Pandian stores 2 serial: வெளுத்து வாங்கிய ராஜி.. கண்ணீர் விட்ட தங்கமயில்.. பொசுக்குன்னு தண்ணி வந்துடுதே!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து தங்கமயில் தன்னுடைய ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறார். மீனா மற்றும் செந்தில் இருவரும் சென்னையில் பீச்சுக்கு சென்ற நிலையில் அவர்கள் ராஜிக்கு புகைப்படம் அனுப்பிய விஷயத்தை பாண்டியனிடம் போட்டுக் கொடுக்கிறார். இதனால் பாண்டியன் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கோமதியிடம் கத்திவிட்டு செல்கிறார்.

தன்னிடம் யாருமே வீட்டில் நடக்கும் விஷயங்களை பகிர்வதில்லை என்றும் டியூஷன் விவகாரம் மற்றும் தற்போது செந்திலின் விஷயத்தை அடுத்தடுத்து தங்கமயில் தான் தன்னிடம் கூறியதாகவும் பாண்டியன் கோமதியை பார்த்து திட்டுகிறார். இதையடுத்து டியூஷன் விவகாரத்தை தங்கமயில் தான் பாண்டியனிடம் கூறினார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு கோமதி மற்றும் ராஜி இருவரும் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சினைகளை காட்டுவதாக அமைந்திருந்தது. வீட்டிற்குள் வரும் போதே கோபத்துடன் வருகிறார் பாண்டியன். தொடர்ந்து சென்னையில் இருக்கும் செந்தில் தன்னுடைய கால்களை அட்டெண்ட் செய்யவில்லை என்றும் ஒரு கட்டத்தில் மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆனதாகவும் அவர் கூறுகிறார். இதையடுத்து மீனா ஏதாவது கால் செய்தாரா என்று அவர் கேட்க, மீனா கால் எதுவும் செய்யவில்லை ஆனால் மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று தங்கமயில் போட்டு உடைக்கிறார்.

கோமதி -ராஜி அதிர்ச்சி: இதுகுறித்து பாண்டியன் கேள்வி எழுப்ப மீனா மற்றும் செந்தில் இருவரும் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராஜிக்கு அனுப்பியுள்ளதாக தங்கமயில் பாண்டியனிடம் கூறுகிறார். இதனால் பாண்டியன் மிகப்பெரிய கோபத்துடன் கோமதி, ராஜி என யாருமே வீட்டில் நடப்பதை தன்னிடம் கூறுவதில்லை என்றும் தங்கமயில் தான் தன்னிடம் அனைத்து விஷயங்களையும் கூறுவதாகவும் கத்தி தீர்க்கிறார். முன்னதாக டியூஷன் விவகாரத்தையும் தங்கமயில் தான் தன்னிடம் கூறியதாக அவர் உண்மையை கூற, கோமதி மற்றும் ராஜி இருவரும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

தங்கமயிலை விளாசிய ராஜி: இந்நிலையில் சமையலறையில் கோமதி தங்கமயிலிடம் இது குறித்து கேள்வி எழுப்புகிறார். செந்தில் போனை எடுக்காததால் மாமா பதற்றம் அடைந்ததாகவும் அதை தீர்த்து வைப்பதற்காகவே தான் உண்மையை கூறியதாகவும் தங்கமயில் சமாதானம் கூறுகிறார். ஆனால் ராஜியோ மிகப்பெரிய கடுப்புக்கு உள்ளாகி, நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு எல்லா விஷயத்தையும் முந்திக்கொண்டு சொல்வதால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படுவதாக தங்கமயிலிடம் கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து தங்கமயில் அழத் துவங்குகிறார். தான் கோள் மூட்டி போலவும் குடும்பத்தை கெடுக்க வந்தவள் போலவும் ராஜி தன்னை கேள்வி கேட்பதாக கோமதியிடம் அழுது கொண்டே தங்கமயில் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

சரவணனிடம் பற்ற வைத்த தங்கமயில்: இந்நிலையில் தன்னுடைய ரூமில் சாப்பிடாமல் தங்கமயில் இருக்க அவரை சாப்பிட கூப்பிடுவதற்காக சரவணன் வருகிறார். அந்த நேரத்தில் தங்கமயில் நடந்த விஷயங்களை அவரிடம் சொல்கிறார். கோமதி மற்றும் ராஜி என அனைவரும் தன்னை திட்டுவதாகவும் அவர்கள் அனைவரும் ஒரு கேங்காக இருந்து கொண்டு தன்னை அந்த கேங்கில் சேர்ப்பதில்லை என்றும் தங்கமயில் அடுத்தடுத்து சரவணனிடம் அழுதுக் கொண்டே கூறுகிறார். இது குறித்து அவர்களிடம் கேட்குமாறு தங்கமயில் கூற, இதை எப்படி தான் கேட்க முடியும் என்று சரவணன் நழுவுகிறார். இதையடுத்து மற்றவர்கள் பேசியதுகூட பரவாயில்லை சரவணனின் தம்பி கதிர் மிகக் கோபமாக தன்னிடையே பேசியதாகவும் அவ்வாறு அண்ணியிடம் பேசக்கூடாது என்று சரவணன் கேட்க வேண்டும் என்றும் தங்கமயில் அடுத்தடுத்து மீண்டும் வலியுறுத்துகிறார்.

ராஜியின் தயக்கம்: இதையடுத்து தான் கேட்பதாக சரவணன் கூறிவிட்டு செல்கிறார். இந்நிலையில் பாண்டியனுக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருக்க சாப்பிடுவதற்கு வரும் அவரோ தங்கமயில் சாப்பிடாமல் இருப்பதை கேட்டு அவரை கூப்பிட்டு சாப்பிட வைக்கிறார். இதனால் கோமதி ராஜி மீண்டும் கடுப்பாகின்றனர். இந்நிலையில் கோமதி கூறியதால் தன்னுடைய கணவன் கதிருக்கு பொறியலை வைக்க போகிறார் ராஜி. ஆனால் வைக்காமல் தயங்கியபடி அவர் இருப்பதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது. மாதா மாதம் வீட்டிற்கு 10,000 ரூபாய் கொடுப்பதாக கதிர் பாண்டியனிடம் முன்னதாக கூறிய நிலையில் அதற்கு உதவி செய்வதற்காகவே ராஜி டியூஷன் எடுக்க களமிறங்கினார். ஆனால் தங்கமையிலால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் தற்போது கதிர் எப்படி அந்த பணத்தை கொடுப்பார் என்ற கேள்வியுடன் ராஜி கதிரை பார்ப்பதாக காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X