Pandian stores 2: வீட்டிற்கு வந்த மகன்கள்.. திட்டித் தீர்த்த கோமதி.. பெருமைப்பட்ட பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சூழலில் தற்போது இரண்டாவது சீசனும் அதை தொடர்ந்து வருகிறது. சரவணனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்கமயிலுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார் பாண்டியன்.

அவர்களது குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாக மீனா கண்டுபிடித்து சுட்டிக்காட்டுகிறார் ஆனால் தன்னுடைய மகனுக்கு திருமணம் நிச்சயமானது குறித்து மிகுந்த சந்தோஷமடைகிறார் பாண்டியன் இதனால் மீனா சொல்லும் விஷயங்கள் எதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனிடையே சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரையும் குமரனை தாக்கிய விஷயத்திற்காக போலீசார் கைது செய்கின்றனர்.

Vijay TV s Pandian stores 2 serial today 27th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்ப செண்டிமெண்டையும் பாச பிணைப்பையும் மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நடத்தி வருகிறார் பாண்டியன். தன்னுடைய உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார். அனாதையான பாண்டியன் ஒரு கட்டத்தில் கோமதியை காதலித்து மணமுடித்த சூழலில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் முடிக்கின்றனர்.

பாண்டியன் கோமதி காதல் திருமணம்: இவர்களது காதல் திருமணத்தால் கடந்த 28 ஆண்டுகளாக தன்னுடைய அண்ணன்களின் கோபத்திற்கு ஆளாகி பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் கோமதி. தொடர்ந்து அவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் அண்ணன் மகள் ராஜியை இக்கட்டான சூழலில் மீட்கும் கோமதி, தன்னுடைய மகன் கதிருக்கு அவரை திருமணம் செய்து வைக்கிறார். இதனால் அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்கும் அவருக்குமான பகைமை மேலும் அதிகரிக்கிறது.

கைதான சரவணன்: இந்நிலையில் தன்னுடைய அம்மா வாசலில் வழுக்கி விழுந்ததை பார்க்கும் ராஜி, அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு செல்கிறார். இதை பார்க்கும் குமரன் உள்ளிட்டவர்கள், ராஜி வீட்டுக்குள் வந்ததை கண்டித்து அவரை வீட்டை விட்டு வெளியில் தள்ளுகின்றனர். தொடர்ந்து குமரன், ராஜியை அடிக்கவும் செய்கிறார். இதை தடுக்க இடையில் நுழையும் பாண்டியன் மீது குமரனின் அடி விழுகிறது. இதனால் கோபமடையும் சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் குமரனை தேடிப் பிடித்து அடித்து துவைக்கின்றனர். சரவணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள சூழலில் அவரையும் சேர்த்து மூன்று அண்ணன் தம்பிகளையும் போலீசார் கைது செய்கின்றனர்.

ராஜியின் அதிரடி புகார்: இந்நிலையில் தன்னை முதலில் அடித்தது தன்னுடைய அண்ணன் தான் என்று புகார் அளிக்கிறார் ராஜி. இதனால் வேறு வழி இல்லாமல் தங்களது புகாரை குமரன் உள்ளிட்டவர்கள் வாபஸ் பெறுகின்றனர். இதனால் சரவணன் செந்தில் மற்றும் கதிர் மூவரும் வீடு திரும்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவர்களை திட்டி தீர்க்கிறார் கோமதி. அவர்கள் ரவுடிகளா என்று பலவாறு கேட்கிறார். எப்போதும் தன்னுடைய மகன்களை கண்டிப்புடன் நடத்தும் பாண்டியன், இந்த விவகாரத்தில் எதுவும் கூறாமல் அவர்களை போய் குளித்துவிட்டு வருமாறு சொல்கிறார்.

நெகிழ்ச்சியில் பாண்டியன்: இது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது. இதுகுறித்து நேரடியாக பாண்டியனிடம் கோமதியே கேள்வி எழுப்புகிறார். அப்போது அவர் நெகிழ்ச்சியுடன் தான் யாரும் இல்லாத அனாதை என்று இருந்த சூழலில் தற்போது தன் மீது ஒரு அடி பட்டவுடன் தன்னுடைய மகன்கள் கோபத்துடன் குமரனை அடிக்க பாய்ந்தது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்கிறார் பாண்டியன். தான் அனாதை இல்லை என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டுகிறார். முன்னதாக காவல் நிலையத்தில் தங்கமயில் குடும்பத்தினரும் சரவணனுக்காக வந்து நிற்கின்றனர்.

மீனாவிற்கு கல் நெஞ்சு?: காவல்நிலையம் என்றும் பாராமல் அவர்கள் அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை பார்க்கும் மீனா தன்னுடைய மற்றும் ராஜியின் கணவன்களும் தான் காவல் நிலைய நிலையத்தில் உள்ளார்கள் என்றும் ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் செய்கின்றீர்கள் என்றும் நேரடியாக தங்கமயில் அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளிக்கும் தங்கமயில் அம்மா பாக்கியா, மீனாவிற்கு கல் நெஞ்சு என்றும் அதனால்தான் அவர் அழ மாட்டேன் என்கிறார் என்றும் கூறுகிறார்.

கடுப்பாகும் மீனா: இதைக் கேட்கும் மீனா மிகுவும் கடுப்பாகிறார். ஆனாலும் இடையில் பேசும் பழனிவேல், அவர்கள் அனைவரையும் சண்டை போடாமல் இருக்குமாறு சமாதானப்படுத்துகிறார். ஆனால் பிரச்சனை என்று வந்தவுடன் உடனடியாக அங்கே வந்து நின்ற தங்கமயில் மற்றும் குடும்பத்தினர் குறித்து பாண்டியன் தொடர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இது குறித்து பேசி சந்தோஷப்படுகிறார் இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X