Pandian stores 2: சரவணன் உள்ளிட்டவர்களை காக்க ராஜி அதிரடி.. கடுப்பில் முத்துவேல் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கீழே வழுக்கி விழுந்த தன்னுடைய அம்மாவை காப்பாற்றும் வகையில் ராஜி தன்னுடைய வீட்டிற்குள் சென்ற நிலையில் அங்கு வரும் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் அவரை திட்டி தீர்க்கின்றனர்.

மேலும் குமரன் ராஜியை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார். அடிக்கவும் செய்கிறார். அவரை காப்பாற்றும் வகையில் வந்த பாண்டியன் மீது குமரனின் அடி விழுகிறது. இதனால் பாண்டியன் மகன்கள் சரவணன், கதிர் மற்றும் செந்தில் மூவரும் மிகுந்த ஆத்திரத்துடன் குமரனை பதிலுக்கு அடிப்பதாக காணப்பட்டது. இதையடுத்து குமரன் உள்ளிட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் சரவணன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்கின்றனர். இவ்வாறாக கடந்த சில எபிசோடுகளில் காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 26th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், குடும்ப உறவுகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதியின் மகன்கள் மற்றும் மகள்கள், கோமதியின் அண்ணன்கள் இவர்களை மையப்படுத்தி அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் சீரியலில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

பாண்டியனை அடிக்கும் குமரன்: தன்னுடைய அம்மா வீட்டு வாசலில் வழுக்கிவிழ, அவரை மீட்டு வீட்டிற்குள் கொண்டு விடுகிறார் ராஜி. இதை பார்க்கும் ராஜியின் அண்ணன் அப்பா மற்றும் சித்தப்பா அவரை திட்டுகின்றனர். மேலும் குமரன் ராஜியை வீட்டை விட்டு வெளியில் பிடித்து தள்ளுகிறார். அவரை அடிக்கவும் செய்கிறார். அதை தடுக்க வரும் பாண்டியன் மீது குமரனின் அடி விழுகிறது. இதனால் பாண்டியனின் மகன்கள் சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் ஆத்திரத்துடன் குமரனை தேடிப் பிடித்து அடித்து துவைக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்தாலும் முத்துவேல் கொடுக்கும் ஐடியாவின்படி அவர்கள் மூவர்மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் குமரன்.

குமரனை அடிக்கும் சரவணன் பிரதர்ஸ்: இதையடுத்து சரவணன், செந்தில் மற்றும் கதிரை போலீசார் கைது செய்கின்றனர். எப்ஐஆர் போட உள்ளதாகவும் வழக்கறிஞரை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை செய்யுமாறும் இன்ஸ்பெக்டர் பாண்டியனிடம் கூறுகிறார் இந்நிலையில் அவர்கள் மூவரையும் காப்பாற்றுவதில் ராஜி கையில்தான் உள்ளது என்று வழக்கறிஞர் ஐடியா கொடுக்கிறார். தன்னுடைய அப்பா மற்றும் சித்தப்பா, அண்ணன் மூவர் மீதும் ராஜி கம்ப்ளைன்ட் கொடுத்தால்தான் அவர்கள் கைதை தவிர்க்கும் வகையில் சரவணன் உள்ளிட்டவர்கள்மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவார்கள் என்று ஆலோசனை கூறும் சூழலில் பாண்டியன் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

ராஜி அதிரடி புகார்: ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருக்கும் சூழலில் இது வேலைக்கு ஆகாது என்று அவர் கூறுகிறார். ஆனால் தன்னால் இந்த பிரச்சனை ஏற்பட்ட சூழலில் இதை தானே தீர்க்க முயற்சிப்பதாக கூறும் ராஜி, தன்னுடைய அப்பா, சித்தப்பா மற்றும் அண்ணன் மீது அவர்கள் தன்னை அடித்ததாகவும், தடுக்க வந்த தன்னுடைய மாமனார் பாண்டியனையும் அடித்ததாகவும் புகார் அளிக்கிறார். இதையடுத்து குமரன் கைதாகும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து சக்திவேல் மற்றும் குமரன் மிகுந்த கோபம் அடைகின்றனர். ஆயினும் முத்துவேல் இந்த சூழ்நிலையை அமைதியாக கையாண்டு தாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குகிறார்.

தங்கமயில் குடும்பத்தால் கடுப்பாகும் ராஜி -மீனா: இதனால் சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் வெளியில் வரும் சூழல் ஏற்படுகிறது. முன்னதாக, தங்கமயில் மற்றும் அவரது அம்மா, அப்பா மூவரும் காவல் நிலையத்திற்கு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தங்கமயிலின் அப்பா தனக்கு எம்எல்ஏவை தெரியும் எஸ்பிஐ தெரியும் என்று பலவாறாக பில்டப் கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் இன்ஸ்பெக்டர், அவர்களை வெளியேற்றுகிறார். ஆயினும் காவல் நிலையத்தின் வாசலில் அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதை பார்க்கும் ராஜி மற்றும் மீனாவிற்கு கடுப்பாவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X