Pandian stores 2 serial: நான் மட்டும் எப்படி போக முடியும்.. ஹனிமூனுக்கு போக தயங்கும் சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கலகலப்பான விஷயங்கள் பலவற்றை இயக்குநர் கொடுத்துள்ளார். சரவணன் மற்றும் தங்கமயில் இருவரையும் ஹனிமூனுக்கு சென்று வருமாறு பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சரவணன் தயக்கம் காட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தொடர்ந்து ஹனிமூனுக்கு சென்று வர தங்கமயில் சரவணனை நச்சரித்து வந்த நிலையில், அவரது அம்மாவும் பாண்டியனிடம் தொடர்ந்து கேட்டு வந்தார். இதையடுத்து தற்போது பாண்டியன் அவர்கள் இருவரையும் 3 நாட்களுக்கு எங்காவது ஹனிமூன் சென்றுவர கூறியுள்ளார். இதனால் அரேஞ்ச்டு மேரேஜ்தான் சிறந்தது என்பதாக மீனாவும் ராஜியும் ஆதங்கப்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காட்சிகள் அமைந்திருந்தன.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தாங்கள் ரகசியமாக வைக்க நினைத்த விஷயங்கள் மீனா மற்றும் ராஜி மூலம் தெரியவந்ததை செந்தில் மற்றும் கதிர் இருவரும் பேசுவதாக அமைந்துளளது. முன்னதாக கவர்ன்மெண்ட் வேலைக்கு முயற்சிக்கப் போவதாக செந்திலும் ஆக்டிங் டிரைவராக வாரயிறுதி நாட்களில் செயல்பட போவதாக கதிரும் பேசிக் கொண்ட நிலையில், அவர்கள் இதனை ரகசியம் காக்க நினைத்தனர். ஆனால் மீனா மற்றும் ராஜியிடம் அவர்கள் இதுகுறித்து பேசிய நிலையில் அவர்களின் ரகசியம் உடைபடுகிறது.

மீனா -ராஜி ஒற்றுமை: மீனா மற்றும் ராஜி இடையிலான ஒற்றுமையை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, வாரயிறுதி நாட்களிலும் வேலைக்கு செல்ல நினைக்கும் கதிர் குறித்து வருத்தப்படும் ராஜி, வீட்டிற்கு தெரியாமல் ஹோம் டியூஷனுக்கு செல்லவிருப்பதாகவும் கதிரின் பாரத்தை குறைக்கப் போவதாகவும் மீனாவிடம் கூறுகிறார். முன்னதாக டியூஷன் விவகாரத்தால் இருமுறை வீட்டில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் இதை மீனா மறுக்கிறார். ஆனாலும் தன்னுடைய முடிவில் ராஜி மிகவும் உறுதியாக இருப்பதாக இன்றைய எபிசேடில் காணப்பட்டது.

சரவணன் -தங்கமயில் ஹனிமூன்: இதையடுத்து வீட்டிற்கு வரும் பாண்டியன், அனைவரையும் அழைத்து சரவணன் மற்றும் தங்கமயிலை ஹனிமூனுக்கு அனுப்ப உள்ளதாக கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். தங்கமயிலுக்கோ மிகவும் குஷியாகிறது. ஆனால் சரவணன், இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுகிறார். முன்னதாக திருமணம் ஆன தனது தம்பிகள் செந்தில் மற்றும் கதிர் ஹனிமூனுக்கு செல்லாத நிலையில், தான் மட்டும் எப்படி செல்வது என்று அவர் பாண்டியனிடம் கேட்கிறார். ஆனால், முன்னதாக செந்தில் -மீனா தங்களுடன் கொடைக்கானலுக்கு வந்ததாக பாண்டியன் சமாதானம் கூறுகிறார்.

தயக்கத்தில் சரவணன்: இதனிடையே, வெளியில் வரும் சரவணன், செந்தில் உள்ளிட்டவர்களிடம் தனக்கு தனியாக ஹனிமூன் செல்வதற்கு தயக்கமாக இருப்பதாக கூறுகிறார். தன்னுடைய அப்பாவிடம் தம்பிகளையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்குமாறு தான் கேட்கப் போவதாக சரவணன் கூறுகிறார். இதை கேட்கும் செந்தில் மற்றும் கதிர் இருவரும், சரவணன் அநியாயத்திற்க பாசக்காரராக இருப்பதாகவும், இதுகுறித்து பாண்டியனிடம் பேசினால், அவர் சரவணனையும் அனுப்பாமல் விட்டுவிடுவார் என்றும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

கோமதி ஆதங்கம்: இதனிடையே அடுத்த சில தினங்களுக்கான பிரமோவையும் தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பாண்டியனிடம் சரவணனை போலவே செந்தில் மற்றும் கதிர் இருவரையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்க பழனிவேல் கேட்கிறார். ஆனால் அவர்கள் தன்னுடைய பேச்சை மீறி திருமணம் செய்ததாக கூறி மறுக்கிறார் பாண்டியன். இதையடுத்து பாண்டியன் தன்னுடைய மகன்களை சமமாக நடத்துவதில்லை என்றும் அதனால் அவர்களுக்குள் பிரச்சினையை உண்டு செய்வார் என்றும் கோமதியிடம் பழனிவேல் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் வருத்தத்திற்குள்ளாகும் கோமதி, இதுகுறித்து பாண்டியனிடம் சென்று கேட்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X