Pandian stores 2 serial: மாமியாரையே புலம்ப வைத்த தங்கமயில்..அட இது என்ன புது ட்விஸ்டா இருக்கு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தங்கமயில் ஒற்றை ஆளாக மூன்று வேளையும் வீட்டில் உள்ள 10 பேருக்கும் ருசியாக சமைத்து போடுவது குறித்து பாண்டியன் தொடர்ந்து பாராட்டுகிறார்.

தங்கமயில் போல சமைக்க முடியுமா என்று ராஜி மற்றும் மீனாவிற்கும் அவர் சவால் விடுகிறார். இருவரும் தங்களால் முடியும் என்று கூறும் சூழலில் பொறாமை பட வேண்டாம் என்று மீனாவை பார்த்து பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் பாண்டியனின் இந்த செயல்பாடுகள் குறித்து கோமதியும் தன்னுடைய மருமகள்கள் மீனா மற்றும் ராஜியிடம் கடுப்புடன் பேசுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டன.

Television Pandian stores 2 serial Vijay TV 2


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய கணவர், மாமனார், மாமியார் என அனைவரையும் கவரும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் தங்கமயில். அவர் அடுத்தடுத்து மூன்று வேளையும் வீட்டில் உள்ள அனைவருக்கும் சேர்த்து சமைத்து போடுவதும் வீட்டு வேலைகளை செய்வதுமாக இருப்பதால் மற்றவர்களை எப்படியோ ஆனால் தன்னுடைய மாமனாரை சிறப்பாகவே கவர்ந்துள்ளார். தங்கமயில் குறித்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரிடமும் மிகவும் உயர்வாக பேசும் பாண்டியன் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் சவால்: வீட்டில் உள்ள பத்து பேருக்கு மூன்று வேளையும் விதவிதமாக தங்கமயில் சமைத்துப் போடுவதாகவும் அதிலும் ருசியாக சமைத்து போடுவதாகவும் பாராட்டும் பாண்டியன் ராஜி மற்றும் மீனாவால் இது சாத்தியமா என்றும் அனைவர் முன்னிலையிலும் கேள்வி எழுப்புகிறார். இதனால் கடுப்பாகும் ராஜி மற்றும் மீனா தங்களாலும் இதுபோல சமைக்க முடியும் என்று பதிலுக்கு கூறுகின்றனர். இதெல்லாம் வாய் பேச்சுக்கு தான் உதவும் என்று கூறும் பாண்டியன் தொடர்ந்து மீனாவை பார்த்து தங்க மயிலை பார்த்து பொறாமைப்பட வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.

பொறாமைப்படுவதாக விமர்சனம்: மீனாவும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். தொடர்ந்து மாமனாரிடம் சமையல் விஷயத்தில் எல்லாம் யாராவது பொறாமைப்படுவார்களா, இது மிகச் சிறிய விஷயம் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக மீனாவை அழைத்துக் கொண்டு செந்தில் ஹோட்டலுக்கு டின்னருக்கு செல்ல அங்கே வரும் பாண்டியன் அவர்களை பார்த்து விடுகிறார். ஆனால் பாண்டியனிடம் பொய் சொல்லிவிட்டு செந்தில் மீனாவை டின்னருக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் மறுபடியும் கடைக்கு வந்தபோது சித்தப்பா எதிரிலேயே அவரை வறுத்தெடுக்கிறார் பாண்டியன்.

அப்பாவிடம் திட்டு வாங்கும் செந்தில்: இதனால் முகம் சுண்டி போகிறார் செந்தில். தொடர்ந்து சித்தப்பாவிடம் தான் தான் சிறு குழந்தையா தன்னுடைய மனைவியை சிறிது நேரம் வெளியில் கூட்டி செல்வதற்குகூட தனக்கு அவர் பர்மிஷன் கொடுக்காமல் இருக்கிறார். அவர் பர்மிஷன் கொடுத்தால் தான் ஏன் அவரிடம் சொல்லாமல் செல்லப் போகிறேன் என்று பலவாறாக புலம்பி தீர்க்கிறார். இதையடுத்து வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க தங்கமயிலை உயர்த்தி பேசும் பாண்டியன் கோமதியையும் மட்டம் தட்டி பேசுவதாக காணப்பட்டது. இதையடுத்து சமையலறையில் ராஜி மற்றும் மீனாவிடம் கோமதி புலம்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. வந்த இரு தினங்களில் தன்னுடைய மாமியாரையே புலம்ப வைத்துள்ளார் தங்கமயில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X