Pandian stores 2: பஜ்ஜி ஓகே.. அது என்ன சொஜ்ஜி.. தங்கமயில் வீட்டில் செந்தில் -கதிருக்கு வந்த டவுட்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் துவங்கப்பட்ட சூழலில் தற்போது சேனலின் மூன்றாவது முன்னணி தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் திடீர் திருமணங்கள் காரணமாக மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியானது. இதையடுத்து தற்போது கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு தங்கமயில் என்ற பெண்ணை பார்த்து பாண்டியன் குடும்பத்தினர் இறுதி செய்கின்றனர்.
அவர்கள் நினைப்பதற்கு மாறாக அந்தப் பெண் படிக்காதவராகவும் அடாவடி பேர்வழியாகவும் இருப்பதை நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் வெள்ளந்தியாக குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நபர்களாக உள்ள சூழலில் அடாவடி பேர்வழியாக தங்கமயில், அந்த குடும்பத்தில் எப்படி பொருந்துவார் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும். இந்நிலையில் பாண்டியன் குடும்பத்தினர் மொத்தமாக சென்று தங்கமயிலை அவரது வீட்டில் சென்று பெண் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது, இதையொட்டிய சுவாரசியங்களை இயக்குனர் இன்றைய எபிசோடில் பதிவு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிருக்கு திருமணங்கள் முடிந்த நிலையில் மூத்தவர் சரவணனின் திருமணம் கேள்விக்குறியானது. புரோக்கர் மூலமாகவும், மீனா மூலமாகவும், பேப்பரில் விளம்பரம் கொடுத்தும், மேட்ரிமோனி மூலமாகவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் மேற்கொண்ட சூழலில் அவை அனைத்துமே கானல் நீரானது. தொடர்ந்து சரவணன் திருமணம் முடியும் வரையில் தன் காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் ஐம்பது நாட்களுக்குள் அவரது திருமணத்தை நடத்துவேன் என்றும் பாண்டியன் சபதம் ஏற்றார்.
சரவணன் திருமணம்: இந்நிலையில் கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. இதில் தங்கமயில் என்ற பெண்ணை பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் சரவணனுக்கு இறுதி செய்கின்றனர். அவர்கள் குடும்பம் குறித்து மிகவும் உயர்வான கருத்துக்களை பாண்டியன் கொண்டுள்ள சூழலில் அவர்கள் அதற்கு நேர் எதிராக காணப்படுவதை நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. அப்பா -அம்மா மட்டுமில்லாமல் தங்கமயிலும் அக்கம் பக்கத்தினரிடம் தொடர்ந்து பிரச்சினைகள் செய்வதையும் அடாவடியாக பேசுவதையும் அவர்களது சொந்தக்காரர்கள் யாரிடமும் அவர்கள் பேச்சுவார்த்தை வைக்காத சூழலும் காணப்படுகிறது.
தங்கமயிலுக்கு பிடிக்காத சரவணன்: இந்நிலையில் பாண்டியன், கோமதி, சரவணன், மீனா மற்றும் பழனிவேல் ஆகியோர் மட்டுமே கல்யாண வைபோகம் நிகழ்ச்சியில் தங்கமயிலை பார்த்த சூழலில் தற்போது அவர்கள் வீட்டிற்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்தினர் அனைவருடனும் பாண்டியன் தங்கமயில் வீட்டிற்கு இன்றைய தினம் செல்வதாக காணப்பட்டது. இதில் மூத்த மகள் குழலி மற்றும் அவரது கணவரும் சேர்ந்து கொள்கின்றனர். தங்கமயில் வீட்டில் தனக்கு சரவணனை சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவர் கூறும் நிலையில் தங்களது வீட்டில் சல்லி காசுகூட இல்லாத சூழலில் தங்கமயிலை யாரும் திருமணம் செய்ய முன் வராததை அவரது அம்மா பாக்கியம் சுட்டிக்காட்டுகிறார்.
பெண் பார்க்க சென்ற பாண்டியன் குடும்பத்தினர்: தங்கமயில் ஜாதகத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ள சூழலில், பாண்டியன் குடும்பத்தினர் ஜாதகம் பற்றி எதுவும் கேள்வி கேட்காததையும் பாக்கியம் சுட்டிக்காட்டுகிறார். இதனால் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் அவர்கள் வரும் நேரத்தில் அலங்காரம் செய்து கொண்டு தயாராகுமாறு கூறுகிறார். இந்நிலையில் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துக் கொள்கின்றனர். அப்போது குழலி, ஏன் தங்கமயிலின் உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்லும் தங்கமயிலின் அம்மா, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் வெளியூர்களில் இருப்பதாகவும் திடீரென சொன்னதால் அவர்களை வரவழைக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சமாளித்த தங்கமயில் அம்மா: உள்ளூரில் இருப்பவர்களை அழைத்துவிட்டு வெளியூரில் இருப்பவர்களை அழைக்காமல் விட்டால் அது மனக்கசப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். இதனிடையே தன்னுடைய அம்மா அடுத்தடுத்து பொய் சொல்லி எப்படி சமாளிக்கிறார் பார் என்று தங்கமயில் தன்னுடைய தங்கையிடம் கோபப்படுகிறார். இந்நிலையில் எப்போது பெண்ணை கண்ணில் காட்டுவார்கள் என்று செந்தில் மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா, முதலில் பஜ்ஜி -சொஜ்ஜி கொடுத்துவிட்டு அதன் பிறகு பெண்ணை காட்டுவார்கள் என்று கூறுகிறார். இதையடுத்து செந்தில் மற்றும் கதிர் இருவரும் சினிமாக்களில் கூட தாங்கள் பார்த்ததாகவும் பஜ்ஜி ஓகே சொஜ்ஜி என்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் மீனா இதெல்லாம் ஒரு ஃபிளோவில் வருவது தானே என்று கூறுகிறார். இவ்வாறாக இந்த எபிசோடில் தங்கமயில் வீட்டிற்கு பாண்டியன் குடும்பத்தினர் சென்று பெண் பார்ப்பதாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











