Pandian stores 2 serial: கோமதியை அழவைத்த சரவணன்.. அதிர வைத்த கதிர்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. குடும்ப உறவுகளையும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோடுகளை ஒளிபரப்பு செய்து வரும் சூழலில் புதிதாக திருமணம் செய்துகொண்டு பாண்டியன் வீட்டுக்கு வந்துள்ள தங்கமயில் தன்னுடைய மாமியாரிடம் இருந்து முதல் நாளிலேயே அதிகாரத்தை அபகரிக்க அடுத்தடுத்த வேலைகளை இழுத்து போட்டு செய்கிறார்.

இதனால் கோமதி இத்தனை நாட்களாக தன்னுடைய ராஜ்ஜியத்தில் இருந்த குடும்ப நிர்வாகம் மற்றும் சமையலறை கைநழுவி போவது குறித்து மிகுந்த ஆத்திரம் அடைகிறார். அதற்கு தான் எப்போதும் அனுமதிக்க போவதில்லை என்று ராஜி மற்றும் மீனாவிடம் அவர் அங்கலாய்ப்பதாக காணப்படுகிறது. இதனிடையே சரவணன் மற்றும் கதிரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அவரை பாதிப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்து இருந்தது. சரவணனுடன் திருமணமாகி பாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளார் தங்கமயில். வந்த மறுநாளே அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து தன்னுடைய மாமனாரை இம்ப்ரஸ் செய்த தங்கமயில் அடுத்ததாக மாமியாரையும் அந்த கேட்டகிரியில் கொண்டுவர அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனிடையே அடுத்த நாளும் அதே போல காலையில் எழுந்து கோலம் போட்டு சாமி கும்பிட்டு என அடுத்தடுத்த வேலைகளை செய்கிறார்.

கோமதியை கடுப்பேற்றிய தங்கமயில்: காலை எழுந்து சாமி கும்பிட வரும் கோமதி, முன்னதாகவே பூஜை வேலைகளை தங்கமயில் செய்ததை பார்க்கிறார். தொடர்ந்து அவருக்கு டீயும் போட்டு வைத்துள்ளதாக தங்கமயில் கூறுகிறார். இதையெல்லாம் அவர் ஏன் செய்கிறார், தானே செய்துக் கொள்வேன் என்று கோமதி கூற, இனிமேல் நீங்கள் சமையலறை பக்கமே வரக்கூடாது, நீங்கள் ஹாலில் ஓய்வெடுக்க வேண்டும், சமையலறை என்னுடைய டிபார்ட்மெண்ட் என்று தங்கமயில் கூறுகிறார். இதனால் கோமதிக்கு மிகவும் சங்கடமாக போகிறது. இதுநாள் வரை தன்னுடைய ராஜ்ஜியத்தில் இருந்த சமையலறை தற்போது வேறு ஒருவருக்கு கைமாறுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.

கோமதி புலம்பல்: இது குறித்து மீனாவிடம் அவர் தொடர்ந்து புலம்புவதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதற்கு பதிலளிக்கும் மீனா, இதுநாள் வரை கஷ்டப்பட்டது போதும், இனிமேலாவது டூர், கோயில், குளம் என ஜாலியாக சுற்றுங்கள், உங்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் தன்னுடைய குடும்பத்தினருக்கு தான் அனைத்தையும் செய்வேன் என்பதில் கோமதி உறுதியாக நிற்கிறார். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் மீனா தவிக்கிறார். இதனிடையே தங்கமயிலை அழைத்துக் கொண்டு சரவணன் கோயிலுக்கு கிளம்புகிறார்.

கோமதியை அழவைத்த சரவணன்: தன்னுடைய அப்பாவிடம் கூறிவிட்டு சரவணன் கிளம்பும் நிலையில் அம்மாவிடம் சொல்வதற்காக அவரை தேடுகிறார். அவர் மொட்டை மாடியில் இருப்பதாக கூறும் பாண்டியன், தான் கூறிக் கொள்வதாக சரவணனை அனுப்பி வைக்கிறார். இதையடுத்து தன்னிடம் கூறாமல் எங்கும் செல்லாத தன்னுடைய மகன், கோயிலுக்கு சென்றதை கோமதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மீனா மற்றும் ராஜியிடம் தன்னுடைய புலம்பலை மீண்டும் துவங்குகிறார். மேலும் வீட்டிற்குள் வந்து அது குறித்து நினைத்து அழுகிறார், அவரைத் தேற்றும் ராஜி மற்றும் மீனா தங்களின் சப்போர்ட் அவருக்குத்தான் என்று உறுதியுடன் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

கதிர் நடவடிக்கையால் அதிர்ச்சி: வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்க, அங்கு வரும் கதிர் தன்னுடைய அப்பாவிடம் 6 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டுகிறார். எதற்காக என்று கோமதி கேட்க, தன்னையும் தன்னுடைய மனைவியையும் யாரும் இனிமேல் தண்டம் என்று கூறக்கூடாது என்று அவர் முன்னதாக பாண்டியன் திட்டியதை சுட்டிக் காட்டுகிறார். அப்பா கோபத்தில் கூறியதாக கதிரை கோமதி சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து ஆத்திரப்படும் பாண்டியன், கோமதியிடம் ஒரு வீட்டில் இருவர் தங்கி சாப்பிடுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்பதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X