Pandian stores 2: சரவணன் மற்றும் தம்பிகளை கைது செய்த போலீஸ்.. தவிப்பில் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. தன்னுடைய அப்பா பாண்டியனை அடித்த குமரனை, தேடி கண்டுபிடித்து சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் அடித்து துவைக்கின்றனர்.
இதையடுத்து இவர்களை சக்திவேல் வெட்டப் பாய்கிறார். ஆனால் முத்துவேல் சிறப்பாக காய் நகர்த்தி, போலீசில் புகார் அளித்து அவர்களை கைது செய்ய வைக்கிறார். இதனால் சரவணனின் திருமணம் பாதிக்கப்படும் என்று அவர் கூறுகிறார். அவர்களை மீட்கும் முயற்சியில் பாண்டியன், பழனிவேல் உள்ளிட்டவர்கள் ஈடுபடுகின்றனர். குழலியின் கணவரும் உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்துள்ளது. தன்னுடைய அப்பா பாண்டியனை அடித்த குமரனை பதிலுக்கு அடித்து துவைக்கும் நோக்கத்தில் தேடி கண்டுபிடித்து சரமாரியாக அடிக்கின்றனர் சரவணன், செந்தில் மற்றும் கதிர். வெறும் அடிதடியோடு இந்த செயல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் முத்துவேல் இதை பெரிய பிரச்சினையாக்குகிறார். போலீசில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து சரவணன், செந்தில் மற்றும் கதிரை அவர்கள் கைது செய்கின்றனர்.
பாண்டியன் அதிர்ச்சி: மேலும் எஃப்ஐஆர் போட உள்ளதாகவும் கூறுகின்றனர். அவர்களை மீட்கும் வகையில் அங்கு வரும் பாண்டியன், பழனிவேல் இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்டது முதல் கோமதி தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார், அவருக்கு ராஜி, மீனா, அரசி மற்றும் குழலி ஆகியோர் ஆறுதல் கூறிகின்றனர், இந்நிலையில் குழலியின் கணவர் உதவியுடன் அவர்கள் மூவரையும் வெளியில் கொண்டு வரும் நடவடிக்கையில் பாண்டியன் ஈடுபட்டுள்ளார், இதனிடையே காவல் நிலையத்தில் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் ஆகியோர் பாண்டியனை எதிர்கொண்டு உன் பிள்ளைகளை எப்படி வெளியில் கொண்டு வருகிறாய் என்று பார்க்கிறோம் என்றும் சரவணனின் திருமணம் எப்படி நடக்கிறது பார்க்கலாம் என்றும் சவால் விடுகின்றனர்.
தங்கமயில் குடும்பத்தினர் அதிர்ச்சி: அவர்களிடம் பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று பாண்டியன் ஒதுங்கி போகிறார், இந்நிலையில் மீனா மற்றும் ராஜி இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து தன்னுடைய கணவர்களை பார்த்து பேசுகின்றனர், அவர்கள் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தார்கள் என்று பாண்டியன் முன்னதாக கேள்வி எழுப்பினாலும் அவர்களை செந்தில் மற்றும் கதிரை பார்த்து பேச ஏற்பாடு செய்கிறார், இதனிடையே சரவணன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டது குறித்து தங்கமயில் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது, இதையடுத்து தங்கமயில் மற்றும் அவரது அம்மா இருவரும் கண்ணீருடன் இப்படி நடந்து விட்டதே என்று வருத்தப்படுகின்றனர்,
மீட்கப்படுவாரா கல்யாண மாப்பிள்ளை?: இந்நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் இப்படி நடந்ததால் பெண்ணின் ஜாதகத்தில் பிரச்சனை இருக்கும் என்று பாண்டியன் குடும்பத்தினர் யோசிக்க வாய்ப்புள்ளதாக கூறி தங்கமயில் அம்மா பாக்கியம் மற்றும் அப்பா இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று அவர்களை பார்க்க கிளம்புகின்றனர், இந்த நேரத்தில் அவர்களை போய் பார்ப்பதால் இக்கட்டான நேரத்தில் அவர்களுடன் நின்றது குறித்து பாண்டியன் குடும்பத்தினர் நினைத்துப் பார்ப்பார்கள் என்று பாக்கியம் கூறுகிறார், இவ்வாறாக இன்றைய எபிசோடில் சரவணன், கதிர் மற்றும் செந்தில் கைது மற்றும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன,
மகன்களுக்கு பாண்டியன் ஆறுதல்: முத்துவேல் உள்ளிட்டவர்கள் மிகவும் அழுத்தமான புகார் கொடுத்துள்ளதால் சரவணன் உள்ளிட்ட மூவரையும் வெளியில் விடுவது சாத்தியம் இல்லை என்றும் யாராவது வக்கீலை வைத்து மூவ் செய்துக் கொள்ளுங்கள் என்றும் இன்ஸ்பெக்டர் பாண்டியனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இதனால் பாண்டியன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாலும் தன்னுடைய மகன்களை பார்த்து தான் அவர்களை வெளியில் எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஆறுதல் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











