Pandian stores 2 serial: எக்குத்தப்பான புகைப்படங்களை அனுப்பிய தங்கமயில்.. வைத்து செய்த மீனா & ராஜி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன. சென்னைக்கு ஹனிமூன் சென்ற சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேமிலி குரூப்பில் தவறுதலாக அனுப்புகிறார் தங்கமயில். இந்தப் புகைப்படங்களை பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் பார்க்கின்றனர்.
இதையடுத்து தங்கமயிலுக்கு கால் செய்து ராஜி மற்றும் மீனா இருவரும் கலாய்க்கின்றனர். இதேபோல சரவணனை செந்தில் மற்றும் கதிர் இருவரும் கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே வடிவு தன்னுடைய நகைகளை யாருக்கு கொடுத்தார் என்பதாக முத்துவேல் அவரது கழுத்தை நெரித்து மிகவும் கேவலமாக பேசுவதாகவும் இந்த எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக தங்கமயில் ஹனிமூனில் தானும் சரவணனும் பர்சனலாக எடுத்துக்கொண்ட அதிகமான புகைப்படங்களை ஃபேமிலி குரூப்பில் அனுப்பி வைக்கிறார். இந்த புகைப்படங்களை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பார்க்கும் நிலையில் ராஜி மற்றும் மீனா இருவரும் இதுகுறித்து பாண்டியனை கலாய்ப்பதாக காணப்பட்டது. அவரும் இந்த விஷயத்தில் இருந்து எஸ்கேப் ஆகி அந்த இடத்தை விட்டு நழுவுவதாகவும் காணப்பட்டது.
தங்கமயிலை கலாய்த்த மீனா -ராஜி: இந்நிலையில் தொடர்ந்து கோமதியிடம் இது குறித்து ராஜி மற்றும் மீனா இருவரும் பேசுகின்றனர். அவரோ இது போன்ற புகைப்படங்களை அனுப்புவது கூட தெரியாத அளவிற்கு தங்கமயில் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து இந்த விஷயத்தில் இருந்து கோமதி சீக்கிரத்தில் வெளிவர மாட்டார் என்று கூறிவிட்டு ராஜி மற்றும் மீனா அங்கிருந்து நகர்கின்றனர். இதனிடையே, மீனா, ராஜி மற்றும் அரசி மூவரும் இணைந்து தங்க மயிலுக்கு கால் செய்து அவரை இந்த புகைப்படங்களுக்காக கலாய்க்கின்றனர். ஒவ்வொரு புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி அது மிகவும் சிறப்பாக இருந்ததாக மீனா மற்றும் ராஜி இருவரும் தங்கமயிலை கலாய்க்கும் நிலையில் அவரோ ஒரு கட்டத்தில் இதை பொறுக்க முடியாமல் காலை கட் செய்கிறார்.
சரவணனை ஓட்டிய தம்பிகள்: இதனிடையே சரவணனுக்கு கதிரும் செந்திலும் இணைந்து கால் செய்கின்றனர். அவர்களோ தன்னுடைய அண்ணனின் ரொமான்ஸ் பக்கத்தை விவரிப்பாக பேசுவதாக காணப்பட்டது. ஒவ்வொரு புகைப்படத்தையும் வைத்து அவரை கலாய்க்கின்றனர். இதனிடையே தன்னுடைய அப்பா இந்த புகைப்படங்களை பார்த்தாரா என்று சரவணன் கேட்க அவர் பார்த்து விட்டதாக கதிர் மற்றும் செந்தில் இருவரும் கூறுகின்றனர். இதனால் சரவணன் மிகுந்த அவமானப்படுகிறார். இந்நிலையில் இதெல்லாம் ஒன்றுமில்லை என்று அவரை தேற்றும் செந்தில் மற்றும் கதிர் அன்றைய தினம் மகாபலிபுரம் டிரிப்பிற்கு திட்டமிட்டபடி சென்று வருமாறு அறிவுறுத்துகின்றனர்.
ராஜிக்கு பாண்டியன் அட்வைஸ்: முன்னதாக தங்கமயிலின் அம்மா பாக்கியம் அவருக்கு கால் செய்து தான் அவரை பாண்டியன் இல்லத்தில் மிகச்சிறப்பாக செட்டில் செய்ய நினைக்கும் நிலையில் இது போன்று புத்தி கெட்ட தனமாக நடந்து கொள்வதாக பாக்கியம் குற்றம் சாட்டி திட்டுகிறார். இதனிடையே ஹோம் டியூஷன் எடுப்பதற்காக ராஜி சாலையில் நடந்து செல்கிறார். அப்போது எதிரில் பாண்டியன் மற்றும் பழனிவேல் இருவரும் வண்டியில் வருகின்றனர். இந்நிலையில் அவர் கோச்சிங் கிளாசிற்கு செல்வதாக நினைத்து பாண்டியன் நன்றாக படிக்குமாறும் அரசிக்கும் அவ்வப்போது விஷயங்களை சொல்லிக் கொடுக்குமாறும் கூறுகிறார்.
கேவலமாக பேசிய முத்துவேல்: இதனிடையே தன்னுடைய வண்டியில் சென்று இறங்கிக் கொள்ளுமாறு பாண்டியன் கூற, தன்னுடைய தோழி வந்து தன்னை பிக்கப் செய்து கொள்வார் என்பதாக ராஜி அதிலிருந்து தப்பிக்கிறார். இதனிடையே தன்னுடைய மனைவி வடிவு தன்னுடைய நகைகளை யாருக்கு கொடுத்தார் என்பது தெரியாமல் முத்துவேல் மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாகிறார். தன்னுடைய மனைவியின் கழுத்தை நெரிக்கும் வகையில் அவர் கோபத்துடன் நகைகளை எவனுக்கு கொடுத்தாய் என்பதாக கேவலமாக பேசுகிறார். இதனால் வடிவு மட்டும் இல்லாமல் மாரி மற்றும் அப்பத்தா என அனைவருமே முத்துவேல் மீது கோபம் கொள்கின்றனர். ஆனால் இது தன்னுடைய குடும்ப விவகாரம் என்று அவர்களிடம் பேசும் முத்துவேல், தொடர்ந்து வடிவிடம் நகைகள் குறித்து விசாரிப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











