Pandian stores 2 serial: மகன்களை பாண்டியனே பிரிச்சிடுவாரு போல.. கோமதியை எச்சரித்த பழனிவேல்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் அமைந்து வருகின்றன. இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளன. சரவணனை ஹனிமூனுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார் பாண்டியன். இதையொட்டிய காட்சிகள் இன்றைய எபிசோடில் அமைந்துள்ளன.

தனக்கு முன்னதாக திருமணம் முடித்த தம்பிகள் ஹனிமூனுக்கு செல்லாத நிலையில் தான் மட்டும் எப்படி செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பிய சரவணன், அதுகுறித்து தன்னுடைய தம்பிகள் மற்றும் சித்தப்பா பழனிவேல் ஆகியோரிடம் கேள்வி எழுப்புகிறார். ஆனால் இதுகுறித்து அப்பாவிடம் பேசினால், சரவணனை ஹனிமூனுக்கு அனுப்புவதாக சொன்னதையும் அவர் கேன்சல் செய்து விடுவார் என்று செந்தில் மற்றும் கதிர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்யும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் சரவணன் ஹனிமூனுக்கு செல்ல பாண்டியன் ஒப்புதல் அளித்த நிலையில் அதுகுறித்து தன்னுடைய தயக்கத்தை தன்னுடைய தம்பிகள் மற்றும் சித்தப்பாவிடம் கூறுகிறார் சரவணன். இதுகுறித்து தான் அப்பாவிடம் பேசுவதாகவும் கூறுகிறார். ஆனால் இதை மறுக்கும் செந்தில் மற்றும் கதிர், தங்களின் ஹனிமூனுக்காக பேசினால், சரவணனின் டிரிப்பையும் பாண்டியன் கேன்சல் செய்துவிடுவார் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

செந்தில் -கதிரிடம் பாண்டியன் கோபம்: இதனிடையே அங்குவரும் பாண்டியனிடம் செந்தில் மற்றும் கதிரையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்குமாறு பழனிவேல் கூறுகிறார். இதை கேட்டு ஆத்திரமடையும் பாண்டியன், சரவணன், தன்னுடைய பேச்சைக் கேட்டு தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதாகவும் ஆனால் செந்தில் மற்றும் கதிர் இருவரும் தங்களது விருப்பத்திற்கேற்ப மீனா மற்றும் ராஜியை திருமணம் செய்துக் கொண்டதாகவும் அதனால் அவர்களின் ஹனிமூனுக்கு தான் பணம் தர மாட்டேன் என்றும் அவர்களுக்கு தேவையென்றால் அவர்களே சென்றுக் கொள்ளட்டும் என்றும் கூறுகிறார். இதனால் கதிரும் தனக்கு தேவையென்றால் தான் சென்றுக் கொள்வேன் என்று பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தங்கமயில் மகிழ்ச்சி: இதையடுத்து தன்னுடைய அம்மாவிடம் பேசும் தங்கமயில், மாமனார் பாண்டியன் ஹனிமூனுக்கு செல்ல ஓகே சொல்லிவிட்டதாக தன்னுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்துகிறார். ஆனால் தன்னுடைய கணவன் சரவணன், தன்னுடைய தம்பிகள் குறித்து கவலைப்படுவதையும் எடுத்து சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் பாக்கியம், தன்னுடைய அண்ணன் குறித்து கவலையில்லாமல் தாங்கள் காதலித்த பெண்களை அவர்கள் திருமணம் செய்துக் கொண்டதை கூறுகிறார். அப்பாவித்தனமாக இருக்க வேண்டாம் என்று தங்கமயிலுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இதனிடையே அங்குவரும் சரவணனிடம் ஹனிமூன் குறித்து கேட்கிறார் தங்கமயில். ஆனால் அவரோ தம்பிகள் குறித்தே கவலை கொள்வதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன.

கோமதியிடம் பழனிவேல் ஆதங்கம்: இதனிடையே, சாப்பிடும்போது தன்னுடைய அக்கா கோமதியிடம் பேசும் பழனிவேல், பாண்டியன் தன்னுடைய மகன்களை சரிசமமாக நடத்தாததால் அவர்களை அவரே பிரித்து விடுவாரோ என்று தான் பயப்படுவதாக கூறுகிறார். தொடர்ந்து அவர்களை கம்பேர் செய்து பேசினால் அவர்களுக்குள் கண்டிப்பாக பிரிவு வந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வார்கள் என்று கோமதி சமாதானம் கூறுகிறார். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் தான் சொன்னதுதான் நடக்கும் என்று பழனிவேல் கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X