பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: மன்னிப்பு கேட்ட கதிர்.. தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்ன பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் ராஜி வீட்டிற்கு தெரியாமல் ஹோம் டியூஷன் சென்றது மற்றும் அதையொட்டி ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா பாண்டியனை கேவலமாக பேசியது ஆகியவற்றையொட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகின. நடந்த சம்பவத்தால் பாண்டியனை விட கோமதி மிகுந்த ஆத்திரப்படுகிறார்.
தன்னுடைய கணவன் கேவலப்பட்டது ஒருபுறம் இருக்க, தான் மிகவும் நம்பிய தன்னுடைய மருமகள்கள் மீனா மற்றும் ராஜி இருவரும் இந்த விஷயத்தை தன்னிடம் கூறாமல் மறைத்ததும் அவரை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரை சமாதானப்படுத்த முயலும் மீனா மற்றும் ராஜியின் முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டிற்கு தெரியாமல் ராஜி ஹோம் டியூஷன் எடுத்த நிலையில், அதை தெரிந்துக் கொண்ட அவரது அப்பா மற்றும் சித்தப்பா, பாண்டியனை கேவலமாக பேசுகின்றனர். வீட்டிற்கு வந்த மருமகள்களை வேலைக்கு அனுப்பி பாண்டியன் வீட்டில் உலை வைப்பதாக அவர்கள் கேவலப்படுத்திய நிலையில், அவர்களிடம் பதில் பேச முடியாமல் பாண்டியன் உள்ளிட்டவர்கள் அவமானப்படுகின்றனர். சண்டை முடிந்து வீட்டிற்குள் அனைவரும் வந்த நிலையில் ராஜியை கோமதி தொடர்ந்து திட்டுகிறார். அவரும் தொடர்ந்து சாரி கேட்கிறார். கதிருக்காக ராஜி ஹோம் டியூஷன் எடுத்த நிலையில், அவரும் ராஜியை திட்டுகிறார்.
கோபத்தில் கோமதி: இதை பார்த்துக் கொண்டிருக்கும் மீனா, ராஜி, கதிருக்காகத்தான் வேலைக்கு செல்ல நினைத்ததகவும் தான்தான் அந்த டியூஷனை ஏற்பாடு செய்துக் கொடுத்ததாகவும் ராஜி உழைக்க நினைத்ததில் என்ன தவறு என்றும் கேட்கிறார். இதனால் கோமதியின் ஆத்திரம் மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபத்தில் இருக்கும் கோமதியை சமாதானப்படுத்தும் முயற்சியில் மீனா மற்றும் ராஜி ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்களின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் கோமதி இல்லை. அவர்களை தன்னுடைய மகள்களை போல நினைத்ததற்கு தன்னிடமே இந்த விஷயத்தை மறைத்து தன்னை ஏமாற்றியதாக கோமதி கோபப்படுகிறார்.
மன்னிப்பு கேட்ட கதிர்: இந்நிலையில் கடைக்கு தன்னுடைய அப்பாவை ஏற்றிச் செல்லும் செந்தில், அவரை ஒரு தேநீர் கடையில் இறக்கி, மீனா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். மீனா நல்லதை நினைத்து செய்திருப்பாள் என்றும் ஆனாலும் அதனால் முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் பாண்டியன் அவமானப்பட நேர்ந்ததாகவும் கூறி வருத்தத்தை வெளிப்படுததுகிறார். இதனிடையே அங்கு வரும் கதிரும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார். யார் முன்னிலையில் சிறப்பாக வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்று பாண்டியன் யோசிக்கிறாரோ அவர்கள் முன்னிலையிலேயே அவமானப்பட நேர்ந்ததற்கு கதிர் மன்னிப்பு கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
தோளில் கைபோட்டு ஆறுதல்: இதனிடையே மீனா மற்றும் ராஜி எதை நினைத்து இதை செய்திருந்தாலும் வீட்டிலுள்ளவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்கலாம் என்பதாக பாண்டியன் கதிரை சமாதானப்படுத்துகிறார். கதிர் -ராஜி திருமணத்தை தொடர்ந்து கதிரிடம் சரியாக பேசாமல் இருக்கும் பாண்டியன், கதிரின் தோள்களில் கைபோட்டு ஆறுதல் கூற, இதனால் கதிர் நெகிழ்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, தங்கள் தரப்பு நியாயத்தைகூட கேட்காமல் தங்களை குற்றவாளிகளாக்கியது குறித்து மீனா தன்னுடைய வேதனையை ராஜியிடம் கூறுகிறார். அனைத்து ஆண்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
மீனா -ராஜியை சாப்பிட வைத்த பாண்டியன்: இதனிடையே, இரவு அனைவரும் சாப்பாட்டு மேஜையில் இருக்க, அங்கு ராஜி மற்றும் மீனா இல்லாததுகுறித்து பாண்டியன் கேள்வி எழுப்புகிறார். அரசியை அவர்களை சென்று அழைத்து வருமாறு கூறுகிறார். ஆனால் ஆத்திரத்தில் கோமதி அதை தடுக்கிறார். இதனிடையே, வீட்டிற்கு வந்த மருமகள்களை பட்டினி போட்ட அவப்பெயரும் தனக்கு வர வேண்டுமா என்று மீனா மற்றும் ராஜியை அவர் கேட்கிறார். தொடர்ந்து பாண்டியன் வற்புறுத்தியதை தொடர்ந்து அவர்கள் சாப்பிடுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. கோபம் இருந்தாலும் மீனா மற்றும் ராஜி சாப்பிடாமல் இருப்பதை பார்த்து அவர்களை சாப்பிட வைத்த பாண்டியனின் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











