Pandian stores 2 serial: பாட்டு தெரியாதது ஒரு குற்றமா.. சரவணனுக்கு நோ சொன்ன பெண்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த இயல்பான எபிசோட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து சேனலின் 3வது சீரியலாக இடம்பெற்றுள்ளது. சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன போதிலும் சிறப்பான வகையில் எபிசோட்களை கொடுத்துவருகிறது. இந்த சீரியலின் முதல் சீசனும் இயல்பான கதைக்களத்தால் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்ட சூழலில், இரண்டாவது சீசனும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. இரண்டு சீசன்களும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ள போதிலும் குடும்ப ஒற்றுமையையே மையமாக கொண்டுள்ளது.
சரவணனின் திருமணத்தையொட்டி அடுத்தடுத்த எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சூழலில் இன்றைய தினம் மேட்ரிமோனி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலா என்ற பெண்ணை சரவணன் பார்ப்பதாக காணப்பட்டது. தனியாக சரவணனை சந்தித்து அவரிடம் பேச வேண்டும் என்று அந்தப் பெண் கூறினாலும் இதில் உடன்பாடு இல்லாத சரவணனுடன், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆரஞ்சு கபேவிற்கு செல்கின்றனர். பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் வெளியில் காத்திருக்க, அகிலாவுடன் பேசுவதற்காக சரவணன் தனியாக உள்ளே செல்கிறார். இதையடுத்து நிகழும் சுவாரஸ்யங்களை இன்றைய தினம் எபிசோட் காட்சிப்படுத்தியிருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கி சில மாதங்களிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் 3வது இடத்தில் நிலைப்பெற்றுள்ளது. இந்த சீரியலின் இயல்பான கதைக்களமே சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள் மற்றும் அவர்களது குடும்பம் இவற்றை மையமாக கொண்டு இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலில் அப்பா -மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1: முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனும் ரசிகர்களை கவரும்வகையிலேயே அமைந்திருந்தது. இந்த சீரியலும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான நிலையில், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீசன் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசனும் களைகட்டி வருகிறது. தன்னுடைய மகன்கள், மகள்கள் என அனைவரையும் கட்டுக்கோப்பாக வைத்து வந்த பாண்டியனுக்கு, அடுத்தடுத்து குடும்பத்திற்கு தெரியாமல் நடந்த செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் இடியாக விழுகின்றன.
பாதிப்பில் சரவணன் திருமணம்: இதனால் சரவணனின் திருமணம் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைகின்றனர். சரவணன் திருமணம் நடக்கும்வரையில் தான் காலில் செருப்பு போட மாட்டேன் என சபதம் போடுகிறார் பாண்டியன். சரவணனின் திருமணத்தையொட்டி அடுத்தடுத்து நடக்கும் களேபரங்களை இந்த சீரியல் காட்சிப்படுத்தி வருகிறது. கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரனும் சரவணன் திருமணம் நடக்காமல் இருக்க சதி செய்கின்றனர். இதனிடையே மேட்ரிமோனி மூலம் வந்த பெண்ணை பார்க்க சரவணன் செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
அப்டேட் இல்லாத சரவணன்: சரவணனை தனியாக மீட் செய்ய அந்தப் பெண் கூறும்நிலையில், தனியாக செல்ல சரவணனும் அவரை தனியாக அனுப்ப பாண்டியனும் தயக்கம் காட்டுகின்றனர். இதையடுத்து குடும்பத்துடன் அந்தப் பெண் கூறிய ஆரஞ்சு கபேவிற்கு செல்கின்றனர். வெளியில் நின்றபடி சரவணனை தனியாக உள்ளே அனுப்புகின்றனர். அந்தப் பெண் பிடித்த நடிகர், சமூக வலைதளம், பிடித்த பாட்டு, சமீபத்திய சக்சஸ் பாட்டு என அனைத்தையும் கேட்க, எதிலுமே அப்டேட் இல்லாமல் இருக்கும் சரவணனை அந்தப் பெண், இது தேறாது என்பதாக பார்க்கிறார். இதனிடையே தன்னை பார்க்க சரவணன்,குடும்பத்துடன் வந்ததையறிந்து அந்தப் பெண் எதுவும் கூறாமல் வெளியேறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











