Pandian stores 2 serial: கோயிலில் அப்பாவை பார்க்கும் ராஜி.. நிலைமை தெரியாமல் பேசிய பூசாரி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் அடுத்தடுத்த காட்சிகளால் சிறப்பாக அமைந்திருந்தது. கதிர் வாங்கி கொடுத்த புதிய டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு அது குறித்து தன்னுடைய மாமியார் கோமதி மற்றும் மீனாவிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ராஜி, எலியும் பூனையுமாக இருந்த அவர்களுக்குள் ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுள்ளது குறித்து கோமதி சுட்டிக்காட்டுகிறார்.
வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டாய், இப்போது எவ்வளவு சிறப்பான பையனை பார்த்து தான் கல்யாணம் செய்து வைத்திருக்கிறேன் பார் என்று கோமதி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவர் கூறுவது போல தொடர்ந்து இருவரும் திருமணம் ஆன போதும் அடித்துக் கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்குள் அழகான காதல் அரும்பி வருவதை பார்க்க முடிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மிகச்சிறப்பாக அதே சமயம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய தினம் ராஜி, கதிர் வாங்கி கொடுத்த சுடிதாரை போட்டுக் கொண்டு வந்து கோமதி மற்றும் மீனாவிடம் பெருமையாக பேசுகிறார். அவரின் உற்சாகத்தை பார்த்து கோமதி மற்றும் மீனா இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். வேண்டாத திருமணத்தை செய்து கொண்டதாக கூறினாயே இப்போது இப்படி வந்து நிற்கிறாயே என்று கோமதி கலாய்ப்பதாக காணப்பட்டது.
உங்களுக்கு தெரியக்கூடாது: இதனிடையே அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு வருகிறார் தங்கமயில். என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று அவர் கேட்க உங்களுக்கு நாங்கள் பேசியது தெரியக்கூடாது என்பதற்காகத்தான் அத்தையை நான் தட்டி விட்டு எச்சரிக்கை செய்தேன், அதை எப்படி உங்களிடம் சொல்வது என்று மீனா வெளிப்படையாகவே கேட்கிறார்., அப்பொழுது நீங்கள் பேசியதை என்னிடம் கூற மாட்டீர்களா என்று தங்கமயில் கேட்க, தங்கமயிலை மீனா கலாய்ப்பதாக கூறி கோமதி சமாளிக்கிறார். இதையடுத்து சங்கமயிலும் பாண்டியன் மற்றும் சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
இவளை சமாளிக்க முடியலை: நான் எவ்வளவு சொன்னாலும் நீ கேட்காமல் அவர்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்கிறாயே என்று கோமதி கேட்க, இதில் என்ன இருக்கிறது என்று சமாளித்துவிட்டு தங்கமயில் தான் நினைத்ததை செய்கிறார். இதையடுத்து இவளை எப்படி தான் தடுப்பது என்று மீனா மற்றும் ராஜியிடம் கோமதி கேட்பதாகவும் நீங்கள் மாமியார் நீங்கள் தான் அதை யோசிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய அலுவலகத்திற்கு நடந்தபடி செல்கிறார் மீனா. அவரை பார்ப்பதற்காக டெலிவரி கொடுப்பதாக கூறிவிட்டு வருகிறார் செந்தில்.
கடுப்பான மீனா: தொடர்ந்து காலையில் தன்னுடைய மாமனார் செந்திலை அனைவர் முன்னிலையும் திட்டியது குறித்து வருத்தத்துடன் மீனா பேசுகிறார்.இது தங்களுக்கு பழகி விட்டதாகவும் புதிதாக வந்த மீனா, ராஜி மற்றும் தங்கமயில் அண்ணி, ஆகியோருக்கு பழகுவது சற்று சிரமமாக இருக்கும் என்றும் மீனாவிடம் செந்தில் கூறுகிறார், தங்கமயில் குறித்து செந்தில் பேசியதும் கடுப்பாகும் மீனா, பாண்டியன் செந்திலை திட்டியபோது தங்கமயில் சிரித்ததை கூறுகிறார். தொடர்ந்து தான் அவரை திட்டி தீர்த்ததையும் கூறுகிறார். இங்கிதம் இல்லாமல் தங்கமயில் நடந்துக் கொண்டதாகவும் சுட்டிக் காட்டுகிறார்.
ஏமாற்றத்தில் ராஜி: இதனிடையே, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் கதிரிடம், அவர் வாங்கிகொடுத்த சுடிதாரை போட்டுக் கொண்டு போய் முன்னால் நிற்கிறார் ராஜி. ஆனால் புட் டெலிவரிக்கு கிளம்பும் அவசரத்தில் கதிர் உடனடியாக கிளம்புகிறார். இதனால் ராஜி ஏமாற்றமடைகிறார். இதையடுத்து கதிரிடம் இதுகுறித்து கோமதி சுட்டிக் காட்ட, அப்போது தான் ராஜியை பார்க்கும் கதிர், ராஜிக்கு அந்த டிரஸ் அழகாக இருப்பதாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் ராஜி வெட்கம் கலந்த சந்தோஷத்திற்குள்ளாவதாக காணப்படுகிறது.
ராஜியிடம் பேசிய பூசாரி: இதையடுத்து தன்னுடைய மாமியார் கோமதியுடன் கோயிலுக்கு செல்கிறார் ராஜி. அங்கு தன்னுடைய அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் சாமி கும்பிட்டுக் கொண்டிப்பதையும் பார்க்கிறார். ராஜிக்கு திருமணம் ஆனது தெரியாத கோயில் பூசாரி, ராஜியிடம் ஏன் தனியாக நிற்கிறாய், அப்பாவுடன் வந்து நில், முன்பெல்லாம் அடிக்கடி கோயிலுக்கு வருவாய், தற்போது ஏன் வருவதில்லை என்று சரமாரியாக கேள்விகளை அடுக்குகிறார். கோமதி மற்றும் ராஜியை பார்க்கும் முத்துவேல், ஆத்திரப்படுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











