அந்தப்புள்ள அப்படியா சொல்லுச்சு.. மீனா குறித்து போட்டுக் கொடுத்த தங்கமயில்.. குழப்பத்தில் சரவணன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இன்றைய எபிசோடில் வழக்கம் போல தங்கமயில் சமைக்க வர அதை தடுத்து தானே சமைக்கிறார் கோமதி. சிறிது நாட்களாக தன்னிடமிருந்து பறிபோன சமையல் நிர்வாகத்தை மீண்டும் கையிலெடுக்கிறார்.
இதுகுறித்து வழக்கம்போல தன்னுடைய கணவன் சரவணனிடம் குற்றம் சாட்டுகிறார் தங்கமயில். அவரும் தன்னுடைய அம்மாவை விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்துகிறார். இந்நிலையில் மீனா குறித்தும் தங்கமயில் சரவணனிடம் பற்ற வைக்கிறார். இதையடுத்து சரவணன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கோமதி தன்னுடைய அதிரடியை காட்டத் துவங்கி உள்ளார். திருமணம் ஆகி வந்த மறுநாள் முதல் சமையலறையில் தன்னுடைய ஆதிக்கத்தை துவங்கினார் தங்கமயில். அடுத்தடுத்து விதவிதமாக சமைத்து போட்டு பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பாராட்டு பெற்றார். தொடர்ந்து தன்னுடைய கணவன் சரவணன் மற்றும் பாண்டியனுக்கும் கடைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து வருகிறார். அவர் இப்படி சாப்பாடு கொண்டு வருவதால் வீட்டுக்கு வந்து செல்லும் நேரம் மிச்சமாவதாக பாண்டியன் பாராட்டு தெரிவிக்கிறார்.
தொடர்ந்து கடுப்பேற்றும் தங்கமயில்: இதனால் அடுத்தடுத்து தன்னுடைய ஆதிக்கம் வீட்டில் பறிபோவதாக கோமதி கடுப்பாகிறார். தான் செய்யாதே என்று சொல்லும் விஷயங்களை சிரித்துக்கொண்டே தங்கமயில் செய்வதை பார்க்கும் கோமதி தொடர்ந்து தன்னுடைய வருத்தத்தை ராஜி மற்றும் மீனாவிடம் பகிர்கிறார். என்ன சொன்னாலும் அடங்க மாட்டேன் என்கிறாள் என்று தங்கமயில் குறித்து கோமதி கூறுகிறார். இனிமேல்தான் மாமியார் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கப் போவதாகவும் அவர் கூறினார். பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர் கூறிய நிலையில் உடனடியாக தன்னுடைய மாமனாருக்கே கால் செய்து விட்டு, சாப்பாட்டை தங்கமயில் எடுத்து செல்கிறார்.
சமையல் நிர்வாகத்தை கையிலெடுத்த கோமதி: இந்நிலையில் அன்றைய தினம் இரவு கோமதி தானே சமைக்கிறார். தன்னுடைய கணவர், மகன்கள் என யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்பது தனக்கு தான் தெரியும் என்றும் தங்கமயிலிடம் கூறி, அவர் தன்னுடைய சமையலுக்கு உதவி செய்தால் மட்டும் போதும் என்று கண்டிப்பாக கூறுகிறார். இதனால் தங்கமயில் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறார். இதுகுறித்து சரவணனிடம் இரவு தங்கமயில் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தங்கமயில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தன்னுடைய அம்மா அப்படி செய்திருப்பார் என்று சரவணன் தங்கமயிலை சமாதானப்படுத்துகிறார்.
மீனா குறித்து சரவணனிடம் புகார்: இந்நிலையில் அடுத்ததாக மீனா குறித்து வத்தி வைக்கிறார் தங்கமயில். அன்றைய தினம் மாலை ஸ்னாக்ஸ் வாங்கி வந்த மீனாவிடம் வெளியில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டால் உடல்நலம் கெடும் என்று தான் கூறியதாகவும் ஆனால் அதற்கு மீனா தான் சம்பாதிப்பதாகவும் தனக்கு பிடித்த விஷயங்களை தான் வாங்கி சாப்பிடுவதாகவும் அதில் தங்க மயிலுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதாகவும் பற்ற வைக்கிறார். இதையடுத்து மீனா அப்படியா கூறினார் என்று சரவணன் கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
பாண்டியனை அதட்டும் கோமதி: இதனிடையே நள்ளிரவில் லேட்டாக வந்தால் காலை உடைப்பேன் என்று பாண்டியன் கூறியதால் இரவில் வந்து கதவை தட்ட வேண்டாம் என்றும் தனக்கு கால் செய்தால் தான் வந்து கதவை திறப்பதாகவும் ராஜி கதிரிடம் கூறுகிறார். அதேபோல ராஜி கதவை திறந்துவிட, இதனால் முழிக்கும் பாண்டியன், கதிரை திட்ட கிளம்புகிறார். இதை பார்க்கும் கோமதி அவன் லேட்டாக வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை நீங்களா போய் கதவை திறந்து சாப்பாடு போடுகிறீர்கள் என்பதாக கூறி பாண்டியனை அதட்டி படுக்க வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











