Pandian stores 2 serial: சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மீனா போராட வேண்டியிருக்கு.. வருத்தத்தில் செந்தில்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் கலகலப்பாகவும் சென்டிமென்ட்டாகவும் காணப்பட்டது. இன்றைய எபிசோடில் நள்ளிரவில் லைட் போடாமல் வரும் தங்கமயில், எதிரில் வரும் பழனிவேலை பார்த்து அலறியடிக்கிறார். இதையடுத்து பழனிவேலும் அலற, சத்தம் கேட்டு அங்குவரும் பாண்டியன் பழனிவேலை திட்டுவதாக காணப்பட்டது.
இதனிடையே செந்தில் கவர்மெண்ட் வேலைக்கு தயார் செய்வதற்காக ஆங்கில பேப்பரையும் சேர்த்து வாங்குமாறு மீனா பாண்டியனிடம் கேட்கிறார். ஆனால் அவரோ தண்ட செலவு எதற்கு என்று தட்டி கழிப்பதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. இதனால் மீனா முகம் வாடுவதாகவும் செந்தில் வருந்துவதாகவும் அமைந்திருந்தன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் கலகலப்பாகவும் அதே சமயத்தில் சென்டிமென்ட் அதிகமாகவும் காணப்பட்டது. இன்றைய எபிசோடில் நள்ளிரவில் தன்னுடைய அம்மாவுடன் பேசிவிட்டு வரும் தங்கமயில், எதிரில் போர்வை போர்த்தியபடி வரும் பழனிவேலை பார்த்து அலறி அடிக்கிறார். அதை பார்த்து பழனிவேலும் அலற, சத்தம் கேட்டு கதிர் மற்றும் பாண்டியன் இருவரும் அங்கு வந்து விடுகின்றனர். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று பழனிவேலிடம் பாண்டியன் கேள்வி கேட்க, பாத்ரூம் செல்வதற்காக வந்ததாக பழனிவேல் கூறுகிறார். இதையடுத்து அவரை பாண்டியன் திட்டுவதாக காணப்பட்டது.
மீனாவிடம் மாட்டும் செந்தில்: இந்நிலையில் அதிகாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் மீனா மற்றும் ராஜி சிரித்து பேசிக் கொண்டிருக்க, வாக்கிங் போய்விட்டு வரும் செந்தில் மீனாவிடம் மாட்டுகிறார். முதல் நாள் இரவில் தான் செந்திலுக்காக மெனக்கெட்டு கவர்மெண்ட் வேலைகளை லிஸ்ட் போட்டு கொடுக்க, அதை படித்துக் கூட பார்க்காமல் செந்தில் தூங்கிய கதையை மீனா, ராஜி மற்றும் கதிரிடம் புட்டு புட்டு வைக்கிறார். தூங்கியது ஒரு குற்றமா, இதற்கெல்லாம் இவ்வளவு தூரம் பேச வேண்டுமா என்று செந்தில் அங்கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே பழனிவேலும் அங்கு வர, முந்தைய நாள் இரவு நடந்த விஷயத்தை கூறி கதிர் அவரை கலாய்க்கிறார்.
மீனாவிற்கு பாண்டியன் மறுப்பு: இந்நிலையில் காலை வாக்கிங் சென்று விட்டு வரும் பாண்டியன், அனைவருக்கும் வடை வாங்கி வருகிறார். அதை சாப்பிடுவதற்காக அனைவரும் ஹாலில் கூட, சரவணனின் ட்ரெயின் டிக்கெட் உள்ளிட்டவை குறித்து பேசுகிறார் பாண்டியன். மேலும் தத்கலில் ட்ரெயின் டிக்கெட் புக் செய்ததால் அதிகமான செலவாகிவிட்டதாக பாண்டியன் கூறுகிறார். இதனிடையே, செந்திலின் கவர்மெண்ட் வேலைக்காக அவர் பேப்பர் படிக்க வேண்டும் என்பதால் ஆங்கில பேப்பரை வாங்குமாறு மீனா பாண்டியனிடம் கேட்கிறார். ஆனால் ஏற்கனவே தமிழ் பேப்பருக்கு 300 ரூபாய் மாதம் செலவாகுவதாகவும் அந்த பேப்பரையே யாரும் படிப்பதில்லை என்றும் இந்நிலையில் ஆங்கில பேப்பருக்கு எதற்கு தண்ட செலவு என்றும் பாண்டியன் கேள்வி எழுப்புகிறார்.
முகம் வாடும் மீனா: இதனால் மீனாவின் முகம் வாடுகிறது. தொடர்ந்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறும் மீனா, பர்மிஷன் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் கேட்கிறார். ஆனால் பாண்டியன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு செல்கிறார். இதனிடையே வீட்டு வாசலில் தன்னுடைய அண்ணன், தம்பி மற்றும் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கும் செந்தில் முகம் வாடியபடி இருப்பதை அவர்கள் கேள்வி கேட்கின்றனர். மீனா எப்படி வாழ்ந்த பெண், அவள் தன்னுடைய அப்பாவின் விருப்பப்படியே மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு சென்றிருந்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம், இங்கு ஒரு 300 ரூபாய் பேப்பருக்கு கூட ஆயிரம் கேள்விகள் கேட்கப்படுவதாக செந்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார். இதையடுத்து பாண்டியனின் குணம் தெரிந்தது தானே அதை நினைத்து கலங்காதே என்று பழனிவேல் அவரை சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











