமைந்திருந்தது. சிறுவயதிலேயே தன்னுடைய அம்மா அப்பாவை இழந்து அனாதை ஆக்கப்பட்ட பாண்டியன், தன்னுடைய சிறுவயதில் அதிகமான அவமானங்களை சந்தித்து சிறிய சிறிய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் கோமதியை காதலித்து திருமணம் செய்கிறார்.

பாண்டியன் மற்றும் மகன்கள்: இதனால் கோமதியின் அண்ணன்களின் வெறுப்பையும் சம்பாதித்து அதிலேயே நடைபோட்டு தன்னை சிறப்பான மற்றும் வெற்றிகரமான வியாபாரியாக மாற்றிக் கொண்டுள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் கணக்கு பார்க்கும் பாண்டியன், அதை தன்னுடைய மகன்களிடமும் பிரயோகிக்கும் நிலையில் சில அசௌகரியங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. ஆனாலும் தன்னுடைய மனைவி கோமதி தன்னை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் நிலையில் பிள்ளைகளும் பாண்டியனுக்கு ஒரு பிரச்சினை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது.

பாண்டியனின் குலதெய்வம்: அதேபோல வீட்டுக்கு வந்த மருமகள்களும் தன்னுடைய மாமனார் மாமியாரை மிகச் சிறப்பாக பார்க்கின்றனர். அன்பை வெளிப்படுத்த தெரியாத போதிலும் அதை அவர்கள் உணரும்வகையில் பாண்டியன் நடந்து கொள்கிறார். கடந்த சில தினங்களாக பொங்கல் கொண்டாட்டங்களை காட்சிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினம், பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பாண்டியனின் குலதெய்வ கோயிலுக்கு செல்வதாக காணப்படுகிறது. சிறுவயதில் இருந்தே அவரது குலதெய்வம் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்த பாண்டியன் திடீரென தன்னுடைய பெரியம்மா பெண்ணை வழியில் சந்திப்பதாகவும் அவர் மூலம் தன்னுடைய குலதெய்வ கோயிலில் திருவிழா நடப்பதாக தெரிந்து கொண்டு மறுநாளே குடும்பத்துடன் அங்கு செல்வதாகவும் அடுத்தடுத்து காணப்படுகிறது.

television pandian stores 2 serial vijay tv

கெத்தாக நடைபோடும் பாண்டியன்: இரண்டு கார்களில் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும் நிலையில் வழிநெடுகிலும் சின்ன சின்ன சுவாரசியங்களை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று இறங்கும் பாண்டியன், மிகவும் உற்சாகமான மனநிலையுடன் அங்கு தன்னுடைய அக்காவிற்கு தன்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். மேலும் காரை முன்னதாகவே நிறுத்திவிட்டு குடும்பத்துடன் நடந்து செல்லும் கெத்தையும் அனுபவிக்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X