மாப்பிள்ளைக்கு குறை எதுவும் இல்லையே.. பாக்கியம் கேட்ட கேள்வியால் ஆடிப்போன பாண்டியன் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் -தங்கமயில் திருமணம் நடந்தேறியுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த சாங்கியங்கள் மற்றும் மதிய உணவு என நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திருமணத்தை குறிப்பிட்ட நாளில் நடத்தி முடித்த பாண்டியனுக்கு செருப்பு வாங்கி வந்து போட்டு அவரது மகன்கள் அழகு பார்க்கின்றனர்.

இதை பார்க்கும் பாக்கியம் சபதம் போட்டு திருமணம் செய்யும் அளவிற்கு சரவணனுக்கு உடலில் குறைபாடு ஏதும் இருக்கிறதா என்று அதிரடியாக கேள்வி கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மேலும் அவர் தன்னுடைய மகளை தனியாக அழைத்து சென்று தன்னுடைய கணவன், மாமனார், மாமியாரை கைக்குள் போட்டுக் கொள்ளுமாறு பாடம் எடுப்பதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 27th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. சரவணன் -தங்கமயிலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். பல்வேறு சாங்கியங்களுடன் பாண்டியன் எதிர்பார்த்தபடியே தன்னுடைய மகனுக்கு குறிப்பிட்ட நாளில் திருமணத்தையும் நடத்தி முடித்து வைத்துள்ளார். இதனால் அவர் வெற்றுக்காலுடன் இருப்பதை பார்க்கும் கதிர், சபதம் நிறைவடைந்ததையடுத்து தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து அவருக்கு செருப்பு வாங்கி வந்து காலில் போடுகிறார்.

பாக்கியம் கேட்ட கேள்வி: இதை பார்க்கும் தங்கமயில் அப்பா பாண்டியன் செருப்பே போட மாட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பாண்டியன் குடும்பத்தில் மீனா, ராஜி, குழலி என அனைவரும் ஒவ்வொருவராக எந்த நிலையில் பாண்டியன் சபதமிட்டு சரவணனுக்கு குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைத்தார் என்று புகழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதையடுத்து பேசும் பாக்கியம், சபதம் போட்டு திருமணம் நடத்தும் அளவிற்கு சரவணனுக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் எதுவும் இருந்ததா, அவருக்கு உடலளவில் எந்த பிரச்சனையும் இல்லையே என்று அதிரடியாக சபையில் கேள்வி எழுப்புகிறார்.

Vijay TV s Pandian stores 2 serial today 27th May 2024 episode

தங்கமயிலுக்கு பாண்டியன் அட்வைஸ்: பாக்கியத்தின் கேள்வியால் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் முகம் சுண்டி போகிறது. இதையடுத்துப் பேசும் ராஜி, தங்களது வீட்டினரின் சதி திட்டத்தால் சரவணனின் திருமணம் நடைபெறாமல் போனது குறித்து கூறுகிறார். அதனால் தான் பாண்டியன் இந்த சபதத்தை ஏற்று தற்போது திருமணத்தையும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தி முடித்து உள்ளதாக அவர் கூறுகிறார். தன்னுடைய மருமகள் ராஜி மற்றும் மீனா இருவரும் தனக்கு ஆதரவாக பேசியதை கேட்டு பாண்டியன், தங்கமயிலிடம் தன்னுடைய மருமகள்கள் குடும்பத்திற்கு ஏற்றபடி அனுசரணையாக நடந்து வருவதாகவும் புதிதாக வீட்டிற்கு வரும் தங்கமயிலும் அதே போல நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். தங்க மயிலும் இதற்கு கண்டிப்பாக மாமா என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தங்கமயிலுக்கு பாடம் எடுத்த பாக்கியம்: இந்நிலையில் தங்க மயிலை தனியாக ரூமிற்குள் அழைத்துச் சென்று பேசும் பாக்கியம் மற்றும் குடும்பத்தினர் தங்கமயில் விரைவில் அந்த குடும்பத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார். ராஜி மற்றும் மீனா இருவரும் பெரிய குடும்பத்திலிருந்து வந்ததையடுத்து மிகவும் கெத்து காட்டுவதாகவும் அதை எல்லாம் ஒடுக்கி, தன்னுடைய கணவன் சரவணன் மற்றும் மாமனார், மாமியாரை தன்னுடைய கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பாக்கியம் தன்னுடைய மகளுக்கு பாடம் எடுக்கிறார். இதையடுத்து தங்கமயில் கிளம்பும் நேரம் வருகிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 27th May 2024 episode

தங்கமயிலின் ஓவர் டோஸ்: அப்போது தன்னுடைய அம்மா, தங்கையை கட்டியணைத்து அழும் தங்கமயில், தான் அவர்களை விட்டு போக மாட்டேன் என்று அழுகிறார். இதையடுத்து குழலி, தானும் கணவன் வீட்டுக்கு சென்ற போது அழுததாகவும் ஆனால் இது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக காணப்படுவதாகவும் கமெண்ட் செய்கிறார். இதை அடுத்து மீனா மற்றும் ராஜி உள்ளிட்டோர் முன்னதாக வீட்டிற்கு சென்று மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பதற்கான வேலைகளை செய்வதற்காக புறப்படுகின்றனர். காரில் கதிர் அருகில் ராஜியை உட்கார வைக்கிறார் மீனா. இதை எடுத்து சீட் பெல்ட் போடுவதற்கு கதிர் ராஜிக்கு உதவி செய்கிறார். இதனால் அவர்களுக்கு மீண்டும் காதல் பற்றிக் கொள்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X