Pandian stores 2: கதவை அறைந்து சாத்திய மீனாவின் அப்பா.. கதறி அழுத மீனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் கல்யாண நிகழ்வுகளை மையமாக கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் கைதாகும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் ராஜியின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் மூவரும் சிறை செல்வதில் இருந்து தப்புகின்றனர்.
இதனிடையே, இவர்களின் திருமண பத்திரிகையை அச்சடித்து வருகிறார் பாண்டியன். இருவீட்டார் அழைப்பாக அவர் பத்திரிகையை அச்சடித்து தங்கமயில் குடும்பத்தினருக்கு அதில் ஒரு பாதியை கொடுக்கிறார். ஆனால் அதற்கான பணம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் வெள்ளந்தியாக காணப்படுகிறார். இவ்வாறு அவர் தொடர்ந்து அனைத்து விஷயங்களையும் விட்டுக் கொடுப்பதும் அவர்களிடம் இருந்து அடுத்தடுத்த விஷயங்களை கேட்காமல் தங்கமயில் குடும்பத்தினர் பெற்றுக் கொள்வதும் மீனாவிற்கு நெருடலாக படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிக்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு, டிஆர்பியிலும் வாரந்தோறும் முன்னணியில் உள்ளது. பாண்டியன், கோமதி, அவரது மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள் என குடும்ப உறவுகள், அதில் பிரச்சினைகள் ஏற்படும் காரணங்கள், அவற்றையெல்லாம் தன்னுடைய நல்ல குணத்தால் அரவணைத்துப் போகும் பாண்டியன், அவர்மீது உயிரையே வைத்திருக்கும் மகன்கள் என இந்தத் தொடர், குடும்ப உறவுகளை சிறப்பாக காட்டி, ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

சரவணன் -தங்கமயில் திருமண ஏற்பாடுகள்: அந்த வகையில் தற்போது சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டிய சம்பவங்களை மையமாக கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் திருமணம் நடக்குமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியது சரவணன், செந்தில் மற்றும் கதிரின் கைது. ஆனாலும் இதற்கு காரணமாக தன்னுடைய அண்ணன், அப்பா, சித்தப்பா மீது ராஜி கொடுத்த அதிரடி புகாரால், இவர்கள் மூவரும் கைதிலிருந்து தப்பிக்கின்றனர். தொடர்ந்து சரவணன் -தங்கமயிலின் திருமணத்திற்கான பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன. இருவீட்டார் அழைப்பாக அச்சடிக்கிறார்.

பத்திரிகை ரெடி: இதையடுத்து அனைவருக்கும் பத்திரிகை கொடுக்க ஒவ்வொருவரும் லிஸ்ட் போட்டு களமிறங்குகின்றனர். மீனாவின் அப்பாவிற்கு தானே நேரில் சென்று அழைப்பதாக பாண்டியன் கூறுகிறார். ஆனால் தன்னுடைய காதல் திருமணத்தால் தன்னை தன்னுடைய அப்பா மற்றும் அம்மா இருவரும் வெறுத்து விட்டதாகவும், யார் நேரில் சென்றாலும் அவமானப்படுத்துவார்கள் என்றும் மீனா கூறுகிறார். தொடர்ந்து மீனா மற்றும் செந்தில் இருவரும் அவரை அழைப்பதற்காக அவர்களது வீட்டிற்கு செல்கின்றனர். ஆனால் வீட்டிற்குள் கூட அழைக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தி கதவை அறைந்து சாத்துகிறார். இதனால் வீட்டிற்கு வரும் மீனா கதறி அழுகிறார்.
மாப்பிள்ளைக்கு வரவேற்பு: இதனிடையே தங்கமயில் வீட்டிற்கு பத்திரிகை கொடுப்பதற்காக சரவணன் மற்றும் கதிர் இருவரும் செல்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு சரவணன் தயக்கத்துடன் செல்கிறார். ஆனால் அவர்கள், சரவணன் மற்றும் கதிரை சிறப்பாக வரவேற்று, பத்திரிகை மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து சாமி முன்பு பத்திரிகையை வைத்து சாமி கும்பிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக, தங்கமயிலை காணாமல் சரவணன் பரிதவிக்கிறார். உள்ளிருந்து அவர் வந்தவுடன் அவரிடம் பத்திரிகை குறித்து கேட்பதாகவும் அவரும் மகிழ்ச்சியுடன் தலையசைப்பதாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











