Pandian stores 2 serial: புள்ளைங்களை ஒரே மாதிரியா நடத்துறீங்க.. பாண்டியனிடம் கோமதி கேட்ட கேள்வி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து சரவணனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துவருகிறார் பாண்டியன். ஆனால் செந்தில் மற்றும் கதிர் இருவரும் தனக்கு தெரியாமல் திருமணம் செய்து வந்ததால் அவர்களை இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்.
இதுகுறித்து பழனிவேல் தன்னுடைய அக்கா கோமதியிடம் பேசுகிறார். பாண்டியனின் மகன்கள் மூவரும் ஒற்றுமையாக இருக்கும்நிலையில், பாண்டியனின் இந்த குணத்தால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை குலையும் என்று அவர் எடுத்துக்கூற, இதுகுறித்து யோசிக்கும் கோமதி, இன்றைய தினம் இதுகுறித்து பாண்டியனிடம் பேசுவதாக அமைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் கோமதி பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருவதாக காணப்படுகிறது. முன்னதாக பாண்டியன் தன்னுடைய மகன்களை சமமாக நடத்துவதில்லை என்று பழனிவேல் குறை கூறுகிறார். ஒற்றுமையாக இருக்கும் அவர்களுக்குள் பிரிவினையை அவர் ஏற்படுத்தி விடுவாரோ என்றும் தன்னுடைய சந்தேகத்தை பழனிவேல் கோமதியிடம் கூற, இதனால் கோமதி மிகப்பெரிய வேதனைக்கு உள்ளாவதாக காணப்படுகிறது. தன்னுடைய மகன்கள் எப்போது இதேபோல ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
கடைக்கு வந்த கோமதி: இதனிடையே, இன்றைய தினம் கடைக்கு வரும் கோமதியை பார்த்து ஏன் திடீரென அவர் வந்தார் என்று பாண்டியன் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் கோமதி, தங்கமயில் வந்தால் மட்டும் எதுவுமே கூறுவதில்லையே என்று கேட்கிறார். அந்தப்பெண் வந்தால் கடையில் வியாபாரம் செய்யும் என்று பாண்டியன் கூற, உடனடியாக கோமதியும் கடையில் வியாபாரம் பார்க்கிறார். ஆனால் பொருளை கட்டிக் கொடுக்கத் தெரியாமல் விலையும் தெரியாமல் அவர் முழிப்பதாக காணப்படுகிறது. இதனிடையே, விலையை கேட்டு இவ்வளவு விலையா என்று கஸ்டமரிடமே அவர் கேட்க, அனைவரும் திகைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
மகன்கள் குறித்து பேசிய கோமதி: தொடர்ந்து அனைவரும் வெளியில் சென்றுவிட கடையில் தனியாக இருந்த பாண்டியனிடம் அவர் மகன்களை சமமாக நடத்துமாறு கூறுகிறார். அவர்கள் மூவருக்குள்ளும் பிரிவினையை உண்டு செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் மூவரையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்குமாறும் கோமதி கூற, பாண்டியன் குழப்பத்தில் ஆழ்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து கடையில் யார் வேலை செய்வார்கள் என்று அவர் கேட்க, தான் வீட்டில் சும்மா இருப்பதாகவும் தான் வந்து கடையில் வேலை செய்வதாகவும் கோமதி கூறுகிறார். தான் ஒரே நாளில் வேலையை கற்றுக் கொள்வேன் என்றும் அவர் கூறுவதாக காட்சிகள் அமைந்திருந்தன.
கதிரிடம் செந்தில் கேட்ட கேள்வி: இதை அங்குவரும் செந்திலும் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து டெலிவரிக்கு செல்லும் செந்தில் வழியில் கதிரை பார்க்கிறார். அன்றைய தினம் கோமதி கடைக்கு வந்ததையும் கூறும் செந்தில், கதிர் ஏன் அம்மாவிடம் பேசாமல் இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் நடந்ததை கூற முடியாமல் கதிர் திகைப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











