Pandian stores 2 Serial: சரவணன் -தங்கமயில் திருமண பத்திரிகை ரெடி.. உற்சாகத்தில் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டிப் போடும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை பாண்டியன் அச்சடித்து கொண்டு வருகிறார். இரு வீட்டார் அழைப்பாக அனைத்து பத்திரிகைகளையும் அச்சடித்து கொண்டு வருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
இந்நிலையில் பத்திரிகைகளை சாமி முன்பு வைத்து கும்பிடும் பாண்டியன் குடும்பத்தினர், அடுத்தக் கட்டமாக அனைவரையும் அழைக்கும் வகையில் லிஸ்ட் போட தயாராகின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த சுவாரசியங்களை பார்க்க முடிந்தது. இதனிடையே இந்த திருமணத்தை குலைக்கும் வகையில் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் எந்தமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் காணமுடியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது கல்யாண எபிசோட் களைகட்டி வருகின்றன. சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள சூழலில் இடையில் குட்டி கலாட்டாவாக குமரன் பாண்டியனை அடிக்க, அவரை பதிலுக்கு அடித்து துவைக்கின்றனர் சரவணன், செந்தில் மற்றும் கதிர். இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்கின்றனர், ராஜியின் அதிரடி நடவடிக்கையால் அவர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தப்பிக்கின்றனர்.

பிரச்சினையை கொளுத்திப்போடும் பாக்கியம்: இந்நிலையில் தங்கமயில் அம்மா பாக்கியம் மற்றும் அப்பா இருவரும் சரவணன் மற்றும் அவரது தம்பிகளுக்கு கொடுக்குமாறு மட்டன் சூப் செய்துக் கொண்டு வருகின்றனர். மேலும் மட்டன் தொக்கும் இருப்பதாக பாக்கியம் கூறுகிறார். இதனால் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் நெகிழ்ச்சிக்குள்ளாகின்றனர். இதனிடையே வீட்டை சுற்றி பார்க்கும் பாக்கியம், சரவணனுக்கு தனியாக ரூம் இல்லையா என்று அடுத்த பிரச்சனையை கொளுத்தி போடுகிறார். திருமணம் நடந்தவுடன் உடனடியாக அவருக்கு ரூம் ரெடி செய்து தருவதாக கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் கூறுகின்றனர்.

கல்யாண பத்திரிகை ரெடி: இதனிடையே கல்யாண பத்திரிகை அடிப்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர். அப்போது தாங்களே அடித்துக் கொள்வதாக பாண்டியன் கூறுகிறார். பாக்கியம் அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாக கூற, பார்த்துக் கொள்ளலாம் என்று பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதனிடையே பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்திற்கான அழைப்பிதழை இரு வீட்டார் அழைப்பாக மேற்கொண்டு அச்சடித்து கொண்டு வருகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர். கோமதி பத்திரிகைகளை சாமி முன்பு வைத்து கும்பிடும் சூழலில், அடுத்தடுத்து பத்திரிகைகளை அனைவரும் பிரித்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்று பாண்டியன் கூறுகிறார்.

செந்திலை முறைக்கும் மீனா: மூன்று -நான்கு நாட்கள் லீவு போடுமாறு மீனாவிடம் பாண்டியன் கூறுகிறார். ஆனால் தனக்கு அதிகமான லீவு இல்லை என்று மீனா கூறுகிறார். ஆனால் அதை ஏற்காத பாண்டியன், அவசரத்திற்கு தானே லீவு போடுகிறோம் அதனால் கண்டிப்பாக லீவ் கிடைக்கும் என்று கூறுகிறார். இதையடுத்து மீனா செந்திலை முறைப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த சுவாரசியங்களை பார்க்க முடிந்தது. சரவணன் மற்றும் தங்க மயிலின் திருமணத்திற்கான பத்திரிகைகளே அடித்து வந்துவிட்ட சூழலில் இவர்களது திருமணத்தை குலைக்கும் வகையில் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











