Pandian stores 2 serial: என் புருஷனை யாரும் ஏமாத்த முடியாது.. மீனா -ராஜியிடம் பந்தயம் கட்டும் கோமதி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் கோச்சிங் கிளாசிற்கு செல்வதாக கூறி ஹோம் டியூஷனுக்கு செல்லும் ராஜியை டிராப் செய்வதாக கூறுகிறார் பழனிவேல். இதனால் அதிர்ச்சியடையும் ராஜி, அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து ஒருவழியாக தப்பிக்கிறார்.

சரவணன் -தங்கமயில் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை அடுத்தடுத்து பாண்டியன் செய்கிறார். ஆன்லைனிலேயே தங்கமயில் மூலமாக ஹோட்டல் ரூமை புக் செய்கிறார் பாண்டியன். மூன்று நாட்களுக்கு சேர்த்து பிரபல ஹோட்டலில் 5000 ரூபாய் தான் வசூலிப்பதாக தங்கமயில் கூறியதை நம்பி அவரும் பணம் கட்டுகிறார். இதனால் மாமா பெரிதாக ஏமாறப்போவதாக மீனா, ராஜியிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. ராஜி கோச்சிங் கிளாசிற்கு போவதாக கூறிய ஹோம் டியூஷனுக்கு கிளம்பிய நிலையில் அங்கு வரும் பழனிவேல், தான் கடைக்கு தான் செல்வதாகவும் போகும் வழியில் இறக்கி விடுவதாகவும் கூறுகிறார். இதனால் ராஜி மட்டுமில்லாமல் மீனாவும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பழனிவேலுடன் வேறு வழியில்லாமல் ராஜி கிளம்பி செல்கிறார். போகும் வழியெல்லாம் எதுவும் பேசாமல் வரும் ராஜியை கேள்வி எழுப்புகிறார் பழனிவேல்.

பழனிவேலிடம் சிக்கிய ராஜி: அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தபடி ராஜி செல்லும் நிலையில் அவருக்கு அவரது தோழி ஒருவர் கால் செய்வதாக காணப்பட்டது. இதை வைத்து தான் தன்னுடைய தோழியுடன் பைக்கில் செல்வதாக கூறி பழனிவேலிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார் ராஜி. இந்நிலையில் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, அங்கு வரும் பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயில் சென்னை ட்ரிப்புக்கு செல்வதற்காக ட்ரெயின் டிக்கெட்டை புக் செய்து விட்டதாகவும் அங்கு வியாபாரிகள் அனைவரும் தங்கும் இடத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறுகிறார்.

ஆன்லைனில் ஹோட்டல் புக்கிங்: இதற்கு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளாத சூழல் காணப்படுகிறது. வியாபாரிகள் தங்கும் இடத்தில் பெண்களுக்கு தங்குவதற்கு சரியாக இருக்காது என்று கோமதி கூறுகிறார். இதையடுத்து மீனா மற்றும் செந்தில் சென்னைக்கு சென்றபோது அவர்கள் தங்கிய ஹோட்டல் குறித்து விசாரிக்க பாண்டியன் கூறுகிறார். மீனாவும் விசாரிக்க முயற்சிக்க இடையில் நுழையும் தங்கமயில், ஆன்லைனிலேயே ஹோட்டல்களை புக் செய்து விடலாம் என்றும் இதனால் நிறைய சலுகைகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார். இதை நம்பும் பாண்டியன் அவரை ஆன்லைனில் ஹோட்டலில் புக் செய்ய கூறுகிறார்.

ராஜியிடம் பேசும் மீனா: மூன்று நாட்களுக்கும் சேர்த்து மிகப்பெரிய ஹோட்டலில் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கட்டினால் போதும் என்று தங்கமயில் கூறி அந்த ஹோட்டலையே புக் செய்கிறார். அவ்வளவு பெரிய ஹோட்டலில் ஐந்தாயிரம் ரூபாய் தான் வாங்குகிறார்களா என்று குடும்பத்தினர் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தான் சரியாக பார்த்துள்ளதாகவும் வேண்டுமானால் அனைவரும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தங்கமயில் கூறுவதை கேட்டு அனைவரும் அவரை நம்புகின்றனர். இந்நிலையில் மாமா பெரிய அளவில் ஏமாறப் போவதாக மீனா ராஜியிடம் கூறுகிறார். அவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு ஐயாயிரம் என்பது கண்டிப்பாக இருக்காது என்றும் கூறுகிறார். ஆனால் இதை கூறினால் தான் கெட்டவளாக மாறிவிடுவேன் என்றும் கூறுகிறார்.

கோமதி உறுதி: இதுகுறித்து கோமதியிடம் மீனாவும் ராஜியும் பேசும் நிலையில், தன்னுடைய கணவனை யாரும் ஏமாற்ற முடியாது என்று அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே கதிர் மற்றும் பழனிவேலிடம் பேசும் செந்தில் தான் ஒரு ஐந்து ரூபாய் கேட்டாலும் ஆயிரம் கேள்வி கேட்கும் அப்பா, சரவணன் விஷயத்தில் மட்டும் தாராளமாக நடந்து கொள்வதாகவும் சரவணனை மட்டும் தான் அவர் பெற்றாரா தன்னையும் கதிரையும் வேறு எங்கிருந்தாவது எடுத்து வந்தாரா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசும் பழனிவேல், தற்போதெல்லாம் பாண்டியனுக்கு எதிராக செந்தில் அதிகமாக பேசுவதாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X