Pandian stores 2 serial: மீனாவுடன் சென்னை பீச்சில் செந்தில் கொண்டாட்டம்.. ஆனாலும் நிம்மதி இல்லையே!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பாக காணப்பட்டது. இன்றைய எபிசோடில் சென்னையில் செந்தில் மற்றும் மீனா இருவரும் மதியத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு பீச், ஷாப்பிங், கோயில் என அடுத்தடுத்து திட்டமிடுகின்றனர்.
ஆனால் பாண்டியன் கொடுத்த வேலைகளை செய்து கொண்டிருக்கும் செந்தில் மாலை 5 மணி வரை அந்த வேலைகளில் இருக்கிறார். இந்நிலையில் மதியம் தன்னுடைய ட்ரெயினிங்கை முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பும் மீனா செந்திலுக்காக காத்திருப்பதாக காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் செந்தில் மற்றும் மீனா சென்னையில் இருக்கும் காட்சிகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. சென்னையில் சந்திக்க வேண்டிய வியாபாரியை சந்தித்து அவரிடம் இருந்து சரக்குகளை குன்னக்குடிக்கு அனுப்பி வைக்கிறார் செந்தில். ஆனால் இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது அந்த வியாபாரி வேறு வேலையாக வெளியில் சென்று விட்டதால் அவருக்கு பணம் கொடுக்க முடியாமல் காத்திருக்கிறார்.
நெருக்கடியில் செந்தில்: தொடர்ந்து தன்னுடைய அப்பாவிடம் கால் செய்து, இதுகுறித்து கேட்டு ஆன்லைனில் அனுப்பி விடலாமா என்று செந்தில் கேட்கிறார். ஆனால் பாண்டியனோ எவ்வளவு நேரம் ஆனாலும் வெயிட் செய்து பணத்தை கையில் கொடுத்து விட்டு வருமாறு கூறுகிறார். இதனிடையே, அந்த வியாபாரி செந்திலுக்கு கால் செய்து, தான் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறுகிறார். மதியமே தன்னுடைய ட்ரெயினிங்கை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமில் செந்திலுக்காக காத்திருக்கிறார் மீனா. இதையடுத்து மாலை ஹோட்டல் ரூமுக்கு திரும்புகிறார் செந்தில். தொடர்ந்து கோபத்துடன் காணப்படும் மீனாவை சமாதானப்படுத்துகிறார்.
பீச்சுக்கு சென்ற செந்தில் -மீனா: ஊருக்கு கிளம்ப இன்னும் 3 மணி நேரம் இருப்பதாகவும் தாங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் பீச்சுக்கு மட்டுமாவது போய் வரலாம் என்று கூறுகிறார் செந்தில். இதையடுத்து மீனா மற்றும் செந்தில் பீச்சிற்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர். ஒரு கட்டத்தில் மீனா கேட்கும் ஐஸ்கிரீமை வாங்கி வந்து அவரிடம் ப்ரபோஸ் செய்வது போல கொடுத்து கவர்கிறார் செந்தில். இதனால் மீனா மிகவும் உற்சாகமாக, சந்தோஷமாக காணப்படுகிறார். ஆனால் செந்தில் திக் திக் என்ற மனநிலையிலேயே காணப்படுகிறார். அவருடைய அப்பா தொடர்ந்து செந்திலுக்கு கால் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கால்களை அட்டெண்ட் செய்யாமல் கட் செய்கிறார்.
செந்தில் -மீனா புகைப்படம்: ஒரு கட்டத்தில் தன்னுடைய போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். இதனால் அங்கிருந்து தொடர்ந்து கால் செய்து அந்த வியாபாரிக்கு செந்தில் பணத்தை கொடுத்தாரா என்று கேட்க நினைக்கும் பாண்டியன், மிகுந்த கோபத்துடன் பழனிவேலிடம் சத்தம் போடுகிறார். இந்நிலையில் மீனா தான் செந்திலுடன் பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராஜிக்கு அனுப்புகிறார். இதை பார்க்கும் ராஜி தன்னுடைய மாமியார் கோமதி, மற்றும் அரசிக்கு இந்த புகைப்படங்களை காட்டி சந்தோஷப்படுகிறார். இந்நிலையில் அங்கு வரும் தங்கமயில் அந்த புகைப்படங்களை பார்த்து நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடு காணப்பட்டது.
பாண்டியன் கோபம்: தன்னுடைய அப்பாவின் சொல் பேச்சை மீறாமல் நடந்து கொள்ளும் செந்தில், சென்னை டிரிப்பில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மூன்று மணி நேரங்களை மட்டுமே இரண்டு நாளில் மீனாவுடன் செலவழிக்கிறார். இந்நிலையில் அந்த வியாபாரிக்கு பணத்தை கொடுத்தாரா என்பது குறித்து தெரிந்து கொள்ளாமல் பாண்டியன் ஆத்திரத்துடன் காணப்படுகிறார். இந்நிலையில் செந்தில் மற்றும் மீனா இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தால், அவர்கள் பாண்டியனின் கோபத்திற்கு உள்ளாக நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











