Pandian stores 2 serial: போட்டு கொடுக்குறது எல்லாம் உங்க வேலை.. தங்கமயிலிடம் எரிந்து விழுந்த மீனா!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அடுத்தடுத்து சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் சென்னையில் இருந்து செந்தில் மற்றும் மீனா வீடு திரும்பிய நிலையில், தான் சொன்ன வேலைகளை செந்தில் முடிக்கவில்லை என்று கூறி பாண்டியன் அனைவர் முன்னிலையிலும் திட்டித் தீர்க்கிறார்.
செந்திலிடம் ஒரு வேலையை கொடுத்தால் தான் ஓட்டாண்டியாகத்தான் போக வேண்டும் என்று பாண்டியன் கூற, தங்கமயில் அதைக் கேட்டு சிரிக்கிறார். ஏற்கனவே தன்னுடைய கணவன் திட்டு வாங்குவதை பார்த்துக் கொண்டிருக்கும் மீனா, தங்கமயில் சிரித்ததால் மேலும் கடுப்பாகிறார். அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன்னுடைய அறைக்கு மீனா செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான கட்டங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. சென்னையில் இருந்து மீனா மற்றும் செந்தில் இருவரும் ட்ரெயினிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் கொடுத்த வேலைகளை செந்தில் முடிக்கவில்லை என்றும் போனை சுவிட்ச் ஆஃப் செய்ததாகவும் குற்றம் சாட்டும் பாண்டியன், அனைவர் முன்னிலையிலும் அவரை திட்டி தீர்க்கிறார். இது குறித்து மீனாவிடம் செந்தில் எதுவும் கூறாத நிலையில் விஷயம் தெரிந்து மீனாவும் செய்வதறியாமல் பார்க்கிறார்.
கண்கலங்கிய மீனா: இந்நிலையில் செந்திலிடம் நம்பி வேலையை கொடுத்தால் ஓட்டாண்டியாக தான் போக வேண்டும் என்று பாண்டியன் அனைவர் முன்னிலையிலும் கூற, தங்கமயில் நேரம் காலம் தெரியாமல் சிரிக்கிறார். இதை பார்க்கும் மீனாவின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. இதனால் அவர் அந்த இடத்தை விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறார். இதையடுத்து திட்டு வாங்கிய செந்திலை ஆறுதல் படுத்தும் வகையில் சரவணன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு போகிறார். அறைக்குள் கண் கலங்கியபடி இருக்கும் மீனாவை கோமதியும் ராஜியும் இணைந்து சமாதானப்படுத்துகின்றனர்.
போட்டு கொடுப்பது நல்லா வருமே: இதையடுத்து அனைவரின் முன்னிலையிலும் மாமா திட்டிய நிலையில் தங்கமயில் சிரித்தது குறித்து தன்னுடைய கடுப்பையும் ஆத்திரத்தையும் மீனா வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் அவர்கள் பீச்சுக்கு சென்ற விஷயத்தை தங்கமயில் தான் பாண்டியனிடம் கூறியதாக கோமதி கூற மீனாவின் ஆத்திரம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து தங்கமயிலிடம் இது குறித்து கேட்பதாக அவர் எழுகிறார். இந்நிலையில் தங்கமயில் அங்கு வந்து மீனாவிற்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா என்று கேட்கிறார். இட்லி போட்டு கொடுக்கட்டுமா, காபி போட்டு கொடுக்கட்டுமா என்று அவர் அடுத்தடுத்து கேட்க, உங்களுக்கு தான் போட்டுக் கொடுப்பது என்றால் நன்றாக வருமே என்று மீனா குத்தி காட்டுகிறார்.
வருத்தத்தில் செந்தில்: இதனால் தங்கமயில் முழிக்க தொடர்ந்து மீனா கோபத்துடன் அவரிடம் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் கடைக்கு வரும் செந்தில், பழனிவேல் மற்றும் தாத்தாவிடம் ஊரில் நடந்த விஷயங்களை அடுத்தடுத்து கூறுகிறார். இரண்டு நாளில் தான் மீனாவுடன் பீச்சுக்கு மட்டுமே போனதாகவும் மீனா ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை திட்டமிட்டதாகவும் வருத்தத்துடன் செந்தில் கூறுகிறார். இது மட்டும் இல்லாமல் வந்தவுடன் தான் செய்த வேலைகளுக்கு பாராட்டு கிடைக்காமல் மாறாக அனைவரும் முன்னிலையிலும் ஸ்கூல் பையனை போல நிற்க வைத்து தன்னை தன்னுடைய அப்பா திட்டியதாக கூறுகிறார்.
பாண்டியன் நம்பிக்கை: இதையடுத்து அங்கு வரும் பாண்டியனிடம் அவருடைய மகன்கள் அனைவரும் வளர்ந்து விட்டதாகவும் திருமணம் ஆகிவிட்டதாகவும் அவர்களிடம் கொஞ்சம் பார்த்து பேசுமாறும் தாத்தா கூறுகிறார். இதையடுத்து தான் திட்டினாலும் தன்னுடைய மகன்கள் தன்னை எதிர்த்து பேச மாட்டார்கள் என்றும் தான் நல்லதுக்கு தான் திட்டுகிறேன் என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் தாத்தா நினைப்பது போல் எதுவும் நடக்காது என்று பாண்டியன் நம்பிக்கையுடன் கூறுகிறார். இந்நிலையில் அடுத்த காட்சியாக கதிர் வாங்கி கொடுத்த சுடிதாரை போட்டுக் கொண்டு வரும் ராஜி, வெட்கத்துடன் தன்னுடைய மாமியார் மற்றும் மீனாவிடம் அது குறித்து பேசுவதாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











