பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அவங்களோட சேர்ந்துக்கிட்டு நாடகம் போடுறியா.. பாண்டியன் கேள்வியால் கோமதி ஷாக்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. கோமதியை அவர்களின் அண்ணன்களை எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்த பாண்டியனுக்கு மகன்கள், மகள்கள் என 5 பேர் உள்ளனர்.
ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆகியும் கோமதியின் அண்ணன்கள் அவரை மன்னிக்க தயாராக இல்லை. இந்தப் பட்டியலில் தற்போது ராஜியும் இணைந்துள்ளார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ராஜி, கோமதியின் மகன் கதிரை திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில், அவர் காதலித்து வீட்டை ஏமாற்றி ஓடிவிட்டதாகவும் கோமதியின் அண்ணன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய மாமனாரின் விருப்பத்தை மீறி ஹோம் டியூஷன் எடுக்கிறார் ராஜி. தன்னுடைய கணவன் கதிர் தனியாக சிரமப்படுவதை பார்த்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்த முடிவை ராஜி எடுக்கிறார். ஆனால் இந்த விஷயம் ராஜியின் சித்தப்பா மூலமாக அனைவருக்கும் தெரிய வருகிறது. இதையொட்டி வீட்டிற்கு வாழ வந்த பெண்களை வேலைக்கு அனுப்பி அதில் பாண்டியன் உலை வைப்பதாக சக்திவேல் குற்றம் சாட்டுகிறார்.
பாண்டியனை கேவலமாக பேசிய சக்திவேல்: தொடர்ந்து வடிவின் நகைகளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டதாக பாண்டியன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முத்துவேல் மற்றும் சக்திவேல் வைக்கின்றனர். இதையடுத்து, இந்த விஷயத்தில் பாண்டியன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். தான் சிறுவயதிலிருந்து கடுமையாக உழைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிய நிலையில் தன்னை கோமதியின் அண்ணன்கள் இப்படி கேவலமாக பேசியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ராஜி மீதும் மீனா மீதும் தொடர்ந்து கோமதி தன்னுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்க்கிறார். அவர்களிடம் அன்னியோன்னியமாக பழகி வந்த கோமதி, தற்போது அவர்களிடம் பேசாமல் கோபத்தை வெளிப்படுத்தும் நிலை காணப்படுகிறது.
பாண்டியன் ஆதங்கம்: இந்நிலையில் இரவு தூங்காமல் முத்துவேல் மற்றும் சக்திவேல் கேவலமாக பேசியது குறித்து பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்துகிறார் கோமதி. தன்னுடைய அண்ணன்கள் மற்றவர்களின் உணர்வுகளை எப்போதுமே மதித்ததில்லை என்று கோமதி பாண்டியனை சமாதானப்படுத்த முயல்கிறார். இதையடுத்து தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் பாண்டியன் ஒரு கட்டத்தில், மீனா மற்றும் ராஜி இருவரும் கோமதியிடம் மிகவும் அன்னியோன்யமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் கோமதியிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.
கோமதி மீது குற்றச்சாட்டு: இந்த விஷயத்தில் கோமதியும் சேர்ந்து நாடகம் போடுகிறாரா என்றும் பாண்டியன் கேள்வி எழுப்ப, இதனால் கோமதி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். மறுநாள் இதுகுறித்து ராஜி மற்றும் மீனாவிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார். திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளில் தன் மீது தன் கணவன் பாண்டியன் எந்த விஷயத்திற்காகவும் சந்தேகம் கொண்டதில்லை என்றும் ஆனால் தற்போது தான் மீனா மற்றும் ராஜியுடன் இணைந்து நாடகம் போடுவதாக பாண்டியன் கேட்டதை கூறி ஆத்திரத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறார். தொடர்ந்து மீனா மற்றும் ராஜியை வீட்டில் எந்த வேலைகளையும் செய்ய விடாமல் தடுப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
குற்றம்சாட்டும் தங்கமயில்: மீனா மற்றும் ராஜி இருவரும் தங்களது தரப்பு நியாயங்களை கூறவந்த போதும் அதைக் கேட்காமல் அவர்களை ஒதுக்குகிறார் கோமதி. இந்நிலையில் சென்னைக்கு சென்ற சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் வீடு வந்து சேர்கின்றனர். இதனிடையே, ராஜி வீட்டு ஆட்கள் அதிகமாக பேசி விட்டார்களா என்று சரவணன் ஆதங்கத்துடன் கேட்கிறார். இதையடுத்து பேசும் தங்கமயில், மீனா மற்றும் ராஜி மீது குற்றச்சாட்டை வைக்கும்படி பேசுகிறார். வீட்டுக்கு தெரியாமல் ராஜி எப்படி இந்த விஷயத்தில் ஈடுபட்டார் என்றும் மீனா இந்த விஷயத்தில் ராஜியை கண்டித்து இருக்க வேண்டும் என்றும் தங்கமயில் கூறுவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











