Pandian stores 2: பொண்ணுங்களுக்கு அமைதியான ஆண்களையும் பிடிக்கும்.. சரவணனுக்கு ராஜி சொன்ன விஷயம்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் மேட்ரிமோனி மூலம் சரவணனுக்கு பெண் பார்க்க ஒட்டுமொத்த குடும்பமே ஆரஞ்சு கபேவிற்கு சென்ற நிலையில், சரவணனை தனியாக மீட் செய்ய விரும்பிய அந்தப் பெண் இதுகுறித்து தெரிந்தவுடன் கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். முன்னதாக சரவணனிடம் பல கேள்விகளை அவர் கேட்ட நிலையில், அவர் நடப்பு வாழ்க்கையில் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் அப்பா பிள்ளையாக இருப்பதை பார்த்து கடுப்பானதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் வீட்டிற்கு வரும் குடும்பத்தினர் அந்தப் பெண் ஏன் கோபித்துக் கொண்டு சென்றார் என்பது குறித்து பட்டிமன்றம் வைக்காத குறையாக பேசுகின்றனர். இதுகுறித்து அந்தப் பெண் அகிலாவிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என முடிவு செய்து மீனா அவருக்கு போன் செய்ய, அவரது நம்பரையே அகிலா பிளாக் செய்ததை அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். சரி விடுப்பா அந்தப் பெண் நமது குடும்பத்திற்கு சரிபட்டு வரமாட்டா என்று அனைவரையும் பாண்டியன் சமாதானப்படுத்துகிறார். இதனிடையே இதை நினைத்து ரூமிற்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்த மீனாவை சமாதானப்படுத்த செந்திலும் ஒரு விஷயத்தை செய்கிறார்.

Vijay TV s Pandian stores 2 serial today 26th March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து இயல்பான மற்றும் சுவாரஸ்யமான கதைத்தளங்களில் இயங்கி சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக வெற்றிநடை போட்டு வருகிறது. குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்சை நடத்திவரும் பாண்டியன், அவரது மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள் ஆகியோரை கேரக்டர்களாக கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது சரவணனின் திருமணத்தையொட்டிய கதைக்களம் காணப்படுகிறது. செந்தில், கதிர் திருமணங்களால் சரவணனின் திருமணம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சரவணனுக்கு திருமண முயற்சிகள்: சரவணனின் திருமணத்தையொட்டி பலதரப்பிலும் பெண் தேடும் படலத்தில் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர். இந்த முயற்சிகளை கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் முறியடிக்கின்றனர். சரவணனின் அடுத்தடுத்த திருமண முயற்சிகள் அனைத்தும் இவர்களால் தகர்ந்துவரும் சூழலில் உண்மை காரணம் அறியாமல் பாண்டியன் மற்றும் அவரது டும்பத்தினர் தவித்து வருகின்றனர். சரவணனுக்கு 50 நாட்களுக்குள் திருமணம் முடிப்பேன் என்றும் அதுவரை தனது காலில் செருப்பு போடமாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் போடுகிறார்.

சரவணனை நிராகரித்த பெண்: இதனிடையே மேட்ரிமோனிமூலம் வந்த அகிலா என்ற பெண்ணை சந்திக்க ஆரஞ்சு கபேவிற்கு சரவணன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் செல்கின்றனர். சரவணனை தனியாக சந்திக்க அந்தப் பெண் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குடும்பமே ஒட்டுமொத்தமாக சென்றதால் அவர் கடுப்படைந்து அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு செல்கிறார். முன்னதாக சரவணனிடம் பேசும் அகிலா, அவர் தற்காலத்திற்கு ஏற்றாற்போல எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இருப்பதை அறிந்துக் கொள்வதும் அவர் புறப்பட்டு சென்றதற்கு காரணமாக அமைகிறது. இதனிடையே வீட்டிற்கு வரும் சரவணன், தன்னுடைய தம்பிகள் மற்றும் மாமாவிடம் தான் எந்த விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளாமல் உள்ளது குறித்து மனவேதனையை வெளிப்படுத்துகிறார்.

ஆறுதல் சொன்ன ராஜி: அப்போது அங்குவரும் ராஜி, சரவணனின் வேதனையை புரிந்துக் கொண்டு, அவரிடம் அனைத்து பெண்களும் துறுதுறுவென இருக்கும் ஆண்களைத்தான் விரும்புவார்கள் என்றில்லை, பல பெண்களுக்கு தன்னுடைய கணவர் அமைதியாக இருப்பது பிடிக்கும் என்றும் அதுபோன்ற ஒரு பெண் சரவணனை தேடி வருவார் என்றும் கூறுகிறார். இதனால் சரவணன் சமாதானமடைவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. மேலும் மேட்ரிமோனி மூலம் மேலும் இரு பெண் வீட்டாருக்கு கோமதி மற்றும் பாண்டியன் மூலம் குடும்பத்தினர் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் கூட்டுக்குடும்பம் சரிபட்டு வராது என்று கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X