Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து சரவணனின் திருமணத்தை ஒட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. புரோக்கர் மூலமாகவும் பேப்பரில் விளம்பரம் கொடுத்தும் மேட்ரிமோனி மூலமாகவும் சரவணனுக்கு அடுத்தடுத்து பெண் பார்க்கும் படலங்கள் நடந்த நிலையில், அவை அனைத்துமே கைக்கூடாத நிலை காணப்படுகிறது. கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோர் சதித்திட்டம் தீட்டி திருமணங்களை முறியடிக்கும் சூழலும் காணப்பட்டது. இந்நிலையில் சங்கமம் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார் பாண்டியன்.
இதையொட்டிய காட்சி அமைப்புகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகின. சரவணனுக்கு சங்கமம் நிகழ்ச்சி மூலம் திருமணம் முடிவாவதாக முன்னதாக வெளியான ப்ரமோவில் காட்டப்பட்டிருந்தது, இதையொட்டிய காட்சிகளை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. அப்பா பிள்ளையாகவே வளர்ந்து வந்த சரவணன், தன்னுடைய திருமணத்திற்காக மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த முயற்சிகளால் மிகவும் பதட்டம் அடைகிறார். ஒவ்வொருவரையும் எதிர்கொள்ள அவர் தயக்கம் காட்டி வரும் சூழலில் சங்கமும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் முன்னிலையில் தன்னிடம் எத்தகைய கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்தும் அவர் தன்னுடைய அச்சத்தை மீனாவிடம் வெளிப்படுத்துகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில மாதங்களிலேயே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குனர். முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பானது. இந்த சீரியலும் சேனலின் முன்னணி சீரியல்களின் வரிசையில் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னிலையில் உள்ளது. சீரியலில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பாண்டியனின் குடும்பத்தில் அவரது அடுத்தடுத்த மகன்களின் திருமணம், அதன் மூலம் கேள்விக்குறியான முதல் மகனின் திருமணம் என அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களங்களை இந்த சீரியல் காட்சிப்படுத்தி வருகிறது.
சரவணன் திருமணம்: கோமதியின் அண்ணன்களின் சதியால் சரவணனின் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் சரவணன் திருமணத்தை எப்படியும் முடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புரோக்கர் மூலமும் பேப்பரில் விளம்பரம் கொடுத்தும் மேட்ரிமோனி மூலமும் அடுத்தடுத்த அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போகின்றது. இந்நிலையில் தற்போது கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலமாக சரவணனுக்கு பெண் தேடும் படலத்தில் குடும்பத்தினர் இறங்கியுள்ளனர்.
பதற்றத்தில் சரவணன்: தன்னுடைய திருமணத்திற்காக அடுத்தடுத்த குடும்பத்தினரின் முயற்சிகளால் சரவணன் பதற்றம் அடைகிறார். அப்பா பிள்ளையாகவே வளர்ந்த சரவணன், இந்த திருமண ஏற்பாடுகளின்போது எப்படி ரியாக்ட் செய்வது என்பதுகூட தெரியாத சூழல் காணப்படுகிறது. இதனால் முன்னதாக அவரை நேரில் சந்திக்கும் மேட்ரிமோனி மூலம் வந்த பெண், அவரை நிராகரித்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையின் சங்கமம் நிகழ்ச்சி மூலம் அவருக்கு பெண் தேடும் படலத்தில் பாண்டியன் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆர்வம் காட்டும் நிலையில் கோமதி மற்றும் மீனாவை மட்டுமே உடன் அழைத்து செல்கிறார் பாண்டியன். இலவச இணைப்பாக பழனிவேலும் சேர்ந்து கொள்கிறார்.
சங்கமம் நிகழ்ச்சி: இந்நிலையில் அவர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. சரவணன் எப்போதும் போல படபடப்பாகவே காணப்படுகிறார். அப்பா பேச்சை கேட்டு அவர் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டாலும் ஏராளமானோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தான் எப்படி செயல்படுவது என்பது குறித்து அவருக்கு தொடர்ந்து தயக்கம் காணப்படுகிறது. நிகழ்ச்சிக்காக அந்த மண்டபத்திற்கு செல்லும் போது அவரிடம் மீனா டென்ஷனாக இருக்கிறாரா என்று கேட்கிறார். அப்போது அவர் இப்படியே இப்படியே ஓடி விடலாமா என்று தனக்கு தோன்றுவதாக கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











