Pandian stores 2 serial: சரவணன் திருமணத்தை குலைத்த சக்திவேல்.. வேதனையில் பாண்டியன் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் துவங்கி சில வாரங்களே ஆன நிலையில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோடுகளை கொடுத்து வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியனின் மகன்கள் கதிர் மற்றும் செந்திலின் அடுத்தடுத்த திருமணங்கள் சரவணனின் திருமணத்தை பாதிக்கிறது. மூத்த மகன் இருக்க அடுத்தடுத்த மகன்களின் திருமணம் நடந்துள்ளது அந்த ஊர் மக்களின் பரிகாசத்திற்கு உள்ளாகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பாண்டியன், தன்னுடைய மகன் சரவணனின் திருமணத்தை உடனடியாக நடத்தி முடிக்க அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார், பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. தன்னுடைய மகன்களின் காதல் திருமணம் குறித்து பெண் வீட்டாரிடம் வெளிப்படையாகவே பேசுகிறார் பாண்டியன். இதையடுத்து கோமதியின் அண்ணன் சக்திவேலிடம் பாண்டியன் குடும்பத்தினர் குறித்து பெண்ணின் தந்தை விசாரிக்கிறார். அவரோ பாண்டியனின் குடும்பம் குறித்து அவதூறாக பேசுகிறார். இதனால் இந்த திருமணம் நிற்கிறது

Vijay TV s Pandian stores 2 serial today 2nd March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து சேனலின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த ஊரிலேயே செல்வாக்கு மிகுந்தவராகவும் காணப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்த அவருக்கு அடுத்தடுத்த இடியாக மகன்களின் திருமணம் நடந்தேறுகிறது. அவருடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிர் குடும்பத்தை மீறி அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.

அவமானத்தில் பாண்டியன்: இதனால் ஊர் மக்களிடையே அவர் அவமானப்பட நேர்கிறது. இதில் மூன்றாவது மகனான கதிருக்கு அவரது அம்மா கோமதி திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்தின்போது வீட்டை விட்டு வெளியேறிய ராஜியின் வாழ்க்கையை காப்பாற்றும் வகையிலும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை மீட்டெடுக்கும் வகையிலும் அவர் இந்த அதிரடி முடிவை எடுக்கிறார். ஆனால் முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்தினரிடம் அடி உதைப்படுகிறார் கதிர். சக்திவேலின் மகன் குமரனும் ஆள் வைத்து கதிரை அடிக்கும் சூழல் காணப்பட்டது. மேலும் பாண்டியனும் தன்னுடைய மகனை வெறுத்து ஒதுக்கிறார்.

சரவணனுக்கு திருமண முயற்சி: இதனிடையே இவர்கள் இருவரின் அடுத்தடுத்த திருமணத்தால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு உடனடியாக பெண் பார்த்து திருமணம் செய்ய பாண்டியன் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கின்றன. இதனிடையே பெண் பார்க்கும் படலத்தில் பாண்டியன் மற்றும் கோமதி ஈடுபடுகின்றனர். ஒரு பெண்ணை பார்த்து அவர்களிடம் தங்களது மகன்களின் அடுத்தடுத்த காதல் திருமணங்களை வெளிப்படையாக கூறுகிறார் பாண்டியன். அவர்களும் இந்த திருமணத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருமணத்தை குலைக்கும் சக்திவேல்: ஆனால் இந்த திருமணத்தை குலைக்கிறார் சக்திவேல். சக்திவேலிடம் தொலைபேசி மூலம் பெண்ணின் தந்தை, பாண்டியன் குடும்பத்தினர் குறித்து விசாரிக்கிறார். ஆனால் சக்திவேலோ தன்னுடைய தங்கை மகன் என்றுகூட பாராமல் பாண்டியனின் குடும்பத்தை மற்றும் அவர்களது மகன்கள் குறித்தும் அவதூறாக பேசுகிறார். இதனால் பெண்ணின் தந்தை இந்த திருமணத்தை நிறுத்துகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கோமதி, தன்னுடைய மருமகள் மீனாவிடம் குறைக்கொட்டி கொள்கிறார். அவரும் பதிலுக்கு ஆறுதலாக பேசுகிறார். இதனுடைய கடவுளிடமும் கோமதி முறையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X