Pandian stores 2: அந்த கிரைண்டரை தூக்கியே ஆகணும்.. கோமதியின் ஆசையை நிறைவேற்றி வைத்த குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏராளமான டிஆர்பியையும் பெற்று வருகிறது. இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிறுவயதில் அநாதையாக அனைத்து தரப்பினரின் அலைகழிப்பிற்கும் உள்ளாகும் பாண்டியன், கோமதியை காதல் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார். தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திவரும் பாண்டியன் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்வகையில் அமைந்திருந்தது. பொங்கல் கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக கடந்த சில எபிசோட்களில் காட்டிய இந்தத் தொடரில், பாண்டியனின் குலதெய்வ கோயில் மற்றும் அதன் கொண்டாட்டங்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய பெற்றோலை சிறு வயதிலேயே இழக்கும் பாண்டியன், வாழும் வழியறியாமல் கிடைத்த வேலைகளை செய்து பிழைப்பதாக இந்த சீரியலில் கூறப்படுகிறது.
பாண்டியன் குடும்பத்தினர்: ஒரு கட்டத்தில் கோமதியின் காதலை பெறும் பாண்டியன், அதன்பின்பே தன்னுடைய வாழ்க்கையில் மலர்ச்சியை அனுபவிக்கிறார். அவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், தன்னுடைய கறாரான நடவடிக்கையால் அவர்களை தொடர்ந்து கடுப்பேற்றுகிறார். ஆனாலும் தன்னுடைய மகன்கள், மகள்கள் மீது அவர் காட்டும் அன்பு, அக்கறை போன்றவை, காசு பணத்தை மீறி மிகச்சிறப்பாக இந்த சீரியலில் காட்டப்படுகிறது. அவரிடம் ஒரு விஷயத்தை கொண்டு செல்வதற்கு அச்சப்படும் மகன்களையே இந்த சீரியல் காட்சிப்படுத்துகிறது. திருமணமான நிலையிலும் அப்பாவிடம் மல்லுகட்டும் மகன்களை காண முடிகிறது.
குலதெய்வம் கோயிலில் பாண்டியன் குடும்பம்: இதனிடையே கடந்த சில தினங்களாக பொங்கல் கொண்டாட்டத்தை இந்த சீரியல் ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தது. வீட்டு வாசலில் கோலமிட்டு, பொங்கல் வைத்து, உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு, பொங்கல் எபிசோட்களை சிறப்பாக அமைந்தன. இந்நிலையில், தன்னால் கண்டுபிடிக்க முடியாத, குலதெய்வம் கோயிலை கண்டுபிடிக்கிறார் பாண்டியன். தன்னுடைய குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கும் செல்கிறார். தன்னுடைய சம்பந்திகளையும் உடனழைத்து செல்கிறார். கோபத்தில் உள்ள மீனாவின் அப்பாவும் கோயில் விஷயம் என்பதால் இந்த கோயில் விசேஷத்திற்கு வருகிறார்.
பொங்கல் கொண்டாட்டம்: இதனிடையே, இன்றைய எபிசோடில் பாண்டியனின் குலதெய்வம் கோயிலில் பொங்கல் கொண்டாட்டமாக பல்வேறு போட்டிகளை நடத்துவதாகவும் காணப்பட்டது. முன்னதாக இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மூன்று பரிசுகள் வழங்கப்படும என்றும் முதல் பரிசு கிரைண்டர் என்றும் அறிவிக்கப்படுகிறது. இதனிடையே, தன்னுடைய மகன்கள், மருமகள்களை தனியாக அழைக்கும் கோமதி, அந்த கிரைண்டரை தட்டித் தூக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார். இதையடுத்து அவருடைய மகன்கள், மருமகள்கள் அனைவரும் இணைந்து அவர் விரும்பியபடி அந்த கிரைண்டரை அவருக்கு கிடைக்கும்படி செய்கின்றனர். அனைத்து போட்டிகளிலும் பாண்டியன் குடும்பத்தினர் வெற்றி பெறுவதாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











