எனக்கு வாழவே பிடிக்கலை.. கிளம்பி நம்ம வீட்டுக்கே வந்துடுறேன்.. அம்மாவிடம் கண்கலங்கிய தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக காணப்பட்டது. தன்னுடைய மனைவி ராஜி போட்டுப் பார்த்த FLAMESல் லவ் என்று வந்ததை பார்த்து உற்சாகமடைகிறார் கதிர். தொடர்ந்து இனிமேல் வீட்டிற்குத்தான் வந்து சாப்பிட வேண்டும் என்று கண்டிப்புடன் பாண்டியனிடம் கூறுகிறார் கோமதி.

இதனால் பாண்டியன் முதலில் தயங்கினாலும் பின்பு கோமதி கூறியதை கேட்டு ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து அன்றைய தினம் தன்னுடைய மருமகள் தங்கமயில் பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லக்கூடாது என்பதையும் உறுதியாக கூறி, அவரை தடுக்கிறார் கோமதி. இதனால் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் கால் செய்து அழுகிறார்.

Television Pandian stores 2 serial Vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சிறப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. இன்றைய எபிசோடில் தன்னுடைய மனைவி ராஜி, தான் வாங்கிக் கொடுத்த பேனாவில் நோட்டுப் புத்தகத்தில் FLAMES போட்டுப் பார்த்ததை பார்த்து சந்தோஷப்படுகிறார் கதிர். இதனிடையே, பாண்டியன் வேலைக்கு கிளம்பும்போது அங்குவரும் கோமதி, இனிமேல் கடைக்கு தங்கமயில் சாப்பாடு கொண்டுவர மாட்டார் என்று கண்டிப்புடனும் உறுதியுடனும் கூறுகிறார். பாண்டியன் இதற்கு தயக்கம் காட்டும் நிலையில், புது மருமகள் கடைக்கு வந்தால் கண்ணு பட்டுவிடும் என்று கோமதி சமாளிக்கிறார்.

கோமதி கையிலெடுத்த ஆயுதம்: இதனிடையே, வழக்கம்போல தங்கமயில் சரவணன் மற்றும் பாண்டியனுக்கு கேரியரில் சாப்பாடை எடுததுக் கொண்டு கிளம்புகிறார். இதையடுத்து அவர் சரவணனுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துச் சென்றால் போதும் என்றும் கடைக்கு எடுத்து செல்லக் கூடாது என்றும் கோமதி தடுக்கிறார். ஆனால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் சமாளித்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்ப, ஆத்திரமடையும் கோமதி, அவரை ஆத்திரத்துடன் அழைத்து, பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பெரிய கேரியரை அங்கேயே எடுத்து வைத்துவிட்டு போ என்றும் தன்னுடைய மாமியார் ஆயுதத்தை பிரயோகிக்கிறார்.

வாழவே பிடிக்கவில்லை: இதையடுத்து அவரும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார். வழியில் தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் நம் வீட்டிற்கே வந்து விடுகிறேன் என்றும் கூறி அழுகிறார். தன்னுடைய மாமியார் அனைத்திற்கும் தன்னை திட்டுவதாகவும் தற்போது மாமனாருக்கு சாப்பாடு எடுத்துச் செல்லாமல் தன்னை தடுத்துவிட்டதாகவும் தங்கமயில் கூற, தான் உடனே அங்கு வந்து பேசுகிறேன் என்று பாக்கியம் கூறி அவரை சமாதானம் செய்கிறார். இதையடுத்து உடனே பாக்கியம் மற்றும் தங்கமயிலின் அப்பா இருவரும் அங்கே வருகின்றனர்.

கோமதியின் கெத்து: இதையடுத்து மதிய உணவுக்கு வீட்டிற்கு வரும் பாண்டியனிடம், இந்த வெயிலில் ஏன் வந்தீர்கள், தங்கமயில்தான் சாப்பாடு கொண்டுவருவாளே என்று ஒன்றுமே தெரியாதது போல பேசுகிறார் பாக்கியம். தொடர்ந்து கோமதியிடம் சாப்பாடு கொண்டு செல்வதை தடுக்க வேண்டாம் என்றும் பாக்கியம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் சரவணன் மற்றும் தங்கமயிலின் ஹனிமூன் குறித்தும் பாண்டியனிடம் கேட்கிறார். அவர் அடுத்த மாதத்தில் அனுப்பி வைப்பதாக கூறுகிறார். இதனிடையே, அவர்கள் சென்ற பின்பு, இனிமேல் வீட்டிற்கு வந்துதான் சாப்பிட வேண்டும் என்பதை மீண்டும் உறுதியுடன் கோமதி பாண்டியனிடம் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் அமைந்திருந்தது. அவரது கெத்தை பார்த்து மீனா மற்றும் ராஜி பாராட்டுவதாகவும் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X