Pandian stores 2 serial: நான் தப்பு பண்ணிட்டேன்.. கதறி அழுத தங்கமயில்.. பதறி துடித்த சரவணன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அமைந்து வருகிறது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் இந்த சீரியலில் தற்போது சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் வெகு விமரிசையாக ஊரார் மெச்ச நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தின் போது பல பிரச்சனைகள் ஏற்பட்ட சூழலிலும் அனைத்தையும் கடந்து திருமணம் மிக சிறப்பாக நடந்துள்ளது.
இதையடுத்து சரவணன் மற்றும் தங்கமயிலின் முதலிரவுக்கான ஏற்பாடுகளை செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் ஆகியோர் மிகச் சிறப்பாக மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் தொடர்ந்து பேசிவிட்டு இரவு தாமதமாக முதலிரவு அறைக்குள் சரவணன் வருகிறார். அங்கு முன்னதாகவே வந்து காத்திருந்த தங்கமயில் தூங்கி விடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் அதிரடியாக அமைந்திருந்தது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ள சூழலில் அவர்களின் முதலிரவுக்கான ஏற்பாடுகளை செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் ஆகியோர் மேற்கொள்கின்றனர். தன்னுடைய மகனுக்கு சிறப்பான வகையில் திருமணம் செய்து வைத்து விட்டதாக உற்சாகமடைந்துள்ள பாண்டியன், தொடர்ந்து தன்னுடைய மகன் எந்த வகையில் எல்லாம் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்று பேசுகிறார்.
பாண்டியன் உற்சாகம்: தன்னுடைய வாழ்க்கை எப்படி எல்லாம் அடுத்தடுத்த கட்டங்களாக கடந்து வந்துள்ளது என்பது குறித்தும் தன்னுடைய மகனிடம் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்கிறார் பாண்டியன். கோமதியால் தன்னுடைய வாழ்க்கை கலர்புல்லாக மாறியதையும் கூறுகிறார். இதனால் இரவு அதிக நேரம் கழித்து சரவணன், முதலிரவு அரைக்கு செல்கிறார். முன்னதாக சரவணனுக்காக காத்திருந்த தங்கமயில் தூங்கி விடுவதாக காணப்படுகிறது. இதனால் முதலிரவு அறைக்குள் செல்லும் சரவணன், தங்கமயில் ஆழ்ந்து தூங்குவதை பார்த்து அவரை எழுப்பாமல் தானும் அருகில் படுத்து தூங்குகிறார்.
கதறி அழுத தங்கமயில்: இந்நிலையில் அதிகாலை 3:30 மணியளவில் எழுந்திருக்கும் தங்கமயில், தன்னுடைய கணவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வருத்தம் கொள்கிறார். தொடர்ந்து தான் அவருக்காக காத்திருக்காமல் தூங்கிவிட்டதை நினைத்தும் அவர் தன்னை தானே நொந்து கொள்கிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பிக்கிறார். சத்தம் கேட்டு, பதறி அடித்துக் கொண்டு எழும் சரவணன், என்ன ஆயிற்று உடல்நிலை சரியில்லையா, அம்மா ஞாபகம் வந்து விட்டதா என்று பலவாறாக கேள்விகளை எழுப்புகிறார். ஒரு கட்டத்தில் தான் போய் தன்னுடைய அம்மாவை எழுப்புவதாக சரவணன் நகர முயல, தங்கமயில் தடுத்து விடுகிறார்.
குடும்பத்தினர் ஆச்சர்யம்: தான் இரவு முழித்திருக்காமல் தூங்கி விட்டதை நினைத்து தற்போது அழுவதாக தங்கமயில் கூறுகிறார். இதைக் கேட்கும் சரவணன் இதற்காகத்தான் அழுதாயா என்று கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தங்க மயிலும் தான் தவறு செய்து விட்டதாகவும் தன்னை மன்னிக்கும் படியும் தொடர்ந்து அழுகிறார். சரவணன் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தூங்க வைக்கிறார். இந்நிலையில் காலையில் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வரும் கோமதி ஹாலில் மீனா உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சரி நாமே போய் வாசல் பெருக்குவோம் என்று தண்ணீருடன் வெளியில் செல்கிறார்.
அதிரடி காட்டும் தங்கமயில்: ஆனால் அங்கு ஏற்கனவே வாசல் பெருக்கி அழகான வண்ண கோலம் போடப்பட்டு இருப்பதை பார்க்கிறார். தொடர்ந்து சமையலறைக்குள் செல்லும் கோமதி அங்கு காலை டிபன் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதையும் டீ, காபி போடப்பட்டிருப்பதையும் பார்த்து இவ்வளவு காலையில் எழுந்து மீனா இதையெல்லாம் செய்திருக்க முடியாது என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் ஹாலுக்கு வந்து மீனாவை எழுப்புகிறார். இந்நிலையில் பூஜை அறையில் இருந்து சாம்பிராணி புகையுடன் தங்கமயில் பூஜை செய்வதையும் அவர்கள் பார்க்கின்றனர். இதையடுத்து வெளியில் வரும் தங்கமயில், தான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்திருப்பேன் என்று கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.
லிஸ்ட் பெரிதாக போகிறதே: காலையில் எழுந்து வாசல் பெருக்கி, பொங்கல், இட்லி செய்து அதற்கு சாம்பார் சட்னியும் செய்து விட்டதாக தங்கமயில் கூறுகிறார். டீ, காபியும் போட்டு பிளாஸ்கில் வைத்துள்ளதாக அவர் கூறுகிறார். மதிய சமையலுக்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக தங்கமயில் அடுக்க, லிஸ்ட் பெரிதாக போகிறதே என்று மீனாவும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. பாண்டியன் வீட்டில் அவரது கணவர், மாமியார், மாமனார் என அனைவரையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டு அந்த வீட்டின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வருமாறு பாக்கியம், தங்க மயிலுக்கு முன்னதாக அட்வைஸ் செய்த நிலையில் அடுத்தடுத்த தங்கமயில் நடவடிக்கைகள் அதையொட்டியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











