Pandian stores 2: மறுபடியும் எங்கயாவது ஓடி போய்ட்டாங்களோ.. பாக்கியம் கேள்வி.. வெளுத்து வாங்கிய குழலி
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினம் மணப்பெண்ணுக்கு பதிலாக ராஜி மற்றும் மீனாவை கடத்தி வந்த குமரன், பின்பு விஷயம் தெரிந்து அவர்களை விடுவிக்குமாறு தன்னுடைய நண்பர்களிடம் கூறுகிறார். அவர்களை விடுவிக்கும் கடத்தல் பேர்வழிகள் மீனா மற்றும் ராஜியிடம் மாட்டிக் கொண்டு தாங்கள் குமரவேல் கோஷ்டியினர் என்ற உண்மையையும் மீனா மற்றும் ராஜியை மாற்றி கடத்தியதையும் போட்டு உடைக்கின்றனர்.
இதனால் கோபத்திற்கு உள்ளாகும் ராஜி மற்றும் மீனா வெளியில் இருக்கும் குமரனிடம் சென்று சரமாரியாக திட்டி தீர்க்கின்றனர். குமரனை போலீசில் பிடித்துக் கொடுக்க உள்ளதாகவும் மீனா மற்றும் ராஜி கூறிய சூழலில் இதனால் குமரன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இந்த விஷயம் தன்னுடைய அப்பா மற்றும் சித்தப்பாவிற்கு தெரியுமா என்று ராஜி கேட்க குமரன் முழிக்கிறார். தொடர்ந்து இதை அவர்களிடம் சொல்லட்டுமா என்று ராஜி கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் பரப்பரப்பாக காணப்பட்டது. மணமகள் தங்கமயிலை கடத்த வந்த குமரனின் கேங், மாற்றி மீனா மற்றும் ராஜியை கடத்துகின்றனர். இதை தெரிந்து அவர்கள் இருவரையும் விடுவிக்கும்படி குமரன் கூறுகிறார். அவர்களின் கட்டுக்களை அவிழ்க்க செல்லும் குமரனின் நண்பர்கள், அவர்களிடம் பிடிபட்டு அடி உதைப்படுகின்றனர். தொடர்ந்து அவர்களின் அடையாளம் வெளிப்படுகிறது. இந்தக் கடத்தலுக்கு யார் காரணம் என ராஜியும் மீனாவும் தொடர்ந்து அவர்களை கேட்கின்றனர்.
வெளிப்பட்ட உண்மை: இதையடுத்து அவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப் போவதாக ராஜி -மீனா பயமுறுத்த உண்மையை அவர்கள் கூறுகின்றனர். தாங்கள் தங்கமயிலை கடத்த வந்ததாகவும் குமரனின் கோஷ்டி என்றும் அவர்கள் கூறும் சூழலில் வெளியில் வந்து குமரனை பார்த்து ராஜி மற்றும் மீனா இருவரும் திட்டித் தீர்க்கின்றனர். குமரனை போலீசில் பிடித்துக் கொடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூற, இதனால் குமரன் அதிர்ச்சி அடைகிறார். தான் சரவணன் திருமணத்தை தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குமரன் கூறுகிறார். இந்நிலையில் தனக்கு திருமணம் பிடிக்காததால் தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் இதற்கு பழி வாங்குவதாக தொடர்ந்து குமரன் நடந்துக் கொள்வதாகவும் ராஜி திட்டுகிறார்.
திட்டித் தீர்த்த மீனா -ராஜி: குமரன் தன்னுடைய அண்ணன் என்று நினைத்தால் அவமானமாக இருப்பதாகவும் ராஜி கூறுகிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மிகுந்த சிரமத்திற்கிடையில் ஆட்டோ ஒன்றை பிடித்து மண்டபத்திற்கு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. உடனடியாக நடந்த விஷயங்களை கூற வேண்டாம் என்றும் முதலில் திருமணம் நடைபெறட்டும் என்றும் அதன் பின்பு குமரனை என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கலாம் என்றும் மீனா கூற ராஜி அதற்கு தலையசைக்கிறார். இதனிடையே ராஜி மற்றும் மீனாவை தொடர்ந்து மண்டபம் முழுவதும் கதிர், செந்தில் மற்றும் கோமதி உள்ளிட்டோர் தேடி அலைகின்றனர்.

வெளுத்து வாங்கிய குழலி: அவர்கள் அங்கு இல்லாதது தெரிந்ததும் திருமணம் நடைபெற உள்ள கோயிலுக்கும் சென்று அவர்களை தேடுகின்றனர். அங்கும் இல்லாத சூழலில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு வரும் தங்கமயில் அம்மா பாக்கியம், இருவரும் ஓடி வந்தவர்கள் தானே, அதனால் அதே போல தற்போதும் ஓடிப்போய்விட்டார்களா என்று கேட்கிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதை கேட்கும் குழலி, பாக்கியத்தை துவைத்து எடுக்கிறார். உங்கள் மகளைப்போல அவர்களும் எங்கள் வீட்டிற்கு வாழ வந்தவர்கள் தான் அவர்களை எப்படி நீங்கள் அப்படி கேட்கலாம் என்று பாக்கியத்தை கேள்விகளால் குடைகிறார் குழலி.
பாண்டியன் ஆச்சர்யம்: தொடர்ந்து தன்னுடைய தம்பி மனைவிகளை பாக்கியம் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு என்றும் குழலி கூற இதனால் தர்ம சங்கடத்திற்கு பாண்டியனும் கோமதியும் ஆளாகின்றனர். இந்நிலையில் தான் கூறியது தவறு என்று பாக்கியம் குழலியிடமும் பாண்டியன் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து முன்னதாக ராஜி, மீனாவிடம் சண்டையிட்ட குழலி, தற்போது அவர்களுக்காக குழலி பரிந்து பேசுவது குறித்து பாண்டியன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துகிறார்.


Click it and Unblock the Notifications











