Pandian stores 2 serial: அடுத்த சிக்கலை உருவாக்கிய தங்கமயில்.. ஹோட்டல் ரூம் வாடகை இவ்வளவா?

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் இயல்பான காட்சிகளுடன் அமைந்திருந்தது. அம்மாவையும் அப்பத்தாவையும் பேச வைக்க வேண்டும் என்று கதிர் மற்றும் செந்தில் முன்னதாக திட்டமிட்ட நிலையில் அது குறித்து ராஜியிடம் பேசி தகவலை பெற முயல்கிறார் கதிர். ஆனால் நினைத்தபடி எந்த தகவலும் ராஜியிடம் இருந்து கிடைக்காததால் அவர் ஏமாற்றம் அடைகிறார்.

இந்நிலையில் கவர்மெண்ட் வேலைக்கு செல்வதாக கூறிய செந்திலுக்கு தகுந்தபடியான வேலைகளை பட்டியலிட்டு கொடுக்கிறார் மீனா. மேலும் 250 பக்கத்திற்கு கவர்மெண்ட் வேலை குறித்த தகவல்களை படிக்குமாறு மீனா கூற, செந்தில் இதையெல்லாம் பார்க்காமல் தூங்குவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் இயல்பாக ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் ராஜி வைத்திருந்த அவரது குடும்ப புகைப்படத்தை பார்த்து கதிர் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்வோம் என்றும் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றும் ராஜி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா குறித்து கதிர் கேள்வி எழுப்பிய நிலையில் அப்பா மற்றும் சித்தப்பா மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள் என்று ராஜி கூறுகிறார்.

கதிரின் திட்டம்: தன்னுடைய திருமணப் பிரச்சினை அவர்களது குணத்தை மாற்றிவிட்டதாகவும் ராஜி கூறுவதாக காணப்பட்டது. தொடர்ந்து அப்பத்தா குறித்த கேள்விக்கும் பதிலளிக்கும் ராஜி, அப்பத்தா வீட்டை விட்டு அதிகமாக வெளியில் செல்ல மாட்டார் என்றும் கோயில் உள்ளிட்ட சில இடங்களுக்கு அம்மா, சித்தி அல்லது அப்பாவுடன் சென்று வருவார் என்றும் ராஜி கூறுகிறார். தன்னுடைய அம்மாவையும் அப்பத்தாவையும் சந்திக்க வைக்க திட்டமிட்டு வரும் கதிர், இந்த தகவல்களை கேட்டுக் கொண்டு எதுவும் தேறவில்லை என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து இதையெல்லாம் ஏன் கேட்கிறாய் என்று ராஜி கேட்பதாகவும் அமைந்திருந்தது.

மீனாவின் பிளான்: இந்நிலையில் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த செந்திலிடம் வந்து அவரை வலுக்கட்டயமாக எழுப்பிய மீனா, கவர்மெண்ட் வேலைக்கு முயற்சிப்பதாக கூறிவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறாயே என்று கேள்வி எழுப்புகிறார். அது குறித்து தன்னுடைய நண்பர்களிடம் தான் பேசியதாகவும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் செந்தில் கூறுகிறார். இந்நிலையில் நான்கு பக்கத்திற்கு செந்திலுக்கு ஏற்ற மாதிரியான வேலைகளை லிஸ்ட் செய்து கொண்டு வந்த மீனா அதை படிக்குமாறும் அவருக்கு விருப்பமான வேலையை தேர்ந்தெடுக்குமாறும் கூறுகிறார்.

சரவணன் சந்தேகம்: தொடர்ந்து இந்த வேலைகள் குறித்து 250 பக்கத்திற்கு pdfஐயும் கொடுத்து படிக்க சொல்கிறார். இதை பார்த்து மலைத்துப் போகும் செந்தில் தூங்கிவிடுகிறார். இதனிடையே, ஐந்தாயிரம் ரூபாய்க்கு சென்னையில் ஆன்லைன் மூலமாக தங்கமயில் ரூம் புக் செய்ய அது குறித்து தொடர்ந்து தன்னுடைய சந்தேகத்தை எழுப்புகிறார் சரவணன். 5000 ரூபாயில் மூன்று நாட்கள் சொகுசான ஹோட்டலில் தங்குவது எப்படி சாத்தியம் என்று சரவணன் கேள்வி எழுப்புகிறார். ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் அப்பாவிற்கு செலவு வைக்க கூடாது என்றும் அவர் உறுதியுடன் கூறுகிறார்.

பாக்கியம் கொடுத்த அட்வைஸ்: சரவணன் தூங்கிய பின்பு தான் புக் செய்த ரூம் குறித்து தொடர்ந்து பார்க்கும் தங்கமயில் 20,000 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் என்பதை பார்த்தவுடன் அலறியடிக்கிறார். இதையடுத்து தன்னுடைய அம்மாவிடம் இந்த விஷயம் குறித்து நள்ளிரவில் போன் மூலம் பேசுகிறார். அவரோ, இதுகுறித்து தற்போது குடும்பத்தினரிடம் கூற வேண்டாம் என்றும் சென்னைக்கு சென்ற பிறகு தெரியாமல் தான் செய்து விட்டதாக கூறிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் தங்கமயில் ஹாலில் நடைபோட்டுக் கொண்டிருக்க அங்கு ஒரு உருவத்தை பார்த்து அவர் அலறியடிப்பதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X