Pandian stores 2 serial: பழனிவேல் திருமணத்தை பேசி முடித்த பாண்டியன்.. நிறுத்த சதி செய்யும் பிரதர்ஸ்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக இருந்துவருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரில் பாண்டியன், கோமதி என லீட் கேரக்டர்களில் ஸ்டாலின் மற்றும் பிரபல நடிகை நிரோஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இவர்களை சுற்றியே இந்த சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது.
பாண்டியன் மற்றும் கோமதி இளம் வயதில் காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்த நிலையில், அவமானத்திற்கு உள்ளான கோமதியின் அண்ணன்கள் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆனநிலையிலும் பகைமையுடன் இருப்பதாகவும் அதையொட்டியும் சீரியலின் கதைக்களம் இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் இருந்துவந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலிடம் தன்னுடைய இடத்தை மீண்டும் விட்டுக் கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூன்றாவது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது. பாண்டியன் -கோமதி தம்பதி மற்றும் அவர்களின் மூன்று மகன்கள், 2 மகள்கள், மருமகள்கள் என இந்த சீரியலின் கேரக்டர்கள் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேரக்டரை கொண்டிருந்தாலும் குடும்ப ஒற்றுமை குலையாமல் காணப்படுவது பார்க்கும் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகிறது.
பழனிவேல் திருமணம்: இளம் வயதில் பாண்டியனை காதலித்து கோமதி திருமணம் செய்த நிலையில், தங்களின் குடும்ப கௌரவத்தை அவர் சிதைத்து விட்டதாக பகைமை பாராட்டி வருகின்றனர் கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல். ஆனால் சிறுவயதிலேயே தன்னுடைய அக்கா மற்றும் மாமாவிடம் பழனிவேல் வந்துவிட்டதாகவும் அவர் மட்டுமே இரு வீட்டாருக்கும் பாலமாக இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. பாண்டியனின் அடுத்தடுத்த மகன்களுக்கு திருமணம் நடந்த நிலையில் பழனிவேலுக்கு அதிகமான வயதான சூழலிலும் அவருக்கு திருமணம் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது திருமணத்தை பேசி பாண்டியன் முடித்துள்ளார்.
சதி செய்யும் முத்துவேல் & சக்திவேல்: ஆனால் தங்களின் தம்பிக்கு அவர் ஏன் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கோபம் முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் காணப்படுகிறது. இதனால் தம்பி என்றும் பாராமல் பழனிவேலின் திருமணத்தை நடக்கவிடாமல் செய்யும்படி முத்துவேல் கூற, அதற்காகவே காத்திருந்தாற்போல ஓகே சொல்கிறார் சக்திவேல். மறுநாள் பழனிவேலின் நிச்சயதார்த்தத்தையொட்டி அடுத்தடுத்து வேலைகளை ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கிறார் பாண்டியன். அந்தவகையில் உறவினர்களை அழைப்பது, துணிமணிகள், மோதிரம் வாங்குவது என அனைத்து வேலைகளையும் குடும்ப உறுப்பினர்கள் செய்து முடிக்கின்றனர்.
நெகிழ்ச்சியில் பழனிவேல்: தன்னுடைய அண்ணன்களே தன்னுடைய திருமணம் குறித்து யோசிக்காமல் இருக்கும் நிலையில், தன்னுடைய அக்கா புருஷன் பாண்டியன் இதை சிறப்பாக நடைமுறை படுத்துவது குறித்து பழனிவேல் தொடர்ந்து தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். நிச்சயதார்த்தத்திற்கே வாழைமரம், தோரணம் என பாண்டியன் தடபுடல் படுத்த அவரது நெகிழ்ச்சி அளவிற்கு மீறி போகிறது. இந்நிலையில் 40 வயதை நெருங்கும் அவரது நிச்சயதார்த்தம் நடக்குமா அல்லது அவரது அண்ணன்களின் சதியால் நடக்காமல் போகுமா என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











