Pandian stores 2 serial: எப்பவாவதுன்னா பரவாயில்ல.. திண்டாட்டத்தில் ஹனிமூன் ஜோடி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கியது. ஆனால் துவங்கிய சில தினங்களிலேயே இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது டிஆர்பியில் அதிகமான புள்ளிகள் பெற்று சேனலின் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை முன்னிலைப்படுத்திய சீரியல் டீம் தற்போது அப்பா -மகன்கள் உறவை பிரதானப்படுத்தி அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகின்றனர்.
முதல் சீசனில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஸ்டாலின் மற்றும் ஹேமா இந்த சீசனிலும் முதன்மை கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அப்பா பாண்டியனாக ஸ்டாலின் நடித்து வருகிறார். இதேபோல அவரின் மருமகளாக ஹேமா முதன்மையான கேரக்டரில் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறது. இந்தத் தொடரில் பாண்டியனின் மனைவி கோமதி கேரகடரில் பிரபல நடிகை நிரோஷா நடித்து வருவது சீரியலுக்கு அட்ராக்ஷனை கொடுத்துள்ளது. கணவனுக்கு அடங்கிய மனைவியாக அவரது எல்லா செயல்களுக்கும் ஆமாம் போடும் கேரக்டரில் நிரோஷா நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் முதன்மையான சீரியல்களில் ஒன்றாக, சேனலில் அதிகமான டிஆர்பியை பிடித்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். முதல் சீசனை போலவே இந்த சீரியலும் குடும்ப உறவுகளின் மேன்மையை எந்த வன்முறையும் இல்லாமல் அடுத்தடுத்த எபிசோட்களில் கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் சூழ்நிலைகளே பகைவனாக காட்டப்பட்டள்ளது. இந்த சீரியலில் மிகவும் கறார் பேர்வழியாக பாண்டியன் என்ற கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார். அவரது மனைவியாக, புருஷனுக்கு கட்டுப்பட்டவராக நிரோஷா நடித்து வருகிறார்.
கறாரான பாண்டியன்: தன்னுடைய மகன்களை தன்னுடைய கைப்பிடிக்குள் வைத்து வருகிறார் பாண்டியன். ஆனாலும் காதல் படுத்தும் பாட்டில் தன்னுடைய தம்பி கதிரின் துணையுடன் தான் காதலித்த மீனாவை அப்பாவிற்கு தெரியாமல் கரம்பிடிக்கிறார் செந்தில். இந்தத் திருமணம் ஏற்படுத்தும் பிரச்சினைகள், திருப்பங்கள் அடுத்தடுத்த எபிசோட்களாக தற்போது காட்டப்பட்டு வருகின்றன. தன்னுடைய மாமனார் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சாமியாடிக் கொண்டிருக்கும் தன்னுடைய கணவன் உள்ளிட்ட குடும்பத்தினரின் போக்கு மீனாவிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் புரிந்துக் கொள்கிறார்.
செந்தில் -மீனா ஹனிமூன் ட்ரிப்: தன்னுடைய பெற்றோர் தன்னை தன்னுடைய திருமணத்தை ஏற்காத நிலையில், தன்னுடைய மாமனார் மற்றும் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதை நினைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் மீனா. இருந்தாலும் சில தினங்கள், தன்னுடைய கணவனுடன் வெளியூர் செல்ல நினைக்கிறார். அதை தன்னுடைய மாமனாரிடம் அவர் சொல்ல, அவரோ, குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லும் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். உலகத்தில் இல்லாத நடப்பாக, குடும்பத்துடன் ஹனிமூன் செல்கிறது செந்தில் -மீனா ஜோடி. அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்கள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

தனிமை கிடைக்காத ஜோடி: தனியாக ரூம் என்று கிடைத்தாலும் தனிமையாக இருக்கும் சூழல் கிடைக்காமல் அவர்கள் ஏங்குகின்றனர். இதனிடையே ரோட்டோர கடையில் அனைவருக்கும் இரவு உணவு வாங்கிக்கொடுக்கும் பாண்டியனுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ள, செந்தில் -மீனாவிற்கு இதுவும் பிரச்சினையாகிறது. இந்நிலையில் தன்னுடைய கணவனுடன் பொழுதை போக்க முடியாமல், அடுத்தடுத்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் மீனா. இந்நிலையில் இரவிலாவது கணவனுடன் நேரத்தை செலவழிக்கலாம் என்ற அவரது நினைப்பில் மண் விழுகிறது.
எப்பவும் இப்படியா?: உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவனுக்கு துணையாக கோமதி இருக்க வேண்டிய சூழலில், தன்னுடைய நாத்தனார் அரசியுடன் தூங்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார் மீனா. இதனால் செந்தில் -கதிர் ஒன்றாக தூங்குகின்றனர். கொடைக்கானல் வந்தும் இணைந்து இருக்க முடியாத சூழலில் போன் மூலம் பேசுவதே அவர்களுக்கு ஆறுதலாக அமைகிறது. எப்பவாவது இப்படி என்றால் பரவாயில்லை, எப்பவுமே இப்படியா என்று இருவரும் மருகுகின்றனர். அடுத்தடுத்த அறைகளில் இருந்தபோதிலும் போன் மூலம் பேசி தங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











