Pandian stores 2 serial: இனிதே நடந்த சரவணன் -தங்கமயில் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் பாக்கியம் -கோமதி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில தினங்களாக சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தையொட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நீண்ட இழுபறிக்கு பின்பு இன்றைய தினம் சரவணன், தங்கமயில் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார்.
முன்னதாக மணப்பெண்ணை கடத்த ஆட்களை குமரன் அனுப்பிய நிலையில், மணப்பெண்ணுக்கு பதிலாக மீனா மற்றும் ராஜியை அவரது கோஷ்டியினர் கடத்துகின்றனர். விஷயம் தெரிந்து மீனா மற்றும் ராஜியை குமரன் விடுவிப்பதாக காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மண்டபத்திற்கு வருவதாகவும் காணப்பட்டது. இதையடுத்து, இன்றைய தினம் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் உற்றார், உறவினர் சூழ இனிதே நடைபெற்று முடிந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட், கல்யாண கலாட்டாக்களுடன் சிறப்பாக அமைந்திருந்தது. நீண்ட நாட்களாக இதோ அதோ என்று இழுபறியில் இருந்த சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் இன்றைய எபிசோடில் இனிதே நடந்தேறியுள்ளது. இந்த திருமணத்தில் குமரன் மூலமாக ஏற்படவிருந்த பிரச்சனை தீர்ந்த நிலையில், அவர் கடத்தி வைத்திருந்த ராஜி மற்றும் மீனா இருவரும் திருமண நேரத்திற்கு முன்னதாகவே மண்டபத்திற்கு வருகின்றனர். தாங்கள் வீட்டிற்கு சென்றிருந்ததாக குடும்பத்தினர் அனைவரையும் நம்ப வைக்கின்றனர்.
குடும்பத்தினரை சமாளித்த ராஜி -மீனா: இந்நிலையில் கதிர் மட்டும் அவர்கள் கூறியதை நம்பாமல் வீட்டுச்சாவி தன்னிடம் இருந்த நிலையில் அவர்கள் எப்படி வீட்டிற்கு சென்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் கதிரையும் வேறு விதமாக ராஜி மற்றும் மீனா இருவரும் சமாளிக்கின்றனர். இந்நிலையில் அனைவரும் கோயிலுக்கு திருமணத்தையொட்டி செல்கின்றனர். அங்கு பல்வேறு கலாட்டாக்களுடன் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் சிறப்பாக நடந்தேறுகிறது. இந்த இடத்திலும் தன்னுடைய மனைவி ராஜிக்கு திருமணத்தை முன்னே நின்று பார்க்கும்படி ஏற்பாடு செய்கிறார் கதிர். இதை பார்த்து மீனா தன்னுடைய மாமியார் கோமதியிடம் நாங்கள் நடத்தி வைத்த திருமணம் சிறப்பாக அமைய உள்ளதாக கூறுகிறார்.
சரவணன் -தங்கமயில் திருமணம்: இதனால் கோமதியும் மகிழ்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர் சூழ சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் சிறப்பாக நடந்தேறுகிறது. இதையடுத்து கோமதி மற்றும் பாக்கியம் இருவரும் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். தொடர்ந்து பெரியவர்களிடம் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஆசீர்வாதம் பெறுகின்றனர். தொடர்ந்து அனைவரும் மண்டபத்திற்கும் வந்து அங்கும் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது உள்ளிட்ட பல சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. திருமணத்தை ஒட்டிய காட்சிகளுடன் இன்றைய எபிசோட் களைகட்டியது.
வெற்றி பெற்ற தங்கமயில்: இதையடுத்து பானையில் மோதிரத்தை போட்டு அதை எடுக்கும் சம்பிரதாயம் நடக்கிறது. முதலில் தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் பானைக்குள் கையை விட்டு மோதிரத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் குழலி மோதிரத்தை போடவே இல்லை என்று பின்பு தெரிய வருகிறது. இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் இந்த கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இதில் தங்கமயில் மோதிரத்தை கைப்பற்றுகிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











