Pandian stores 2 serial: மீனாவிற்காக அவரது அப்பாவிடம் பேசிய கோமதி.. கதறியழுத மீனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்த தொடரில் தற்போது சரவணன் -தங்கமயில் திருமணம் தொடர்பான காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இவர்களின் திருமணத்திற்காக திருமண பத்திரிகை அடித்து முடித்துள்ளார் பாண்டியன். இரு வீட்டார் அழைப்பாக இந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

சரவணன் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக தன்னுடைய அப்பா வீட்டிற்கு செந்திலுடன் செல்கிறார் மீனா. ஆனால் அங்கு உள்ளேகூட அழைக்காமல் அவமானமாக பேசி அனுப்புகிறார் அவர். இதனால் மனமுடைந்து அழுகிறார் மீனா. அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் கோமதி, பாண்டியன் மற்றும் செந்தில் திணறியதை பார்க்க முடிந்தது.

Vijay TV s Pandian stores 2 serial today 3rd May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரில் செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் சரவணனின் திருமணம் முன்னதாக தடைப்பட்டது. ஆனால் கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலமாக சரவணனுக்கும் தங்கமயிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நிகழ்வுகளை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. சரவணனுக்கும் தங்கமயிலுக்கும் திருமண பத்திரிகையை அடித்து முடித்துள்ளார் பாண்டியன். இருவீட்டார் அழைப்பாக இந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.

மீனாவை அவமதிக்கும் அப்பா: இந்த திருமணத்திற்கு தன்னுடைய தந்தையை அழைக்கும்வகையில் மீனா மற்றும் செந்தில் இருவரும் செல்கின்றனர். முன்னதாக பாண்டியன் மற்றும் கோமதி அவர்களை அழைக்க செல்வதாக திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்கள் சென்றால் தன்னுடைய அப்பா கண்டிப்பாக அவமானப்படுத்துவார் என்று கூறி மீனா செல்கிறார். ஆனால் அவர் நினைத்தபடியே வீட்டு வாசலிலேயே அவர்களை நிறுத்தி வைத்து அவமானப்படுத்துகிறார் அவர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகும் மீனா, வீட்டிற்கு வந்தவுடன் கதறி அழுகிறார். அவரை தேற்றும் வழி தெரியாமல் தவிக்கிறார் கோமதி.

மீனாவிற்காக சமாதானம் பேசும் கோமதி: இதனிடையே, மறுநாள் ராஜியை அழைத்துக் கொண்டு மீனாவின் அம்மா மற்றும் அப்பாவை பார்க்க போகிறார் கோமதி. அவர்களிடம் சமாதானமாக பேசும் கோமதி, அவர்களை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து மீனா அழுதுக் கொண்டே இருந்ததாக கூறுகிறார். இதை கேட்கும் அவர்கள் வருத்தம் கொள்வதாக இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அவர்களையும் வீட்டு வாசலிலேயே வைத்து அனுப்புகிறார் மீனாவின் அப்பா. இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து வீடு வரும் மீனா, இதைக்கேட்டு மிகுந்த வருத்தம் கொள்கிறார். அவரிடம் சென்று ஏன் அவமானப்பட்டீர்கள் என்று கேட்கிறார்.

தங்கமயிலின் ஆசை: 28 ஆண்டுகளுக்கு முன்பு தான் நின்றதுதான் தனக்கு மீனாவை பார்த்தபோது தோன்றியதாக கோமதி அதற்கு விளக்கம்சொல்கிறார். இதனிடையே தங்கமயில் வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க சென்ற சரவணன், கோயிலுக்கு செல்லும் தங்கமயிலை அங்கே அழைத்து செல்கிறார். உடன் சென்ற கதிர், ஆட்டோ பிடித்து செல்வதாக கூறுகிறார். இதனிடையே திருமணம் குறித்து தனக்கு கனவு இருப்பதாகவும் சினிமாவில் நடப்பது போல, மெஹந்தி, ஹல்டி, ரிசப்ஷன் என தன்னுடைய திருமணம் வண்ணமயமாக நடக்க தான் விரும்பியதாகவும் தங்கமயில் கூறுகிறார். இதுகுறித்து தன்னுடைய அப்பாவிடம் தான் பேசுவதாக சரவணன் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X