Pandian stores 2 serial: அம்மாவை தெருவில் விட்டுட்டாங்களேடா.. பழனிவேலிடம் கதறி அழுத கோமதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாகவும் சென்டிமெண்டாகவும் காணப்பட்டது. தன்னுடைய மகள் கோமதியை பார்க்க வேண்டும் மற்றும் அவளுடன் பேச வேண்டும் என்று தன்னுடைய ஆசையை சொன்னதற்காக அவரை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார் சக்தி.

இந்நிலையில் இதையொட்டிய அடுத்தடுத்த காட்சிகளை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. சக்திவேல் செய்த செயலுக்காக கோபப்படும் முத்துவேல், அவரது கன்னத்தில் அறை விடுகிறார். யார் முன்னிலையில் நாம் கெத்தாக இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ அவரது முன்னாலேயே இவ்வாறு அசிங்கமாக நடந்துக் கொண்டாயே என்று பாண்டியனை வைத்து பேசுகிறார் முத்துவேல்.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பாக அமைந்திருந்தது. தன்னுடைய மகள் கோமதியை பார்க்கும் ஏக்கத்தை நேற்றைய எபிசோடில் வெளிப்படுத்தி கண்கலங்கி பேசுகிறார் காந்திமதி அப்பத்தா. இதையடுத்து அவரை ஆத்திரத்துடன் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் சக்திவேல். தொடர்ந்து தன்னுடைய மகள் வீட்டிற்கே செல்லுமாறும் அவர் கூற, இதைப்பார்க்கும் முத்துவேல், தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள்ளே செல்லுமாறு கூறுகிறார். தொடர்ந்து வீட்டிற்குள் வரும் சக்திவேலையும் முத்துவேல் கன்னத்தில் அறைவதாக காணப்பட்டது.

கதறி அழுத கோமதி: இந்நிலையில், பாண்டியன் முன்பு கௌரவமாக கெத்து காட்டி வாழ வேண்டும் என்று நினைக்கும் நிலையில், அவர் முன்னாலேயே நம்முடைய அம்மாவை வெளியில் தள்ளுகிறாயே என்று சக்திவேலை திட்டித் தீர்க்கிறார். இதனால் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆத்திரத்தில் புத்தி கெட்டு நடந்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார். இதையடுத்து கோமதி தன்னுடைய அம்மாவை நினைத்து தொடர்ந்து கதறி அழுவதாக காணப்படுகிறது. தானும் தன்னுடைய அம்மாவும் ஒருவரையொருவர் வெறுக்காத நிலையில், தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காக இருவரும் 30 ஆண்டுகள் பேசாமல் இருப்பதை கூறி அவர் அழுவதாக காணப்படுகிறது.

மல்லுக்கு நிற்கும் சக்திவேல்: தன்னுடைய அம்மாவை அண்ணன்கள் தெருவில் விட்டு விட்டதையும் குறிப்பிட்டு அவர் அழுத நிலையில், தன்னுடைய அம்மாவிற்கு தாங்கள் இருவரும் இருப்பதாக பழனிவேல் சமாதானம் கூறுகிறார். இதனிடையே, வெளியில் வரும் பாண்டியன், கோமதியையும் அவரது அம்மாவையும் சேர்த்து வைப்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறார். இதையடுத்து கடைக்கு செல்ல முற்படும் பாண்டியனை தன்னுடைய காரால் வழிமறித்து மல்லுக்கு நிற்கிறார் சக்திவேல். இதைப்பார்த்து கதிர் சண்டைக்கு செல்ல முற்பட, அவரை பாண்டியன் சமாதானப்படுத்துவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

வருத்தத்தில் பாண்டியன்: இதனிடையே கடைக்கு வரும் பாண்டியன் கோமதியையும் அவரது அம்மாவையும் பிரித்த பாவம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய தான் இத்தனை ஆண்டுகளாக இதை செய்ய முடியாமல் கையாலாகாத்தனமாக இருப்பதாகவும் அவர் தன்னுடைய மன வேதனையை கூறுகிறார். இதையடுத்து கடையில் இருக்கும் செந்தில் மற்றும் தாத்தா இருவரும் பாண்டியனை சமாதானப்படுத்துவதாகவும் இன்றைய எபிசோடில் காட்சிகள் காணப்பட்டன.

கௌரவத்திற்காக கொலையும் செய்வார்கள்: இதனிடையே வெளியில் வரும் தன்னுடைய அம்மாவை ராஜியும் ஏக்கத்துடன் பார்க்கிறார். இதேபோல வெளியில் அமர்ந்திருக்கும் தன்னுடைய அம்மாவை பார்த்து கோமதி கண்கலங்குகிறார். அவரை தங்கமயில், ராஜி மற்றும் மீனா தேற்றுகின்றனர். இதையடுத்து அம்மாவை பார்க்க வேண்டுமென்றால் போய் பார்க்க வேண்டியதுதானே என்று தங்கமயில் கேட்க, தன்னுடைய அண்ணன்கள் கௌரவத்திற்காக கொலை செய்யும் முடிவுக்கு போவார்கள் என்று கோமதி அழுதபடியே கூறுகிறார். இதையடுத்து விரைவில் அவர்கள் இருவரும் இணைவார்கள் என்று மீனா கூற, தான் மட்டுமில்லாமல் மீனா மற்றும் ராஜியும் அவர்கள் அம்மாவுடன் இணைய வேண்டும் என்று கோமதி கூறுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X