Pandian stores 2: ஆரத்தி எப்படி கரைப்பது.. மீனா -ராஜிக்கு வந்த டவுட்.. சொல்லிக் கொடுத்த அப்பத்தா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில மாதங்களாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிரின் திருமண கலாட்டாக்கள் நடந்து முடிந்த சூழலில் தற்போது சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணமும் பல்வேறு பிரச்சனைகள் கலாட்டாக்களுக்கு இடையில் நடந்தேறியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் இந்தத் தொடர் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் நடந்தேறிய சூழலில் அவர்கள் பாண்டியன் வீட்டிற்கு வருவதாகவும் அங்கு பல்வேறு சாங்கியங்களை செய்வதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் தொடர்ந்து சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியல் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் அடுத்தடுத்து திருமணங்கள் அதையொட்டிய கலாட்டாக்கள் ஆகியவற்றின் மூலம் சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களை காட்சிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், தற்போது சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தையும் பல்வேறு கலாட்டாக்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு இடையில் நடத்தி முடித்துள்ளது.
கதறி அழுத தங்கமயில்: திருமணம் நடந்து தன்னுடைய அப்பா -அம்மாவை பிரிந்து தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் தங்கையை பிரிய முடியாமல் அவர் தொடர்ந்து கதறி அழுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவரை சமாதானப்படுத்தி பாண்டியன் குடும்பத்தினர் அழைத்து செல்கின்றனர். ஆரத்தி உள்ளிட்ட சம்பிரதாயங்களை செய்வதற்காக ராஜி மற்றும் மீனா வீட்டிற்கு முன்னதாகவே கிளம்பிய சூழலில் அங்கு கதிருடன் இணைந்து வருபவர்களுக்கு லெமன் ஜூஸ் தயாரித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் பூஜை அறையை தயார் செய்த ராஜி, தொடர்ந்து ஆரத்தி கரைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தயாராகிறார்.
ஆரத்தியா.. அது எப்படி செய்வது?: ஆனால் ராஜிக்கு மட்டுமில்லாமல் கதிர் மற்றும் மீனா இருவருக்குமே ஆரத்தி கரைப்பதற்கான செயல்முறை குறித்து தெரியாத சூழல் காணப்படுகிறது. இன்டர்நெட்டில் தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்களது மொபைல் போன் அனைத்தும் பழனிவேலிடம் இருப்பதால் அதிலும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் எதிர் வீட்டில் ராஜியின் அப்பத்தா உட்கார்ந்து இருப்பதை பார்க்கும் மீனா, அவரிடம் கேட்க ராஜியையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அவர் ஆரத்தி கரைப்பதற்கான செயல்முறையை கூறி அதற்கான சுண்ணாம்பு வெற்றிலையையும் கையில் கொடுப்பதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.
சரவணனுக்கு பாண்டியன் சப்போர்ட்: இதையடுத்து தங்கமயில் மற்றும் சரவணன் இருவரையும் ஆரத்தியுடன் ராஜி மற்றும் மீனா வரவேற்கின்றனர். இதில் குழலியும் கலந்து கொள்கிறார். தொடர்ந்து விளக்கேற்றி வீட்டிற்குள் வருகிறார் தங்கமயில். இதையடுத்து வீட்டிற்குள் வரும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் பாலும் பழமும் சாப்பிட சரவணனிடம் பழம் கொடுக்கப்பட்ட சூழலில் அவர் பழனிவேல் கூறுவதை கவனிக்காத நிலையில் அவரை பழனிவேல் கலாய்க்கிறார். இனிமேல் சரவணனுக்கு யார் சொல்வதும் காதில் விழாது என்று பழனிவேல் கலாய்க்க அதையடுத்து பாண்டியன், சரவணனுக்கு சப்போர்ட் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











