Pandian stores 2 serial: நான் மாமியார் ஆயுதத்தை கையில் எடுக்கப் போறேன்.. கோமதி எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் தன்னுடைய மகன்கள் கதிர் மற்றும் செந்திலை திட்டி இருக்கிறார். அவர்கள் பொறுப்புடன் செய்யும் செயல்களையும் அவர் குற்றம் கண்டுபிடித்து குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் திட்டுகிறார். இதுகுறித்து தன்னுடைய மகன்களிடம் கோமதி ஆதங்கப்படுகிறார்.
முன்பு அவர்கள் மூவர் மட்டுமே இருந்ததாகவும் தற்போது மருமகள்களும் வந்த நிலையிலும் பாண்டியன் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கோமதி தொடர்ந்து தன்னுடைய வருத்தத்தை கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தற்போது ஒற்றுமையாக இருப்பதை போலவே அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல தன்னுடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிரை திட்டி தீர்க்கிறார் பாண்டியன். செந்தில் கடையில் முடிக்க வேண்டிய 90% வேலைகளையும் முடித்த நிலையில் சில வேலைகளை மட்டும் செய்யாததை சுட்டிக்காட்டி அதற்காக பாண்டியன் அவரை திட்டுகிறார். இதே போல கதிரையும் இரவு 12 மணி அளவில் வீட்டிற்கு வந்ததாக கூறி திட்டுகிறார். இன்று முதல் 10 மணிக்குள் வீட்டிற்கு வரவில்லை என்றால் காலை உடைத்து விடுவேன் என்று அவர் கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
சரவணனை பாராட்டிய பாண்டியன்: இதனிடையே சரவணன் மட்டுமே இந்த வீட்டில் தனக்கு டென்ஷன் கொடுக்காமல் இருப்பதாகவும் எள் என்றால் எண்ணெயாக நிற்பதாகவும் பாராட்டுகிறார். அவரை பார்த்து மற்றவர்களும் கற்றுக் கொள்ளும்படியும் அவர் கூறுகிறார். இதனால் தங்கமயிலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் பாண்டியன் கூறியதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சரவணன் முழிக்கிறார். இதனிடையே அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தங்கமயில், செந்தில் மற்றும் கதிர் சரியாக சாப்பிடவில்லை என்றும் அவர்கள் மாமாவிடம் திட்டு வாங்கியதால் சாப்பிடவில்லையா என்று மீண்டும் அதை நினைவுப் படுத்துகிறார்.
கோமதி வருத்தம்: இதை பார்த்து கடுப்பாகும் கோமதி அவரை வேறு வேலை சொல்லி வெளியில் அனுப்புகிறார். தொடர்ந்து தன்னுடைய மகன்கள் இப்போது போலவே எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று கோமதி கூறுகிறார். தன்னுடைய அப்பா ஒருவரை பாராட்டி ஒருவரை திட்டுகிறார் என்று எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் இருக்க வேண்டும் என்றும் கோமதி கூறுகிறார். இதையடுத்து இடையில் பேசும் பழனிவேல் பாண்டியனால் அவர்கள் மூவருமே அடித்துக் கொள்ளும் சூழல் வரும் என்று கூறுகிறார். உடனே அவரது வாயை கழுவுமாறு கோமதி திட்டுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
கடுப்பான கோமதி: தொடர்ந்து தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தும் வகையில் கதிர் மற்றும் செந்தில் இருவரும் தன்னுடைய அண்ணன் சரவணன் பாராட்டப்பட்டால் தங்களுக்கும் அது மகிழ்ச்சி தான் என்று கூறுகின்றனர். இதனிடையே, வழக்கம் போல தன்னுடைய கணவன் மற்றும் மாமனாருக்கு சாப்பாடு தயார் செய்கிறார் தங்கமயில். அவர் தினந்தோறும் விருந்து போல சமைப்பதாகவும் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றும் கோமதி தன்னுடைய மற்ற மருமகள்கள் ராஜி மற்றும் மீனாவிடம் ஆதங்கப்படுகிறார். என்ன சொன்னாலும் தங்கமயில் கேட்பதில்லை என்றும் இன்றைக்கு அவளுக்கு வைத்திருக்கிறேன் என்றும் கோமதி கூறுகிறார்.
மாமியார் ஆயுதம்: தான் தன்னுடைய மாமியார் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கப் போவதாக அவர் கூறுகிறார். அவரை பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறப்போவதாக கோமதி கூற, அவர் கேட்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று ராஜி கேள்வி எழுப்புகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களுடன் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











