கதிருக்கும் தனக்கும் FLAMES போட்டுப் பார்த்த ராஜி.. இவங்க லவ் ட்ராக் ஸ்பீட் எடுக்குதே!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு அடுத்தடுத்து வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து கணவன் சரவணனிடம் பஞ்சாயத்து செய்கிறார் தங்கமயில். ஆனால் அவர் ஒரு சிலதை கேட்டு விட்டு தூங்கி விடுகிறார். இதனால் தங்கமயில் ஏமாற்றம் அடைவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

இதனிடையே தன்னுடைய தம்பி கதிர் ராஜியை அவசரமாக திருமணம் செய்து கொண்டு வந்ததை அடுத்து எப்படி இருக்கப் போகிறார்கள் என்று தான் பயந்ததாகவும் ஆனால் தற்போது அவன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சரவணன் தங்கமயிலிடம் கூறுகிறார். இதே போல செந்திலும் கதிர் குறித்து மீனாவிடம் மகிழ்ச்சியுடன் பேசுவதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

Television Pandian stores 2 serial Vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சுவாரசியங்கள் நிறைந்ததாக காணப்பட்டது. மீனா ஸ்னாக்ஸ் வாங்கி வந்த விவகாரத்தை வைத்து சரவணனிடம் பஞ்சாயத்து வைத்துக் கொண்டிருந்த தங்கமயில், அவர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இனிமேல் ஸ்னாக்ஸ் வாங்கி வந்தால் எந்த பிரச்சினையும் செய்யாதே என்றும் அவர்கள் செய்து தரச் சொன்னால் செய்து கொடு என்றும் சரவணன் கூறுகிறார். இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் அவரது பேச்சுக்கு தலையை அசைத்து வைக்கிறார் தங்கமயில்.

அடுத்தடுத்து தங்கமயில் கேள்வி: இந்நிலையில் அடுத்ததாக ராஜிக்கு கதிர் டிரஸ் வாங்கி கொடுத்ததாகவும் இவ்வாறு கணவன் டிரஸ் வாங்கி கொடுத்தால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று அடுத்த பிட்டை போட்டு வைக்கிறார் தங்கமயில். இதை கேட்டு சந்தோஷப்படும் சரவணன், கதிர் திடீரென திருமணம் செய்து கொண்டதால் எப்படி வாழப் போகிறான் என்று தான் பயந்ததாகவும் ஆனால் தற்போது கல்லூரியையும் வேலையையும் சிறப்பாக செயது வருவதாகவும் பாராட்டு தெரிவிக்கிறார். இதையடுத்து சரவணனுக்கு சம்பளம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்புகிறார் தங்கமயில். அப்படி வந்தால் என்ன செய்வீர்கள் என்பதாக அடுத்தடுத்து தங்கமயில் கேள்வி எழுப்ப அதற்குள் சரவணன் தூங்கி விடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

கதிரின் பைக் பிரச்சினை: தன்னுடைய கணவனை கைக்குள் போட்டுக் கொள்ள அம்மா கூறிய விஷயங்கள் எதுவும் சரவணனிடம் வொர்க் அவுட் ஆகாத நிலையில் தங்கமயில் ஏமாற்றமடைகிறார். இந்நிலையில் மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து மீனாவும் ராஜியும் வாசலில் கோலமிடுகின்றனர். கடந்த சில தினங்களாக தங்கமயில் கோலம் இடுவதால் அவர் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாரா என்று ராஜி கேட்க பார்த்துக் கொள்ளலாம் என்பதாக மீனா சமாதானம் கூறுகிறார். தொடர்ந்து தற்போது தன்னுடைய நண்பனின் பைக்கை வைத்து புட் டெலிவரி செய்து கொண்டிருக்கும் கதிருக்கு அடுத்ததாக சிக்கல் வந்துள்ளதாகவும் அவருடைய நண்பன் பைக்கை திருப்பி கேட்பதாகவும் ராஜி வருத்தத்துடன் மீனாவிடம் கூறுகிறார்.

கதிர் -ராஜி லவ் டிராக்: கதிருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் ராஜி கூறுகிறார். இந்நிலையில் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண் ஹோம் டியூஷன் எடுப்பதற்கு ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ராஜி அதற்கு வேண்டுமென்றால் ட்ரை பண்ணலாம். என்றும் மீனா கூற தான் கண்டிப்பாக இதை செய்கிறேன் என்றும் முன்னதாக மாமாவிடம் அதற்கான பர்மிஷனை வாங்கி விடுகிறேன் என்றும் ராஜி உறுதியாக கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது. மேலும். தன்னுடைய அறையில் அமர்ந்துக் கொண்டு கதிர் வாங்கிக் கொடுத்த பேனாவில் எழுதும் ராஜி, முதன்முதலாக தனக்கும் கதிருக்கும் FLAMES போட்டுப் பார்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X