Pandian stores 2 serial: சாப்பிடும் போண்டாவை பிடுங்கிய தங்கமயில்.. கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து தன்னுடைய புகுந்த வீட்டில் ஆதிக்கத்தை வெளிப்படுத்த நினைக்கும் தங்கமயில், மீனா உள்ளிட்ட அனைவரையும் கடுப்புக்குள்ளாக்கி வருகிறார்.

திருமணமாகி வந்த அடுத்த நாளே, வீட்டில் அனைத்து வேலைகளையும் தானே செய்து கோமதி மற்றும் பாண்டியனை இம்ப்ரஸ் செய்கிறார். குறிப்பாக பாண்டியன் மிகப்பெரிய அளவில் அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறார். தன்னுடைய மனைவியின் சமையலை அவர் ஒருமுறை கூட பாராட்டாத நிலையில் தங்கமயிலை அனைவர் முன்னிலையில் பாராட்டுகிறார்.

Televisiion Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பாண்டியன் குடும்பத்தில் தொடர்ந்து தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்த தங்கமயில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய அம்மாவின் தொடர் அட்வைசால் அவர் தன்னுடைய புகுந்த வீட்டில் அடுத்தடுத்த அட்ராசிட்டிகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக திருமணமான மறுநாளே வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்து பாண்டியனை இம்ப்ரஸ் செய்கிறார். ஒரே நாளிலேயே பாண்டியன் தங்கமயில் பக்கம் சாய்வதாக அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன.

கதிரை திட்டும் பாண்டியன்: தங்கமயில் வீட்டிற்கு மறு வீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பும் கதிர் மற்றும் ராஜி வந்த வாகனம் வழியில் ரிப்பேர் ஆகிறது. அப்போது வெயிலில் நின்று கொண்டிருக்கும் ராஜிக்கு மயக்கம் ஏற்பட, அவரை ஆட்டோவில் கொண்டு வந்து வீட்டில் சேர்த்து விட்டு மீண்டும் தன்னுடைய வாகனத்தை ரிப்பேர் செய்ய கதிர் செல்கிறார். நீண்ட நேரமாக அவர் கடைக்கு வராததால் பாண்டியன் அவரை வீட்டில் அனைவரும் முன்னிலையும் குறிப்பாக தங்கமயில் முன்னிலையில் வைத்து கண்டமேனிக்கு திட்டுகிறார். இதையடுத்து தங்கமயில் சிரிப்பதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது.

கடுப்பான ராஜி: இது குறித்து ராஜி கடுப்பாகிறார். மற்றவர்களை காட்டிலும் கதிர் மீது எப்போதுமே பாண்டியன் தனிப்பட்ட கோபத்தை காட்டுவதாக அவர் நினைக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய மாமனாரிடம் பேச நினைக்கிறார். ஆனால் அதை விட்டுவிடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவை அலுவலகத்தில் டிராப் செய்யும் செந்தில் அவரை இரவு உணவுக்கு தாங்கள் வழக்கமாக செல்லும் ரெஸ்டாரண்டிற்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுக்கிறார். தொடர்ந்து மீனாவை தாமதமாக சென்று அலுவலகத்தில் பிக்கப் செய்கிறார். அவரை அடுத்தடுத்த டெலிவரிக்கு செல்லும்படி பாண்டியன் அறிவுறுத்திய நிலையில் அதை செய்யாமல் மீனாவை பிக்கப் செய்ய செல்கிறார் செந்தில்.

மீனா வாங்கிவந்த ஸ்நாக்ஸ்: இதையடுத்து செந்திலுக்கு பாண்டியன் கால் செய்ய, தன்னுடைய வண்டி வழியில் ரிப்பேர் ஆகிவிட்டதாக கூறி சமாளிக்கிறார் செந்தில். அடுத்தடுத்து இருவரின் வாகனமும் ரிப்பேர் ஆகுமா என்று கேள்வி கேட்கும் பாண்டியன், செந்தில் மற்றும் மீனா சாப்பிடும் அதே ஹோட்டலுக்கு கலெக்ஷனுக்காக வருகிறார். அப்போது செந்தில் மற்றும் மீனா சாப்பிட்டுக்கொண்டு பேசி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வரும் மீனா, அனைவருக்கும் வழியில் சுட சுட போண்டா வாங்கி வந்து கொடுக்கிறார். கோமதி அரசி உள்ளிட்ட அனைவரும் அதை ஆர்வத்துடன் எடுத்து சாப்பிடுகின்றனர்.

தங்கமயில் அட்ராசிட்டி: ஆனால் அவர்களிடமிருந்து அதை பிடுங்குகிறார் தங்கமயில். வெளியில் விற்கும் தின்பண்டங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்று கூறும் தங்கமயில், அவர்கள் எந்த எண்ணெயில் செய்தார்களோ எத்தனை நாட்களுக்கு முன்பு செய்தார்களோ என்று பலவாறாக பேசுகிறார். தான் நல்ல ஹோட்டலில் தான் வாங்கி வந்ததாக மீனா கூறினாலும் அதை தங்கமயில் கேட்கவில்லை. கோமதி அரிசி உள்ளிட்ட அனைவரும் இதனால் கடுப்பாகின்றனர். இதனால் மீனா கோமதியிடம் இதெல்லாம் ஓவர் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தங்க மயிலின் இந்த செயலால் மீனா மிகுந்த கடுப்பாவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X