Pandian stores 2: எதிரெதிர் துருவங்களாக காட்டப்படும் மீனா -தங்கமயில்.. மீனாவால் கடுப்பான தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு சரவணன் மற்றும் தங்கமயில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக காணப்பட்டது. பழனிவேல், கதிர் மற்றும் செந்தில் ஆகியோர் அறையில் அலங்காரங்களை சிறப்பாக செய்கின்றனர்.

இதனிடையே, வாழ்க்கை குறித்த பல விஷயங்கள் குறித்து சரவணனுக்கு பாடம் எடுக்கிறார் பாண்டியன். அனாதையாக வரண்டு கிடந்த தன்னுடைய வாழ்க்கை கோமதி வந்தவுடன் தான் சிறப்பானது என்று அவர் சரவணனிடம் கூறுகிறார். இதையடுத்து சரவணனை அலங்காரம் செய்து முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பழனிவேல், கதிர் உள்ளிட்டவர்கள் காத்திருப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட் மிகவும் கலர்ஃபுல்லாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயிலின் முதலிரவுக்கான ஏற்பாடுகளை பழனிவேல், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் செய்வதாக காட்டப்பட்டது. அவர்களது அறையை சிறப்பாக அலங்கரிக்கும் செந்தில் மற்றும் கதிருக்கு இதுபோல தங்களது வாழ்க்கையில் நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

எதிரெதிர் துருவங்களாக மீனா -தங்கமயில்: இதேபோன்ற ஏக்கம் மீனா மற்றும் ராஜிக்கும் ஏற்பட்ட சூழலில் அந்த அறையில் அவர்கள் புகைப்படம் எடுப்பதும் பாடலை ஓட விட்டு ஆடுவதும் என ஃபன் செய்கின்றனர். அப்போது மீனா மற்றும் செந்தில் இருவரும் பாடலுக்கு நடனமாடிக்கொண்டு இருப்பதை அனைவரும் பார்க்கின்றனர். இதையடுத்து செந்தில் மற்றும் மீனா வெட்கத்துடன் அறையைவிட்டு வெளியேறுகின்றனர். இதை பார்க்கும் தங்கமயில் உள்ளுக்குள் புகைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய மாமியார் முன்பு மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார். தொடர்ந்து உள்ளே அறைக்குள் இருக்கும் மீனா வெளியில் வர, தங்கமயில் அந்த அறைக்குள் செல்வதாக காட்டப்படுகிறது.

Television Pandian stores 2 serial Vijay TV

மீனா குறித்து கோபமடையும் தங்கமயில்: அப்போது அவர்கள் இருவரும் அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் காட்டப்படுகின்றனர். இதனால் அடுத்தடுத்து எபிசோடுகளில் மீனா மற்றும் தங்கமயில் இடையில் பிரச்சனைகள் ஏற்படும் என்று யோசிக்கலாம். இந்நிலையில் முதலிரவு அறைக்குள் சென்றவுடன் தங்கமயில் மீனா குறித்து கோபம் அடைகிறார். தங்களது அறையில் வந்து இவர்கள் ஆடலும் பாடலும் செய்கிறார்களே, அவர்களுக்குத்தான் தனியாக அறை கொடுக்கப்பட்டுள்ளதே அதில் செய்து கொள்வதுதானே என்று அவர் பலவாறாக கூறுவுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

மகனுக்கு பாண்டியன் அட்வைஸ்: இதனிடையே தன்னுடைய மகன் சரவணனை வீட்டு வாசலில் உட்கார வைத்து அவருக்கு திருமணம் என்றால் என்ன என்பது குறித்து ஆரம்பித்து தொடர்ந்து பிள்ளைகள், பேரன்கள் என்று வகை வகையாக அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாண்டியன். முதலிரவு அறையில் தங்கமயில் காத்துக் கொண்டிருக்க சரவணனை அங்கு சென்று விடுவதற்காக கதிர், பழனிவேல் ஆகியோர் காத்திருக்கின்றனர். ஆனால் பாண்டியன் சரவணனை விடுவதாக இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் மனைவி என்பவள் எவ்வளவு முக்கியம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X