Pandian stores 2 serial: மாறிய படுக்கை.. தொடர்ந்து ராஜி மீது அக்கறை காட்டும் கதிர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. தான் அனாதை இல்லை என்றும் தன்னுடைய மகன்கள் தனக்கு ஒன்று என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் என்றும் பாண்டியன் கோமதியிடம் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கியபடி பேசுகிறார். இதைக் கேட்டு கோமதியும் கண்கலங்குகிறார்.

இதையடுத்து தன்னுடைய அண்ணன் அடித்ததால் ராஜிக்கு தலைவலி ஏற்படுகிறது. இதையடுத்து ராஜியை அக்கறையுடன் விசாரிக்கும் கதிர் அவரை பெட்டில் படுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தான் கீழே படுத்து தூங்குகிறார். இதனிடையே அடிதடிக்கு போனது குறித்து செந்திலிடம் சண்டையிடுகிறார் மீனா. இவ்வாறாக இன்றைய எபிசோட்டில் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. இதனிடையே ராஜி மற்றும் கதிர் இருவருக்கும் இடையில் மெல்லிய காதல் பூக்கும் தருணங்களை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்க முடிகிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 29th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டி போடும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் சரவணனுக்கும் தங்க மயிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள சூழலில் அதை குலைக்கும் வகையில் கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல், அவரது மகன் குமரன் ஆகியோர் தொடர்ந்து காய் நகர்த்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமரனை அடித்த சரவணன், கதிர் மற்றும் செந்தில் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோமதியிடம் பாண்டியன் நெகிழ்ச்சி: தொடர்ந்து ராஜியின் அதிரடி புகாரால், அவர்களின் இந்த முயற்சி தவிர்க்கப்படுகிறது. சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் வழக்கு விசாரணை எதுவும் இல்லாமல் வீடு திரும்புகின்றனர். அவர்கள் ரவுடிகளா என்று கோமதி மூன்று பேரையும் திட்டி தீர்க்கிறார். ஆனால் அவர்களின் இந்த அடிதடி குறித்து பாண்டியன் எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் இருக்கிறார். தனியாக இருக்கும்போது கோமதி இது குறித்து அவரிடம் கேட்கிறார். இதற்கு பாண்டியன் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதில் அளிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. யாருமில்லாத அனாதை என்று தன்னை அனைவரும் கூறிய சூழலில் தனக்கு ஒன்று என்றதும் தன்னுடைய மகன்கள் ஓடி வந்ததும் யாராக இருந்தாலும் அடித்து துவைத்தது குறித்தும் அவர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கோமதியிடம் பகிர்கிறார்.

ராஜி மீது அக்கறை காட்டும் கதிர்: இதையடுத்து தன்னுடைய மாமியாரிடம் தலைவலி தைலம் வாங்கிக் கொண்டு செல்கிறார் ராஜி. குமரன் அடித்ததில் ராஜிக்கு தலைவலி வந்து விட்டதாக கூறுகிறார். இதனால் மிகுந்த பரிதவிப்புடன் கோமதி அவரை விசாரித்து தைலம் கொடுக்கிறார். தொடர்ந்து தன்னையும் சிறுவயதில் சுவற்றில் வைத்து தலையை மோதி அடித்து துன்புறுத்தியதாகவும் அப்போது ஏற்பட்ட தலைவலி தான் தனக்கு தற்போது வரை தொடர்வதாகவும் கோமதி கூறியதை கேட்டு ராஜி வருத்தப்படுகிறார். இதைக் கேட்கும் கதிர் அறைக்குள் வந்து, ராஜியை கட்டிலில் படுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.

மல்லுகட்டும் குமரன்: என்ன புது மாற்றம் என்று ராஜி கேட்க தலைவலி பயங்கரமாக இருக்கிறதா மருத்துவமனைக்கு போகலாமா என்று அக்கறையுடன் கதிர் விசாரிக்கிறார். இதனிடையே செந்திலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் மீனா, இனி ரவுடியிசம் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். தொடர்ந்து தங்கமயில் அழுதது குறித்து செந்தில் கூற, மீனாவிற்கு கடுப்பாகிறது. இதனிடையே மறுநாள் ராஜி கோலம் போட, அதை பார்க்கும் குமரன் வம்பிழுக்கும் வகையில் அந்தக் கோலத்தை கலைப்பதற்காக வண்டியில் வந்து அழிக்கிறார். இதை மொட்டை மாடியில் இருந்தபடி பார்க்கும் கதிர், உடனடியாக கோபத்துடன் கீழே வந்து குமரன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்.

குமரன் -கதிர் சண்டை: இதையடுத்து அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர். தொடர்ந்து கதிரை தடுக்கும் வகையில் அவரது கையைப் பிடித்து இழுத்து சண்டைக்குப் போக வேண்டாம் விட்டுவிடு என்று ராஜி கூறுகிறார். தான் விட்டு விடுவது இருக்கட்டும் முதலில் நீ விடு என்று ராஜி தன்னுடைய கையைப் பிடித்து இருப்பது குறித்து கலாய்க்கிறார் கதிர். தொடர்ந்து உண்மையை உணரும் ராஜி, உடனடியாக கதிரின் கையை விட்டு விடுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. எலியும் பூனையுமாக தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு ராஜி மற்றும் கதிர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்த சூழலில், தற்போது அவர்களுக்குள் மெல்லிய காதல் பூப்பதை பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X