Pandian stores 2 serial: ஓகே சொன்ன தங்கமயில்.. உற்சாகத்தில் பாண்டியன் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில மாதங்களிலேயே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் இயல்பான குடும்ப நிகழ்வுகளை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். அந்த வகையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த பாண்டியன் மற்றும் கோமதி, அவர்களின் மகன்கள், மகள்கள், பகைமை பாராட்டும் கோமதியின் அண்ணன்கள், உறவுகள் இல்லாத பாண்டியன் என அடுத்தடுத்த கேரக்டர்களை வைத்து இந்த சீரியல் அடுத்தடுத்த காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் செந்தில், கதிரின் திருமணங்களால் கேள்விக்குறியான சரவணனின் திருமணம் தற்போது நிச்சயிக்கப்பட உள்ளது. கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் தங்கமயில் என்பவரை சரவணனுக்கு பாண்டியன் குடும்பத்தினர் தற்போது நிச்சயித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் அவரை பாண்டியன், கோமதி, மீனா, சரவணன் மற்றும் பழனிச்சாமி மட்டுமே பார்த்த நிலையில், தற்போது அவரது குடும்பத்தையும் மணமகள் தங்கமயிலையும் பாண்டியன் குடும்பத்தினர் நேரில் சென்று பார்க்கின்றனர். அங்கு நடக்கும் சுவாரஸ்யங்களை கூறும் வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட் காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 6th April 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. சரவணனுக்கு நிச்சயிக்கப்பட்ட தங்கமயிலை பாண்டியன் உள்ளிட்ட சிலரே கல்யாண வைகோபம் நிகழ்ச்சியில் சென்று சந்தித்த நிலையில் தற்போது அவரது வீட்டிற்கு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று பெண் பார்க்கின்றனர். அவர்கள் வீட்டில் நடைபெறும் சுவாரசியங்களை மையமாகக் கொண்டு இன்றைய எபிசோட் காணப்பட்டது. அந்த வீடு மற்றும் அவரது அப்பாவின் பிசினஸ் உள்ளிட்டவை குறித்து பாண்டியன் குடும்பத்தினர் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கின்றனர்.

சமாளிக்கும் பாக்கியம்: அவர்களது கேள்விகளுக்கு அடுத்தடுத்து சமாளிக்கும் வகையில் பதில்களை கொடுக்கிறார் தங்கமயிலின் அம்மா பாக்கியம். அவரது இந்த நடவடிக்கை மீனாவிற்கு சந்தேகத்தை எழுப்புகிறது. பாக்கியம் தொடர்ந்து அடுத்தடுத்து பொய்களை கூறும் நிலையில் உள்ளே ரூமில் இருக்கும் தங்கமயில், இதையெல்லாம் கேட்டு பரிதவிக்கிறார். ஒரு கட்டத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் தனியாக அறையில் பேசிக்கொள்ளும்படி குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதில் கூச்சத்துடன் பேசத் தொடங்கினாலும் தங்க மயிலை அவ்வப்போது சரவணன் சைட் அடிப்பதை பார்க்க முடிந்தது.

Vijay TV s Pandian stores 2 serial today 6th April 2024 episode

ஓகே சொல்லும் தங்கமயில்: தனக்கு சரவணன் பிடிக்கவில்லை என்று முன்னதாக கூறிய தங்கமயிலும் சரவணனிடம் இயல்பாக அவருக்கு பிடித்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்கிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும் வெளியில் வருகின்றனர். அப்போது சரவணன் மற்றும் தங்க மயிலுக்கு இந்த திருமணத்தின் ஈடுபாடு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு தங்கமயில் முதலில் பதில் அளிக்காத சூழல் காணப்படுகிறது. இதனால் சரவணன் உள்ளிட்ட பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் டென்ஷன் ஆகின்றனர். ஆனால் ஒருவழியாக தங்கமயில், சரவணனை பிடித்துள்ளதாக தலையசைக்கிறார்.

பாண்டியன் குடும்பத்தினர் உற்சாகம்: இதையடுத்து பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகம் அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தங்க மயிலின் வீட்டில் ஒரு சேர்கூட இல்லாத சூழ்நிலையில் அவரது அப்பாவிற்கு மூன்று பிசினஸ் இருப்பதாகவும் பக்கத்தில் லேண்ட் வாங்கிப் போட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து பாக்கியம் அளந்து விடுகிறார். இவையனைத்தும் பொய் என்று தெரிய வரும்போது என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரவணனின் திருமணத்தை நிறுத்த சக்திவேல் மற்றும் குமரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் சூழலில், அவர்களிடமிருந்து தப்பித்து சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் எப்படி நடக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X