Pandian stores 2: கோயிலில் சந்தித்துக் கொண்ட சரவணன் -தங்கமயில்.. ஜோடியாக பார்த்த பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் திருமண ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தினர் பேசுவதையும் செயல்படுவதையும் காணமுடிகிறது. திருமணம் குறித்த தங்கமயிலின் கனவை தன்னுடைய கனவாக குடும்பத்தினரிடம் கூறுகிறார் சரவணன்.

இதற்கு பாண்டியன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நினைக்கும் சூழலில் அவர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொள்கிறார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய சொல்கிறார். இதனால் சரவணன் மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 4th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய எபிசோடில் திருமணம் குறித்த தங்கமயிலின் விருப்பத்தை தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறுகிறார் சரவணன். பிரபலங்கள் தங்களது திருமணங்களில் செய்வது போல தன்னுடைய திருமணத்திலும் ஹல்டி, மெஹந்தி, ரிசப்ஷன் என அனைத்தும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாக தங்கமயில் சரவணனிடம் கூறுகிறார். இதையடுத்து இது குறித்து தன்னுடைய தம்பிகளிடமும் தொடர்ந்து தன்னுடைய தந்தையிடமும் பேசுகிறார் சரவணன்.

நிறைவேறும் தங்கமயில் கனவு: இதனால் அதிகமான செலவுகள் ஏற்படும் என்றும் ஏற்பாடுகளை செய்வது கடினம் இன்றும் கோமதி கூறுகிறார். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்று சிலர் இருப்பதாக கதிர் கூறும் சூழலில் தன்னுடைய மகன் சரவணனின் திருமணத்தில் இதையெல்லாம் செய்து அவரது திருமணத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பாண்டியனும் கூறுகிறார். இதற்கெல்லாம் செலவாகுமே என்று அனைவரும் கூறும் சூழலில் மூன்று மகன்களின் திருமணத்திற்காக தான் தனித்தனியாக காசு சேர்த்து வைத்ததாகவும் ஆனால் இருவர் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்ததால் அந்த பணம் தன்னிடம் உள்ளதாகவும் அதை சேர்த்து தன்னுடைய விருப்பத்திற்கு திருமணம் செய்யும் சரவணனுக்கு செலவு செய்ய உள்ளதாகவும் பாண்டியன் கூறுகிறார்.

மீனா நெகிழ்ச்சி: இதனிடையே ராஜி தங்களுக்கு செலவு செய்யவில்லை என்றால் என்ன தங்களிடம் அந்த பணத்தை கொடுத்து விடலாமே என்று வேடிக்கையாக பாண்டியனிடம் கேட்கிறார். அதற்கு பாண்டியனும் திருமணத்துக்கு என்று சேர்த்து வைத்த பணத்தை அதற்கு தான் செலவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறாக தங்கமயிலின் திருமணம் குறித்த கனவு நடக்க பாண்டியன் வழிவகை செய்கிறார். அனைவரது திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தையும் பாண்டியன் சரவணனுக்கு செலவழிப்பது குறித்து மீனா எதுவுமே கேட்கவில்லையே என்று செந்தில் கேள்வி கேட்க தான் அதற்கு மீனாவும் நெகிழ்ச்சியாக பதிலளிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்மகனின் தேவை: தான் அழுததற்காக தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவிடம் சென்று பேசி விட்டு வரும் அளவிற்கு அன்பான மாமியார் மற்றும் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனடியாக ஓடிவர காத்திருக்கும் சொந்தங்கள் நிறைந்த இந்த குடும்பம் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் இதற்காக தான் எதையும் செய்ய காத்திருப்பதாகவும் மீனா கூறுகிறார். செந்திலோ பதிலுக்கு மாமியாருக்காக நெகிழும் ஒரு மருமகள் மற்றும் மருமகளுக்கு ஒன்று என்றால் உடனடியாக ஓடிவரும் மாமியார் இதுபோன்ற உறவுகள் தான் ஒரு ஆண்மகனுக்கு குடும்பத்தில் தேவை என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

சரவணன் -தங்கமயில் மீட்டிங்: இதனிடையே முந்தைய நாள் காலில் அடிபட்ட கதிருக்கு தற்போது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக கதிர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது காலை தொட்டு பார்க்க முயற்சிக்கிறார் ராஜி. ஆனால் அவர் திரும்ப ராஜி தவறி விழ, கதிர் முழித்துக் கொள்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜி முழிக்க, என்ன ஆயிற்று என்று கதிர் கேட்க அங்கு மீண்டும் ரொமான்ஸ் படலம் நடக்கிறது. இந்நிலையில் மறுநாளும் தங்கமயிலை பார்க்க கோயிலுக்கு செல்கிறார் சரவணன். தன்னுடைய அப்பா திருமண ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த ஒப்புக் கொண்டதையும் அவர் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார்.

பாண்டியன் கண்ணில் சிக்கிய சரவணன்: இவ்வாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு பாண்டியன் மற்றும் பழனிவேல் இருவரும் அன்னதானம் குறித்து கேட்பதற்காக வருகின்றனர். அங்கு சரவணன் -தங்கமயிலை பார்த்து விடுகிறார் பழனிவேல். தொடர்ந்து பாண்டியனிடம், திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பேசுவது தவறா என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் வாழ்க்கை முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருக்க போகிறார்கள், இதில் எதற்கு திருமணத்திற்கு முன்பு வேறு பேச வேண்டும் என்று பாண்டியன் கூறுகிறார். அதற்கு நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் அவனுக்கு அது தெரியவில்லையே என்று சூசகமாக கூறிவிட்டு பழனிவேல், சரவணன் மற்றும் தங்கமயிலை சுட்டிக்காட்டுகிறார். அவர்களை பார்த்து பாண்டியன் திகைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X