Pandian stores 2: அடாவடி குடும்பத்தில் சிக்க தயாராகும் பாண்டியன்.. என்னா போடு போடுறாங்க தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில மாதங்களிலேயே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அடுத்தடுத்த இயல்பான மற்றும் பரபரப்பான காட்சிகளை கொடுத்து வருகிறார் இயக்குநர். இந்த சீரியலில் பாண்டியன் -கோமதி தம்பதி, அவர்களின் மகன்கள், மகள்கள், எப்போதும் சண்டைக்கு நிற்கும் மைத்துனர்கள் என கேரக்டர்களை வைத்துக் கொண்டு சிறப்பான கதைக்களத்தை கொடுத்து வருகிறார். இந்த சீரியலில் 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த பாண்டியன் மற்றும் கோமதி, மிகுந்த சிரமங்களுக்கிடையில் தற்போது சிறப்பாக வாழ்ந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது.

தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்துவந்த பாண்டியனுக்கு கதிர் மற்றும் செந்திலின் அடுத்தடுத்த திருமணங்கள் இடியாக இறங்க, ஆயினும் சமாளித்து அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கிறார். இருந்தபோதிலும் தன்னுடைய இளைய மகன் கதிரிடம் மட்டும் பேசாமல் இருக்கிறார். அவர் தன்னுடைய மைத்துனரின் பெண்ணையே திருமணம் செய்த போதிலும், அவர்களிடமிருந்து 100 சவரன் நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றதாக பழி ஏற்பட்ட நிலையில், அதையொட்டி கதிரிடம் பேசாமல் இருக்கிறார் பாண்டியன். முன்னதாக கதிருக்கு விருப்பமில்லாமல் ராஜியுடன் அவரது திருமணம் நடக்கிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 4th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து அதிகமான டிஆர்பியையும் பெற்று சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக காணப்படுகிறது. இயல்பான கதைக்களத்துடன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த சிரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு சிறப்பாக ரசிகர்களை கட்டிப்போட்டது. இந்நிலையில் அப்பா -மகன்களின் பாசத்தை மையமாக கொண்டு தற்போது சீரியலின் 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் பாண்டியன் -கோமதி தம்பதி மற்றும் அவர்களின் மகன்கள், மகள்கள் என இந்த சீரியலின் கேரக்டர்கள் காணப்படுகின்றனர்.

கைக்கூடிய சரவணன் திருமணம்: செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் கேள்விக்குறியான சரவணனின் திருமணம் தற்போது கைக்கூடியுள்ளது. அதிர்ந்தும் பேசாத சரவணனின் திருமணத்திற்காக பல்வேறு முயற்சிகளை குடும்பத்தினர் எடுத்த நிலையில், தற்போது கல்யாண வைபோகம் மூலம் அவருக்கு தங்கமயில் என்ற பெண்ணை பாண்டியன் குடும்பத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர். சரவணனை போலவே தங்கமயிலும் அதிர்ந்தும் பேசாதவர் என்று பாண்டியன் தன்னுடைய குடும்பத்தினரிடையே பாராட்டி பேசுகிறார். அவரது அம்மா மற்றும் அப்பாவும் அமைதியான சுபாவம் கொண்டவர்கள் என்றும் கூறுகிறார்.

சந்தேகத்தை கிளப்பும் மீனா: இதனால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் எப்போதும் போல மீனா, இந்த விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்புகிறார். பெண் வீட்டார் குறித்து விசாரிக்க அவர் கூறுகிறார். ஆனால் பாண்டியனோ, ஒருவர் முகத்தை பார்த்தவுடன் அவர்கள் சுபாவம் வெளிப்பட்டுவிடும் என்று கூறுகிறார். மறுபக்கம் தங்கமயில், அவரது அப்பா, அம்மா என அனைவரும் தங்களது வீட்டின் முன்பு டூ வீலரை பார்க் செய்தவரிடம் அடிதடி சண்டையில் ஈடுபடுவதாக காட்டப்படுகிறது. இதில் அதிகமாக தங்கமயில் ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். அடாவடியான ஒரு குடும்பத்தின் தன்னுடைய மகனுக்கு பெண் பார்த்துள்ளார் பாண்டியன். இதனால் சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதாக ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

தங்கமயில் வீட்டிற்கு செல்லும் பாண்டியன் குடும்பத்தினர்: தொடர்ந்து வீட்டிலுள்ள மற்றவர்களும் பெண்ணை மற்றும் அவர்களது குடும்பத்தை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு செல்ல பாண்டியன் பெண்ணின் தந்தையிடம் பேசுகிறார். இதனிடையே தன்னுடைய கணவன் செந்திலிடம் மீனா இதுகுறித்து பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தன்னுடைய மாமனார் பாண்டியன் சரவணன் திருமண விஷயத்தில் மிகவும் அவசரப்படுகிறாரோ என்று கேள்வி எழுப்புகிறார். சரவணன் திருமண விவகாரத்தில் அனைத்தும் மிகவும் வேகமாக நடப்பதாகவும் அவர் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X