Pandian stores 2 serial: மனமொடிந்து வீட்டைவிட்டு போனாரா.. ராஜியை காணாமல் தேடியலையும் குடும்பத்தினர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கியது, இதன் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான டிஆர்பி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசனும் சேனலில் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடில் கதிர் மற்றும் ராஜியின் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தன்னால் அடி உதை மற்றும் அவமானப்படும் கதிரை அதிலிருந்து மீட்கும் முயற்சியில் தன்னுடைய தோழியுடன் இணைந்து ஈடுபடுகிறார் ராஜி.

தன்னுடைய பணம் மற்றும் நகையை தூக்கிச் சென்ற தன்னுடைய காதலன் கண்ணனை தேடும் முயற்சியில் தற்போது ராஜி ஈடுபட்டுள்ளார், கண்ணனை தேடி திருச்சிக்கு செல்கிறார்கள். அங்கு கண்ணன் குறித்த சில உண்மைகள் தெரியவருகின்றன. இதனால் அவர் வீட்டுக்கு வருவதற்கு தாமதம் ஆகிறது. இது குறித்து வீட்டிற்கு தகவல் கொடுப்பதும் கேள்விக்குறியான நிலையில் அவரைத் தேடி வீட்டில் உள்ள அனைவரும் வீதி வீதியாக அலைகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 5th March 2024 episode


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. திருமணத்தின் போது தன்னுடைய காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் ராஜி, அவரால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். தன்னுடைய அண்ணன் மகளை அந்த சூழலில் சந்திக்கும் கோமதி, தன்னுடைய மகன் கதிரின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார். ராஜியின் எதிர்காலத்திற்காகவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காகவும் ராஜிக்கும் கதிருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

கதிர் சந்திக்கும் குற்றச்சாட்டுக்கள்: இவர்களது திருமணத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் கோமதியின் அண்ணன் முத்துவேல் குடும்பத்திலும் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தற்போது எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தன்னுடைய அம்மாவிற்காக இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் கதிர், தன்னுடைய அப்பாவின் நிராகரிப்பையும் ராஜியின் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றச்சாட்டையும் அடுத்தடுத்து எதிர்கொள்கிறார். அனைவரையும் காப்பாற்றும் வகையில் தான்தான் அந்த பணத்தை செலவழித்து விட்டதாக அனைவரிடமும் கூறுகிறார்.

கண்ணனை தேடியலையும் ராஜி: இதனால் ஆத்திரமடையும் ராஜியின் அண்ணன் குமரன், கதிரை ஆள் வைத்து அடித்து விடுகிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இரு வீட்டாருக்கும் இடையில் சண்டையும் ஏற்படுகிறது. இதனிடையே தன்னுடைய காதலன் கண்ணன் தூக்கிச் சென்ற தன்னுடைய நகை மற்றும் பணத்தை மீட்டு, கதிரை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார் ராஜி, இதனால் கல்லூரிக்கு செல்லாமல் தன்னுடைய தோழியின் உதவியுடன் கண்ணன் குறித்த விசாரணையில் இறங்குகிறார். கண்ணன் வீட்டிற்கு சென்று விசாரிக்க, கண்ணன் திருச்சியில் இருப்பதாக தகவல் தெரிகிறது.

திருச்சியில் சிக்கும் ராஜி: இதையடுத்து தன்னுடைய தோழியை சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு, திருச்சிக்கு செல்கிறார் ராஜி. திருச்சியில் கண்ணனின் நண்பர்களிடம் விசாரிக்கிறார். இதனிடையே கண்ணன் துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது. இதனால் கண்கலங்கி அழும் ராஜி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு செல்ல முற்படுகிறார், ஆனால் திருச்சியிலேயே மாலை 5 மணிக்கு மேல் ஆனதால் வீட்டிற்கு செல்ல தாமதம் ஆகிறது. வீட்டில் யாருடைய நம்பரும் தனக்கு தெரியாமல் கண்கலங்குகிறார்.

அல்லாடும் பாண்டியன் குடும்பத்தினர்: இதையடுத்து உடனடியாக தன்னுடைய வீட்டிற்கு செல்ல முற்படுகிறார். இதனிடையே இரவு 7:00 மணிக்கு மேல் ஆனதால் கோமதி மிகுந்த வருத்தமடைகிறார். ராஜி வருத்தமடைந்து வீட்டை விட்டு வெளியேறினாரா என்ற கேள்வி அவருக்குள் எழுகிறது. இதையடுத்து அவரது மகன்கள் மற்றும் தம்பி, மீனா என அனைவரும் கோமதிக்கு சமாதானம் கூறுகின்றனர். தொடர்ந்து கதிர், செந்தில், சரவணனன், பழனி என ஆளாளுக்கு ஒருபுறம் ராஜியை தேடி அலைகின்றனர். இந்த விஷயம் பாண்டியனுக்கோ அல்லது முத்துவேல் குடும்பத்தினருக்கோ தெரிந்தால் என்னவாகும் என்று பீதியை கிளப்புகிறார் பழனி. இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது,


அடுத்தது என்ன நடக்கும்?: வீட்டிற்கு தாமதமாக வரும் ராஜியை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மீண்டும் ஏற்பார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படியே ஏற்றாலும் கண்ணன் குறித்து வீட்டினரிடம் பேச முடியாமல் ராஜி எப்படி சமாளிப்பார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கதிர் தான் காலையில் ராஜியை திட்டியதாக பழனி தன்னுடைய அக்காவிடம் கூறுகிறார். இந்தப் பழியும் தற்போது கதிரின் மீது வந்து விழுகிறது. அவரும் ஒரு புறம் ராஜியை தேடி விதி வீதியாக அலைகிறார். ராஜியை வெறுத்து ஒதுக்கும் கதிர், அவரது இந்த செயலால் அவர்மீது ஈர்க்கப்படுவாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X