Pandian stores 2 Serial: செலவுக்கு பணம் கொடுத்த கதிர்.. கனவுலகிற்கு சென்ற ராஜி!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் காணப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் இயல்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த சீரியலின் காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சீரியலின் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி சீரியலாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனும் அப்பா மற்றும் மகன்களுக்கிடையிலான பாசத்தை மையமாக கொண்டு தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் துவங்கி சில மாதங்களிலேயே அதிகமான டிஆர்பிக்களுடன் சேனலின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஊரே பாராட்டும் வகையில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். ஆனால் சிலர் விமர்சிக்கும் வகையில், அவரது மகன்களின் அடுத்தடுத்த திருமணங்கள் அந்தக் குடும்பத்தின் போக்கையே மாற்றுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களான செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் நடந்த நிலையில், முதல் மகன் சரவணன் திருமணம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு முன்னதாகவே ஒரு காதல் ப்ளாஷ்பேக் இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. அவரது திருமணம் பிரச்சினைக்குள்ளான நிலையில் தற்போது அவருக்கு பெண் நிச்சயிக்கும் கட்டத்தில் குடும்பத்தினர் காணப்படுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சேனலின் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக வைத்து எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் அப்பா மற்றும் அம்மா கேரக்டர்களில் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சீரியலில் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றவாது மகன்களின் அடுத்தடுத்த திருமணங்களால் நிலைகுலைந்து போகிறார் பாண்டியன். மேலும் அவரது மூத்த மகன் சரவணனின் திருமணமும் கேள்விக்குறியாகிறது.
திருமண ஏற்பாடுகள்: இதையடுத்து புரோக்கர் மூலமாகவும் மீனா வழியிலும் பத்திரிகை விளம்பரம், மேட்ரிமோனி என அடுத்தடுத்த முயற்சிகளில் சரவணனுக்கு பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. இவை எல்லாமுமே சொதப்ப, தற்போது கல்யாண வைபோகம் என்ற நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு பெண் கிடைத்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். சரவணனுக்கு தங்கமயிலை மிகவும் பிடித்துப்போக, அவருக்குத்தான் சரவணனை பிடிக்காத சூழல் காணப்படுகிறது. இதுகுறித்து அவர் தன்னுடைய பெற்றோரிடம் கூற, அவர்கள் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
பிடிக்காமல் நடந்த கதிர் திருமணம்: இதனிடையே பிடிக்காமல் தன்னுடைய அம்மாவின் வற்புறுத்தலுக்காக, இக்கட்டில் இருந்த தன்னுடைய மாமன் மகள் ராஜியை திருமணம் செய்துக் கொள்கிறார் கதிர். இருவருமே கல்லூரிப் படிப்பை முடிக்காத சூழலில் தற்போது இருவரும் திருமணம் செய்துக் கொண்டு தங்களது படிப்பை தொடர்கின்றனர். இதனிடையே கல்லூரி செல்வதற்காக ராஜி தன்னுடைய மாமியாரிடம் பணம் கேட்க, அவரோ, ராஜிக்காக பாண்டியனிடம் பணம் கேட்கிறார். அவரோ, தன்னுடைய மனைவியின் தேவைக்காகக்கூட சம்பாதிக்க முடியாத சூழலில் கலயாணம் செய்த கதிரை கேவலமாக பேசுகிறார்.
ராஜிக்காக வேலையில் சேர்ந்த கதிர்: இதனால் ராஜி அழுதுக் கொண்டு நடந்தே தன்னுடைய கல்லூரிக்கு செல்கிறார். இதனால் வருத்தப்படும் கதிர், பார்ட் டைம் வேலையில் சேர்ந்து தற்போது தன்னுடைய மனைவிக்கு பணம் கொடுக்கிறார். இதை முதலில் ஏற்க மறுத்தாலும் பின்பு சந்தோஷமாக பணத்தை எடுத்துக் கொள்கிறார் ராஜி. இதனிடையே, கதிர் தனக்காக சம்பாதித்து பணம் கொடுத்ததாக மீனாவிடம் ராஜி பெருமையாக பேசுகிறார். இதனிடையே, கதிர் குறித்த நினைவுகளில் மூழ்குகிறார் ராஜி. திரும்பவும் கனவுலகிற்கு சென்றுவிட்டாயா என்று ராஜியை மீனா கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











